புகழ் வாய்ந்த கலை இலக்கிய மணம்
கமழும் கலைமகள் இதழில் –
தீபாவளித் திருநாள் மலரில்
நான் எழுதிய கட்டுரை
பலர் மனத்தைக் கவர்ந்தது .
இனிய கட்டுரையைப்
பெற்று வெளியிட்ட பெருமை கொண்ட
கலைமாமணி ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
அவர்களைப் பாராட்டுகிறோம் .
கட்டுரையை நண்பர்கள் படித்த மகிழ்ச்சியோடு
பதிவு செய்கிறேன்.
===============================================
திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்
===============================================
பழங்காலத்தில் பண்ணிசை, மக்கள் வாழ்வோடு ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதாக ஊறியமைந்ததை அகநானூற்றுப் பாடல் காட்டும்.
“கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவறு பனுவல்
தொல்லிசை நிறீய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே”
(அகம்) 352: 12-17.
என்பது அஞ்சி அத்தைமகள் நாகையார் பாடல்.
அன்றன்று புதுமையும், ஆரா மகிழ்வும் தந்து நன்றென்று நாளும் நினையும் களிப்புக்குரிய இல்வாழ்க்கையை நடத்தும் தலைவியொருத்தி, திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னர், தன்னெஞ்சுகந்த காதலன் காட்டிய அன்பு, தலைநாள் அன்பினும் நாளும் வேளையும் தழைத்துச் செழிப்பதை உணர்த்தி இந்த உவமையை நாகையார் உரைத்தார்.
சமயத்துறையில் இசை –
இலக்கியம் மட்டுமின்றி சமயத்துறையிலும் தமிழர்கள் இசைக்கலையைப் பெரிதும் போற்றி வளர்த்தனர். இறைவனை ஏழிசையாகவும் இசையின் பயனாகவும் கண்டு வழிபட்டனர். தமிழோடு இசை கேட்கும் பெருவிருப்பினனாக இறைவன் விளங்குகின்றான் என்றே தேவார நால்வர்கள் பண்சுமந்த பாடல்களைப் பாடிப் பரமனை மகிழ்வித்ததோடு பத்திமையுணர்வையும் மக்களிடையே பரப்பினர்.
உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில், 136 நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், தாங் கள் வாழுகின்ற நாடுகளில் தமிழ்ச் சங்கங் களைத் தோற்றுவித்து, அவற்றின் வாயிலா கத் தமிழ் சார்ந்த விழாக்களையும் நிகழ்ச்சி களையும் நடத்தித் தங்களுக்கும் தங்களது தாய்மொழியான தமிழுக்கும் உள்ள மரபு றவை உயிர்ப்போடு தக்கவைத்துக் கொள் கின்றனர். புலம் பெயர்ந்து வாழுகின்ற கோடிக்கணக்கான நமது தமிழர்களின் இது போன்ற செயல்பாடுகள் அவசியமானதும், தவிர்க்க முடியாததும், தமிழ் இனம் மொழி என்னும் அடையாளச் சிறப்புகளை அவர்க ளுக்குச் சேர்க்கக்கூடியதும் ஆகும்.
தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட் டிலும் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப் புகள் கடந்த அரை நூற்றாண்டுக் காலத் தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன, இன்றள வும் தொடர்ந்து நடத்திக்கொண்டும் இருக் கின்றன. நமது தமிழறிஞர்களும், பல்வேறு வகையான சொற்பொழிவாளர்களும், வர லாற்று ஆய்வாளர்களும் தமிழ்நாட்டிற்குள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடு களுக்குப் பயணித்தும் தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் தமிழ் மொழி, தமிழர் வரலாறு தொடர்பான அரிய ஆய்வு நூல்கள் நூற் றுக்கணக்கில் வெளியிடப்படுகின்றன. அவ் வகையான நூல்கள் தருகின்ற அறிவார்ந்த பயன்களை மறுக்க முடியாது. அதுபோ லவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதவித மான தமிழ் விழாக்கள், நமது தொன்மை யான மரபின் மேன்மைகளை நினைவூட்டுகின்ற வகையில் அமைந்து, பார்வையாளர்களின் தமிழுணர்வுக்கு வலிமை சேர்க்கின்றன என்பதையும் மறக்க முடியாது.
தமிழ் மொழி என்பது மொழியாக மட்டுமன்றி இசைக்குமாக வழங்கப்பெறும் அளவிற்கு இசைத்தமிழ் தனித்தன்மையுடையது. இசை கலைகளுள் தொன்மையானது. இசையானது எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடும் ஏதோவொரு வகையில் தொடர்புடையதாக உள்ளது. இந்த இசையானது நாட்டுப்புற இசையாகவோ. கர்நாடக இசையாகவோ, மேற்கத்திய இசையாகவோ, சினிமா இசையாகவோ, பக்தி இசையாகவோ இருக்கலாம். இசையானது பல்வேறு இராகங்களின் அடிப்படையில் அமைகிறது. பாவோடு நிறத்தினை(இராகத்தினை) இசைத்தலால் இசையெனப்பட்டது.
பண் என்பதனை இக்காலத்தில் இராகம் என்றழைக்கின்றோம். யாழினின்று பண் பிறந்ததால் பண் என்பது யாழ் எனவும் பெயர் பெற்றது. தமிழர் இசை, சுர அலகுகளினின்று உருவாக்கப்பட்ட நாற்பெரும் பண்ணையும், அவற்றினின்று பெயர்த்துக் கொள்ளப்பெற்ற ஏழ்பெரும் பாலைகளையும், பன்னிரு பாலைகளையும், அவற்றினின்று உருவான நூற்று மூன்று பண்புகளையும், கிளைப் பண்புகளையும், நரப்படைவால் (பண்ணின் சுர அடைவு) உரைக்கப்பட்ட 11,991,ஆதியிசைகளையும் கொண்டது. தற்காலத்தில் அடிப்படை இராகங்களை ஜனக இராகங்கள்(மேளகர்த்தா இராகங்கள்) என்றும், கிளைப்பண்களை ஜன்ய இராகங்கள் என்பர். இராகங்களின் எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் ஆகலாம்.
ஏழு சுரங்கள்
பழந்தமிழ் மக்கள் ஏழு சுரங்களை குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க) உழை(ம), இளி(ப), விளரி(த), தாரம்(நி) என்று அழைத்தனர். ஓர் இயக்கில் (ஸ்தாயி) உள்ள சுரங்கள் ஏழாகும். இயக்கு மெலிவு, சமன், வலிவு என மூன்று வகைப்படும். ஏழு சுரங்களில் குரலுக்கும்(ச), இளிக்கும்(ப) பேதம் கிடையாது. மற்ற ஐந்து சுரங்கள் ஒவ்வொன்றிற்கும் நிறை குறை என்ற இரண்டு பேதங்கள் உள்ளன. ஆக ஓர் இலக்கில் மொத்தம் பன்னிரு சுரநிலைகள் நிருத்தி வட்டபாலையில் பண்களை பெறமுடியும்..
ஏழ்பெரும் பாலைகள்
பாலை என்ற சொல்லுக்குப் பகுக்கப்பெறும் பண் என்று பொருள். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலப் பகுப்பே தமிழக இயற்கையாதலின் நான்கு நிலத்திற்கும் நான்குப் பண்கள் என தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நான்கு நிலத்திற்கும் உரிய பண்கள் முறையே செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை என்பன. இவற்றோடு செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழ்பெரும் பாலைகள் என்ற ஏழு பண்கள் அக்காலத்தில் இருந்தன எனச் சிலப்பதிகார காப்பியத்தின் வழி அறியலாம். ஒரு பண்ணுக்குரிய சுரவீடுகளை (நரப்படைவு) மாற்றியமைப்பதால் வேறொரு பண் கிடைக்கிறது. இவ்வாறு ஒவ்வொன்றிலிருந்து ஒன்றாக வட்டப்பாலையில் பண்ணுப் பெயர்த்து ஏழு பாலைகள் உண்டாயின என்பதனை அடியார்க்கு நல்லார்,
“வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலமாகும்” (சிலம்பு.ஆய்ச்சி.13.8) என்று குறிப்பிடுகின்றார்.
சிலப்பதிகாரத்தின் இசைக் குறிப்புகள் இல்லாது போயின் ஆதி இசை தமிழிசையே என்று சத்தியப்படுத்தும் சான்றுகள் இல்லாது போயிருக்கும். பழம்பண்கள் தமிழில் இருந்தன. அவை தமிழ்ப் பெயர்களையே சூடியிருந்தன. இந்திர விழவூரெடுத்த காதையில்
“குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபு” என்ற குறிப்பு கோலோச்சுகிறது.
அந்தக் குரல் முதல் ஏழும்’ என்பன யாவை? அவை பிறந்த வழியாவது யாது? சுற்றுச்சூழலோடு ஒட்டி வாழ்ந்த கூட்டம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் – விலங்குகளையும் பறவைகளையும் தங்கள் வாழ்வின் அங்கங்கள் என்று உணர்ந்திருந்த தமிழச்சாதி, இயற்கையிலிருந்தே இசையை இழை பிரித்திருக்கிறது. குரல் – துத்தம் — கைக்கிளை – உழை – இளி – விளரி – தாரம் என்ற எழுவகைத் தமிழ்ப் பண்களையும் தமிழர் எங்கிருந்து எடுத்தார் என்பதே நம் இனத்தின் தொன்மைக்குச் சான்று காட்டும் தொல்லடையாளமாகும்.
வண்டின் ரீங்காரத்திலிருந்து பிறந்தது குரல்; அதுவே சட்ஜமமாயிற்று. கிளியின் மிழற்றலில் பிறந்தது துத்தம்; அதுவே ரிஷபமாயிற்று. குதிரையின் கனைத்தலை ஒத்தது.கைக்கிளை;
அதுவே காந்தாரமாயிற்று. யானையின் பிளிறல் போன்றது உழை; அதுவே மத்திமமாயிற்று. மயிலின் அகவல் போன்றது இளி; அதுவே பஞ்சமமாயிற்று. பசுவின் கதறலில் பிறந்தது விளரி; அதுவே தெய்வதமாயிற்று.
ஆட்டின் கத்தலில் பிறந்தது தாரம்; அதுவே நிஷாதமாயிற்று. “வேண்டிய வண்டும் மாண்டகு கிளியும் குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை” என்ற பிங்கல நிகண்டு இதையே உறுதி செய்கிறது.
‘சரிகமபதநி’ என்ற ஏழும் வெறும் குறியீடுகள் என்றே வடநூலாசான்கள் சிலரும் ஒப்புவர். ஆனால், உயிரெழுத்துக்களின் ஏழு நெட்டெழுத்துக்களைக்கொண்டே ஆதித் தமிழிசை இயங்கியிருக்கிறது.
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய” என்ற சேந்தன் திவாகரம் இந்த உண்மைக்கு உறுதியூட்டும்.
‘பண்ணமை முழவு’ என்பதும் “யாழும் குழலும் ஏங்கிய மிடறும்” என்பதும் இளங்கோவடிகளால் அரங்கேற்று காதையில் ஆளப்பெறுகின்றன. தோற்கருவி – முழவு; துளைக்கருவி – குழல்; நரம்புக்கருவி – யாழ். இந்த முக்கருவிகளும் தமிழ்க் கருவிகளே. இந்த மூன்று கருவிகளின் பெயர்களிலும் தமிழுக்கே உரித்தான சிறப்பு ‘ழ’கரம் பயின்று வருவதொன்றே அதற்குச் சான்று.
காலந்தோறும் என்ன கணந்தோறும் உலகமும் வாழ்வும் மாற்றங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன .
இறந்த காலம் ,நிகழ் காலம் ,எதிர்காலம் ,என்ற நிலையையும் கடந்து நிகழ்காலத்தையே இக்காலம் ,தற்காலம் ,
இசைக்கருவிகள் உழலும் ,யாழும் ,முழவும் என்றுதான் குறிப்பிட்டார்கள்.
பிரிக்க முடியாத இசைக்கருவியாக அயல்நாட்டு கருவியான பிடில் ,வயலின் கருவி இல்லாத இசையே இல்லை.
இசை பெரிதா – இசைக்கருவிகள் பெரிதா என்று சொல்ல முடியவில்லை .
ஆர்மோனியப் பெட்டியோடு இசைந்து இப்போது ஆயிரம் இசைக்கருவிகள் தாண்டி இளையராஜாவும் ,ரகுமானும் ஏற்றம் பெற்றிருக்கிறார்கள் .
பாடல் தேவையில்லை பத்து இசைக்கருவிகள் இருந்தால் போதும் ஏழு எட்டு சொற்களை இணைத்தால் போதும் என்ற காலம் வந்துவிட்டது .
நல்ல இசை காதுக்கு இன்பம் தருவது மட்டுமல்ல .கால் தட்டுக்கும் இசைய வேண்டும்.
அமர்ந்து திரிந்த காலம் பொய் அலைந்து திரிந்து ஓடி ஆடி பாடவேண்டும் என்று காலம் மாறியிருக்கிறது.
இசை இல்லாத வாழ்வில்லை .
இதயத்தினுடைய லப் – டப் ஓசையே கூட இசை தான்
காற்றின் திசைகளில் கடலின் அலைகளில் காது கொடுத்தால் இசை கேட்கும்.
காற்று வீசினாலேயே இசை பிறக்கிறது என்று பொருள்.
‘ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’
மனதை பறி கொடுத்தேன் பாவியேன்
இதில் பண்டைய தமிழிசைச் சங்கம், இசைக் கருவிகள், கலைஞர்கள் அவர்தம் திறம், நிலத்துக்கேற்ற பாட்டு, பண், என இசைநூல்கள் கடல் கோள்களில் மறைந்தன.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் ஒரே இசை முறை தான் நிலவி வந்திருக்கிறது. அது தான் தமிழ்நாட்டு இசை முறை. அது தான் இன்று கர்நாடக இசை என இன்று வலம் வருகிறது. சர் ஜான் மார்ஷல் என்ற ஆங்கிலேயரின் சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் அடிப்படைச் செய்திகள் நம் தமிழிசையை நிறுவுகின்றன. மொகஞ்சதாரோ, அரப்பாவில் வெண்கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்டுள்ள நடனப் பெண்ணின் சிற்பம் வியக்கத் தக்கதாகும். சிந்துவெளித் தமிழர்கள் இசையிலும் நடனத்திலும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே கடைக்கோடி தமிழர்கள் இசையில் மிகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே தமிழிசையே தரணியில் தோன்றிய முதல் இசை என்று துணிவுடன் கூறலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு வகை நிலத்தில் ஒவ்வொரு வகை யாழும், ஒவ்வொரு வகை பறையும் இருந்துள்ளன என்றதின் மூலம் 20,000 ஆண்டுகள் முற்பட்ட முதல் தமிழ் சங்க காலத்திலேயே இவை இருந்தன என்பதை என்ப என்ற சொல் சுட்டிக் காட்டுகின்றது. தொல்காப்பியத்தில் இயலுக்கும், இசைக்கும் இலக்கண சூத்திரங்கள் ஒன்றாக உள்ளன. சான்றாக, தமிழ் நெடில் எழுத்துக்கள் ஏழும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள என்பன தமிழ் இசைக்குரிய ஏழு சுரங்களாகும். இவற்றை விதவிதமாகப் பண்ணிப் பாடியதால் அதனை பண் என்றனர். இவையே பின்னால் மாறி ‘சரிகமபதநி’ என்று மாறின. பின்னால் வந்த சாம வேதம் முதலில¢ 3 சுரங்களில் பாடப்பட்டன. பின் இதுவே 6 ஆக மாறியது. அதுவும் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் தான் என்பது செய்தி.
‘அடியார்க்கு நல்லார்’ சிலப்பதிகார உரை மூலம் நமக்கு பழந்தமிழ் இசை பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. புறநானூற்றில் பல இடங்களில் தமிழிசைச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பதலை, பதலா என மாறி தபலா என்று நின்றது. இளங்கோவடிகள் தமிழிசை -தொன்முறை இயற்கை ஆகும் என்கிறார். சிலப்பதிகாரத்தில் பெறப்படும் முக்கியமான தமிழிசைச் செய்திகளின் தொகுப்பை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக அளித்துள்ளார். அவற்றில் சில
• பழந்தமிழ்ப் பண்களின் எண்ணிக்கை 11,191.
• திருவிளையாடற் புராணத்தில் இசைவாது வென்ற படலத்தில் தமிழிசையின் முழு வீச்சைக் காணலாம். ஈழ நாட்டு பாடினிக்கும் பாண பத்திரன் மனைவியாகிய விறலிக்கும் இடையே நடந்த போட்டியில் தமிழிசை தெய்வ இசையே என்று உறுதிப்படுகின்றது.
• தமிழிசை அனைத்து ஆன்மாக்களையும் சுண்டி எழுப்புகிறது.
• வெற்றி பெறும் இசையில் இலக்கணத்தின் வீச்சை உணர முடியும்.
• யானை, பாம்பு இசை நயத்தில் ஈடுபட்டனவாகும்.
• குறிஞ்சிப்பண் மழைக்குரியது.
• விடிகாலைக்கு மருதப்பண், மாலைக்குச் செவ்வழிப் பண் (நடுநிசிக்கு யாம யாழ்) என பொழுதிற்கு ஒரு பண்ணை நாம் பார்க்கலாம்.
• வழிப்பறி கள்வர்களை மயங்கச் செய்வது பாலைப்பண்.
• வீர மரணமடைந்தவர்க்கு விளரிப்பண் (இரங்கற்பா)
• பிள்ளை பெற்ற தாய்மார்க்கு உடல் உரமிட செவ்வழிப் பண்
• தரணிமிசை தோன்றிய முதலிசை தமிழிசையே என்பதை குழல், யாழ், முழவு என்ற அடிப்படை சான்றுகளால் உணரலாம்.
• இசையை 8 வகையாகப் பண்ணிப் பாடுவதால் பண் என்றாயிற்று.
• ஐந்தொகை பெயர் மாற்றப்பட்டு பஞ்ச மரபாயிற்று.
• சரிகமபதநி – இவை தமிழிசைக் குறியீடே என்று பழைய நூல்கள் விளம்புகின்றன. சாரங்க தேவர் 12-ஆம் நூற்றாண்டின் செய்த மொழி மாற்றம், மூலமாற்றம் பெரும் புரட்டு எனலாம்.
• இசை என்பது ஒலியுடன் மட்டும் தொடர்புடையதன்று. ஐம்பூதங்களோடு தொடர்புடையது என்று பஞ்சமரபு ஆய்ந்துரைக்கின்றது. தமிழிசை இலக்கணம் பஞ்ச மரபு என்றால் தேவார திருமுறைகள், தமிழிசை இலக்கியங்களாக இன்றும் வலம் வருபவை. இவை பழந்தமிழ்ப் பண்களுக்கு உயிர் கொடுத்தவை ஆகும். கருநாடகச் சங்கீதம் என்ற சொல்லாட்சியே 18ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் ஏற்பட்டது.
• தமிழிசைப் பண்களைக் காலத்தால் தூக்கி நிறுத்தியவை பன்னிரு திருமுறைகளே. இசைத்தமிழ் என்பது இறைவன் மானுட உலகிற்குக் கொடுத்த இணையற்ற வரம்.
• தேவாரப் பண்களில் பகலில் பாட வேண்டிய பண்கள், இரவில் பாட வேண்டியவை, பொதுப்பண்கள் என வகை பிரித்துப் பாடப்பட்டுள்ளன. எந்த நேரத்தில் எந்தப் பண்ணைப் பாடினால் அது இனிக்கும் சிந்தையைக் கிளரும் என்று தமிழர்கள் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.
• எந்தப் பண்ணுக்கு எந்த இராகம், இந்த இராகத்திற்கு இந்தப் பண் என்று பிற்காலத்தில் வேற்றிசை வாணர்க்கும் நம் ஓதுவார்க்கும் ஏற்பட்ட குழப்பம், நம் தமிழிசைக்கு நேர்ந்த சோதனை என்ற ஆசிரியரின் பார்வை அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பிற்கால தலைகீழ் மாற்றத்தை நாம¢ சரி செய்ய வேண்டும். இயற்கையோடு இயைந்த தமிழிசை நிலம், பொழுது, பருவம் இவற்றுடன் ஒத்துச் செல்வது ஆகும்.
• எனவே பண்களைத் திட்டமிட்டு சுரக் கோர்வையில் ‘சரிகமபதநி’ ஆரோசை, அமரோசை காட்டி கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழிசையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
• சம்பந்தர் இசைக்கும் இறைவனை அடைவிக்கும் மெய்யறிவிற்கும் பாலமிட்டவர் என்கிறார் தெய்வச் சேக்கிழார். ‘இசை முழுதும் மெய்யறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக’.
• திருஅம்மானை, ஆனந்தக் களிப்பு என்னும் பாடல்களைக் காவடிச் சிந்தில் பாடுவது மரபு. இது நம்மை இறைவனுடன் ஒன்று கூட்டும் பண் சீகாமரம் என்பது நாம் பெறும் அரிய செய்தி. இதை ஆசிரியர் நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
• சிந்தை தெளிய – சிந்தை தெளிந்தார்க்கு உகந்த பண் பஞ்சமம்.
• திருமந்திரம் பொதுவாக இந்தளப் பண்ணில் பாடப்படுகிறது.
• 11-ஆம் திருமுறையில் காரைக்கால் அம்மையார் நட்டபாடை மற்றும் இந்தளத்தில் பாடி உள்ளார்.
• 12-ஆம் திருமுறை வரலாற்று திருமுறையாதலால் பண்ணமைதி காணப்படவில்லை.
• இசைக்குரிய நாயன்மார்களாய் ஆனாய நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் காணப்படுகின்றனர்.
• சேக்கிழாரின் இந்தளப் பண் ஆராய்ச்சி தலையாயது.
• ஆனாய நாயனாரின் புராணத்தில் சேக்கிழார், தமிழிசையின் வீச்சை, குழலோசையின் சிறப்பை மூங்கில் மற்றும் குழல் தேர்வு எனத் தொடங்கி ஆனாயர் ஐந்தெழுத்து மந்திரத்தை விதவிதமாக எப்படி வாசித்தார் என்ற நுணுக்கத்தை மெய்யறிவை சேக்கிழார் வாக்கால் ஆசிரியர் எடுத்துக் காட்டும் போது எவரும் அவருடைய இசையறிவின் திறத்தில் மயங்கி நிற்பர் என்பது உண்மை.
• திருநீலகண்ட யாழ்ப்பாணரை அவருடைய தமிழ் இசைத் திறனைச் சேக்கிழார் பாடிய ஆலவாய் பாடலுக்கு நம் ஆசிரியர் காட்டும் உரை வீச்சு இன்றைய எந்த இசைவாணருக்கும் தமிழிசையின் கோடி காட்டியதாகும்.
• தமிழிசை கருவிகளுக்குள் அடங்காதது. ஏனெனில் தமிழிசை தெய்வத் தன்மை வாய்ந்தது.
• பழந்தமிழ் பண்ணிற்கு திருமுறைப் பாடல்களே ஏற்றவை. திருமுறை இசை வளர்ச்சியே தமிழிசை வளர்ச்சி ஆகும் என்பது ஆசிரியர் கூற்று.
• ‘பண்ணென்னாம் பாடற்கு இயைபு இன்றேல்’ என்ற வள்ளுவர் வாக்கை ஆசிரியர் இயைந்து காட்டுகிறார்.
தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆசிரியர் நீண்ட காலமாக பண் ஆராய்ச்சி திசை மாறி செல்வதைக் குறிப்பிடுகிறார். தமிழிசைக்கு 20,000 ஆண்டு கால வரலாறு உண்டு என்று ஆதாரங்களுடன், விஞ்ஞான முறையுடன் சான்றுகளுடன் நிறுவியது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். தமிழிசையை மூலமாகக் கொண்டு இராகங்கள் நிறுவியது
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். தமிழிசையை மூலமாகக் கொண்டு இராகங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுவது முறை என்கிறார். ஓதுவார்கள் பண்ணைத் தமிழ் மூலமாகக் கொண்டு பாடவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து தம் ஆய்வை மேற்கொண்டது அனைவரும் அறிய வேண்டிய, மாற்ற வேண்டிய நிலை ஆகும்.
• பஞ்ச மரபு என்ற ஐந்தொகை (பஞ்ச மரபு) நூலில் எட்டிப் பார்க்கின்ற வடமொழிச் சொற்கள் அமைந்த வெண்பாக்களை இடைச்செருகல்களை நமக்கு சுட்டிக் காட்டி அதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
• தமிழ் இசை மூலங்களைப் பயன்படுத்தி வேண்டும் இடங்களில் மாற்றங் கொண்டு 72 மேள கர்த்தாக்களுடன் ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற வடமொழி இசை நூலைச் சாரங்கதேவர் 13-ஆம் நூற்றாண்டில் வெளியிட்டார். இதுவே இன்று எங்கும் கோலோச்சி வருகிறது.
• நமது ஓதுவார்கள் ‘சரிகமபதநி’ என்ற இசைத்தமிழ்க் குறியீடுகளை அந்நியமாக எண்ணுகின்றனர். சுரத்தோடு பண்ணைப் பாடலாம் என்று சம்பந்தரே தெளிவுப்படுத்துகிறார். இதே போன்று நாட்டியத்திற்கும் சுரம் மிக முக்கியம் ஆகும்.
• சம்பந்தர் ‘காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார் வீதித் தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே! என்று பாடுகிறார்.
• ‘சரிகமபதநி’ என்பது தான் இசைத்தமிழின் அடிப்படைச் சட்டம். இவற்றிலிருந்து தான் ஏழிசையும் பிறக்கிறது என்று பழைய இசைத்தமிழ் இலக்கண நூல்கள் ஆகிய ‘சிகண்டியும்”பஞ்ச மரபும்’ கூறுகின்றன.
• புறநானூற்றிற்கு முன்னமே தலைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
• வல்வில் ஓரியை ஒரு காட்டில் ஒருமாவீரனாக அரசன் என்று தெரியாது புலவர் வன்பரணார் கண்டு, அவன் வீரத்தை வ¤யந்து, அவன் புகழை அங்கேயே பாடுகின்றார். அதற்கு விறலியர்கள் ஒரு பண்ணமைக்கப் பலபல பக்க வாத்தியங்கள் அதற்கேற்ப முன்னேற்பாடின்றி இயைந்து வாசிக்க விறலியர்கள் ஒரே பாட்டை ஒரு பண்ணிலன்றி அதன் 21 ஜன்ய ராகங்களிலும் பாடுகின்றனர். இவ்வீரனது புகழை 1 பண்ணோடு நிறுத்த மனமின்றி 21 பண்களில் இசைக்க வைக்கிறார். இக்காட்சி தமிழிசை மேன்மையை தூக்கி நிறுத்துவதாகும். இந்தப் புறநானூறு 152 ஆம் பாடல் இதனால் தான் என்னவோ தமிழிசைக் கடலை தரைமிசைக் கடல் பொறாமையால் அன்று விழுங்கியதோ என்னவோ என்ற ஆசிரியரின் நயம் இன்புறத்தக்கது.
தொல்லிசைச் சிறப்பும் நல்லிசை ஆனாயரும்:
ஆனாய நாயனார் புல்லாங்குழலில் ஐந்தெழுத்தை விதவிதமாக வாசித்து இறைவன் கருத்தைக் கவர்ந்து அவன் கழலடியை அடைந்தார். இது எப்படி என்றால் குழலில் பல்வேறு சுரங்களை வண்டு தாது பிடிப்பது போல எழுப்பி எழுப்பி, ஊதிப் பார்த்துச் சோதித்தாராம் ஆனாயர் என்று சேக்கிழார் பாடுகிறார்.
• காந்தாரப் பண்ணே இறைவனின் இசை வடிவமாயிற்று. இதனால் அருளரசப் பண் என்று பெயர் பெற்றது. இது ஒரு இரங்கற் பண்ணாகும். இதனாலேயே இராவணன் இந்தக் காந்தார இசையைப் பாடியே உய்ந்து போனான். இராவணன் சாம வேதம் பாடினான் என்பது பிழை. காந்தாரம் நீர்மை உடையது. இது இறைவன்பால் கசிவை ஏற்படுத்தக் கூடியது.
• பொதுவாக பண் உள்ளுக்குள் (உடலுள்) 8 உறுப்புகளை ஆட்டிப் படைத்துக் கொண்டு வருமாம். இந்த எட்டையும் ஏறி சவாரி செய்து வருவது பியந்தை காந்தாரம் ஆகும். சம்பந்தர் தந்தையின் தோளேறி பாடியது போன்று இத்தமிழ்ப் பண்ணுக்கு எல்லா உயிரும் இசைந்தன போலும்! இறைவனே அவருக்கு ஒரு தலைமை ஏற்படுத்திக் கொடுத்து அனைவரையும் அவர் பின் போகச் செய்தது, அனைவரையும் வென்றேறி ‘சமயக் கோளரி’ என்றும் சமயத் தலைவர் என்று பேரெடுக்க கொண்டாட வைத்தது இந்த பண்.
சந்தத் தமிழிசை:
தாயும் தந்தையுமின்றி குழந்தையில்லை. அது போல தண்ணார் தமிழ்ப் பண்ணும் தாளமும் இன்றி தமிழிசை இல்லை. சந்தங்கள் – தென்பாங்கு. தெம்மாங்கு என்பது பண்டைய வழக்கு. சம்பந்தரின் 384 பதிகங்களும் சந்த அடிப்படையில் அமைந்தவையே. இதை அடியொட்டியே அருணகிரியார் 869 சந்தங்களில் திருப்புகழை பாடியுள்ளார். அருணகிரியாரே, தமிழிசையின் பெருமையை அளந்து கூறுவது மிக மிக அரிது என்று பாடியுள்ளார்.’பகர்தற்கரிதான செந்தமிழ்’ இசையிற் சில பாடல் அன்பொடு பயிலப் பல காவியங்களை உணராதே – இது அருணகிரிநாதர் வாக்கு!
• பண்டைய தமிழிசை அறிவுடன் பின்பற்றப்பட்டது. முதலில் சந்தங்கள் பிறகு அதற்கேற்ற சொற்கட்டு, பிறகு அதற்கேற்ப தாளக்கருவி வாசிப்பு. இதுவே தமிழிசை முறை ஆகும். இயற் புலவர்களுடன் இசைப் புலவர்கள் சேர்ந்தால் பாட்டும் கொட்டும் வரும். இதையே சுந்தரரின் கொட்டாட்டுப் பாட்டை நமக்கு அடையாளம் காட்டி அருள்வழி காட்டுகிறார்.
• சொற்கட்டு பொருளற்ற ஓசையாகவும் வரும் என்பது நாம் அறிந்த செய்தி. ஆனால் இங்கே சடப்பொருளான ஒரு தாளக் கருவி கூட தமிழ்ச் சொல்லுக்கு ஒத்து வந்து ஒரு பொருள் பெற்றுப் பேசுமாம்! .
ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் ஈப்ரு மொழிப் பேராசிரியராகிய டேவிட் சல்மான் தமிழ் வரலாறு என்ற நூல் எழுதியிருக்கிறார்.தமிழே இசை வடிவானது என்று எழுதி ஆலாபனம் ,பல்லவி ,அனுபல்லவி ,சரணம் ,ராகமாலிகா என்று தலைப்புக்கள் இட்டிருக்கிறார் .எனவே இசை வடிவத்திலேயே வெளிநாட்டவரும் தமிழ் மொழியை கண்டு மகிழும் வாய்ப்பு அமைந்திருக்கிறது .சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் வருகின்ற பாணர்களின் ஆற்றுப்படை இசைக்கலைஞரின் வழிகாட்டும் இலக்கியமாகும்.தமிழில் தேர்ந்து ,தெளிந்து ,பிழிந்த சொற்கள் என்று மூன்று சொற்களை சொல்லுங்கள் என்றால் அறம் ,இசை ,சால்பு என்ற மூன்றைத்தான் சொல்லவேண்டும்.இசையென்றால் புகழ்,ஒன்றுகூடுவது ,புகழ்பேசுவது என்றெல்லாம் பொருள்படும்.இசையோடு வாழ்க ,வசையோடு வாழாதீர்கள் என்று நமக்கு திருக்குறள் வலியுறுத்துகிறது.
……………………………….

Add a Comment