==============================================================
உகரம். ஏப்ரல், 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்கள் குறித்து
சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் எழுதிய கட்டுரை
==============================================================
கல்லூரியைவிட அதிகம் கற்றுக் கொடுத்தவர் ஔவை நடராசன்
====================================================
சொல்வேந்தர் சுகி.சிவம் புகழாரம்!
பல முகம் கொண்ட ஒளவை :
••••••••••••••••••••••••••
என் வாழ்வின் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்து, எனக்குள் ஆழமான பல பாதிப்பை ஏற்படுத்தியவர் ஔவை நடராசன். ஔவைக்கு ஒரு முகம் அல்ல; பல முகம் உண்டு . பன் முகம்… அவரோடு பழகிப்பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். வெளியில் தெரிந்திருக்கிற வெளியுலகத்தில் நமக்கு அறிமுகமாகி இருக்கும் பேரறிஞர், மூதறிஞர் ஔவை என்பது ஒரு தனி நிலை.
நல்ல முறையில் நட்பு வட்டத்தோடு, அவரோடு கூடவே இருந்து பார்த்து, புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் ஔவை ஒரு தனித்த ஔவை.
காலேஜிக்கு கட் அடிப்படையே நாங்கள் அவரிடத்தில்தான் கற்றோம். அதுவரைக்கும் நாங்கள் ஒழுங்காகக் காலேஜிக்கு போய்க்கிட்டிருந்தோம். எங்களிடம், எதுக்கு ராஜா, காலேஜிக்கெல்லாம் போய் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்ற முதல் இலக்கணத்தை எனக்கு நடத்தினவர் அவர்தான்.
அதைவிட நான் ஒரு உண்மை சொல்லட்டுமா? கல்லூரிக்குப் போயிருந்தால் நான் என்ன கற்றிருக்க முடியுமோ அதைவிட அதிகம் கற்றுக்கொடுத்தவர் ஔவை.
தீவிரவாதி, ஞானி ஆக முடியாது :
************
ஒரு Phenetic என்று தீவிரத்தன்மையோடு சிலர் சில விஷயங்களில் சென்று சிக்கிக்கொள்கிறார்களே? அவர்கள் ஞானம் அடையவே முடியாது. அவர்கள் ஒருபோதும் ஞானம் அடையவே முடியாது. எந்தத் தீவிரவாதியும் ஞானம் அடைந்ததாக வரலாறே கிடையாது. ஆனால், நடுநின்ற நடுவாக யாரால் இருக்க முடிகிறதோ? அவர்கள்தான் பூரணமான ஞானத்தை நோக்கிப் பயணிக்க முடியும். தெரிந்து வைத்தார்களோ, தெரியாமல் வைத்தார்களோ, அருட்பா படித்ததால் வந்ததோ, படிக்காமல் வந்ததோ, நடுநின்ற நடுவாக நிற்கத்தெரிந்தவர் நடராசன். நடுநின்ற நடு.
ஏனென்றால், அவர் சேரில் உட்கார்ந்திருப்பார். இந்தப் பக்கம் எட்டு நாத்திகர்கள் உட்கார்ந்திருப்பார்கள், இந்தப் பக்கம் எட்டு ஆத்திகர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இது முழுக்கச் சாமி பைத்தியமாக இருக்கும். அது முழுக்கத் தந்தை பெரியார் பைத்தியமாக இருக்கும். இரண்டு பேருடன் கலகலப்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அவ்வளவு சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருப்பார் பாருங்கள். அதுபோல ஒரு மனிதரை உலகத்தில் பார்க்க முடியாது பாருங்கள். நடு நின்ற நடுவாக நின்ற நடராசன் அவர்.
நடுநிலைதான் ஞானத்தின் உச்சம் :
**********
நான் ஏன் இப்படி அதை உடைத்துப் பேசுகிறேன் என்று கேட்டால், இப்படிச் சொல்கிறேன். இவர் இருக்கட்டும். எனக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பிடித்த ஆள் யார் தெரியுமா? டி.வி. நியூசில் நடுவில் ஒரு ஆளைக் காட்டுவார்கள். இரமணன் என்று ஒருவர் வருவார். அவர் என்ன சொல்வார் என்றால், இன்று மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், இனி மழை பொழிவதற்கான நிறைய வாய்ப்பிருக்கிறது, ஆனால் மழை பெய்யாமல் போய்விடுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது இப்படிச் சொல்ல அவருக்கு ரூ.65,000/- சம்பளம்.
எல்லோரும் என்ன சொல்கிறார்கள்.. என்ன இந்த ஆள் மழை பெய்யும் என்று சொல்கிறார், பெய்யாமலும் போகலாம் என்கிறார் என்பார்கள். எனக்குத் தெரிந்து அவர்தான் அறிவாளி. ஏன் தெரியுமா? நாம் மழை பெய்யும் என்று சொல்லலாம். ஆனால், பிரபஞ்சம் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு திசையில் போய் மழை பெய்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. பெய்யாது என்று சொல்லாம், எங்கோ போக இருக்கும் மேகத்தை இழுத்துக்கொண்டு வந்து இங்கு மழை பெய்யலாம். எதுவுமே மாற்றத்திற்குரியது, மனிதர்கள் எதற்கும் தயாராக இருப்பது நல்லது என்கின்ற நடுநின்ற நடுநிலைதான் ஞானம் அடைவதின் உச்ச நிலை. அது confusion அல்ல. Clarity. Confusion மாதிரி தோணும். ஆனால் மிகப்பெரிய Clarity. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஜென் ஞானியைப் போய்ப் பார்த்தால் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஜென் ஞானி யாரென்றால் அது ஔவை நடராசன்தான். ஏனென்றால், அதை மட்டும்தான் அவர் விட்டு வைத்திருக்கிறார்.
அம்மா தாராவின் புத்திமதி :
*********
அம்மா தாரா இருக்கிறாரே, நானும் ரவியும் அவர் வீட்டிற்குப் போவோம். என்ன கேட்பார் தெரியுமா? ஏம்பா, உங்களுக்கெல்லாம் உருப்படுவதாய் எண்ணமே இல்லையா? என்பார். எதுக்கு அநாவசியமா இவர் பின்னாடி போய்க்கிட்டு இருக்கிறீர்கள்? உங்களையெல்லாம் பார்த்ததால் என் பிள்ளைகள் போல இருக்கிறீங்க, எனக்கு உங்களையெல்லாம் நினைத்தால் பதறுகிறது, சொன்னால் கேளுங்கப்பா என்பார். தாரா அவர்கள், ஔவையிடம் ஏங்க, நீங்க ஏன் அந்தப் பிள்ளைகளையெல்லாம் வரச் சொல்றீங்க, அந்தப் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் போல இருக்காங்க என்பார். ஏனென்றால், ஔவை நடராசன் அய்யா அவர்கள் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளமாட்டார். விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார். அவரின் போக்கு ஒரு தனிப்பட்ட போக்கு.
ஐ.ஜி.யா ? கான்ஸ்டபிளா ? :
*********
நீங்கள் ஒரு Exceptional-ஆக ஒரு ஔவை நடராசன்தான் இப்படி வெற்றி பெற முடியுமே தவிர, அவரை அப்படியே பின்பற்றி எல்லோராலும் வெற்றியடைய முடியாது. There is a difference.
ஆனால், ஔவையிடம் நாங்கள் படித்த படிப்பு இருக்கிறது பாருங்கள், உண்மையிலேயே அவ்வளவு ஆச்சரியமான படிப்பு. அருட்செல்வர் சொன்னார், பிரசாத் அய்யாதான் ஔவை இங்குச் சென்னை வருவதற்கே காரணம் என்றார். நாங்கள் அந்த இராமலிங்கம் பணிமன்ற விழாவில் இருக்கிறபோது, ஒருமுறை அருட்செல்வரும் அவரும் வந்துகொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ஔவைதான் உயிர், அருட்செல்வர் அய்யாவுடன் இப்போதுதான் பழக்கம். ஔவை அய்யா என்றால் எங்களுக்குப் பாசம் அதிகம். நாங்கள் இருவரும் இவரைப் பார்த்து, சார் வணக்கம், சார் வணக்கம் என்போம். ஒன்னும் கண்டுகவேயில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன், எங்களை அழைத்து, ராஜா, IGயோடு Constable வரும்போது, Constable-க்கு Good Morning சொல்கிறீர்களே, Constable வேலை போய்விடுமே, உங்களுக்கு IG யாரு? Constable யாருன்னு தெரியலையா? பாருங்க எவ்வளவு பெரிய வாழ்க்கை நுட்பத்தை எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார் பாருங்கள்.
மொழிபெயர்ப்பில் ஔவையின் தனித்துவம் :
************
அவருடைய Translation அந்த மொழிமாற்றம் செய்கிற திறமையைப் பற்றி பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் மிகச் சரியான ஒரு கருத்தைச் சொன்னார்.
எனக்கு எந்த விழாவில் என்று நினைவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஒரு சிறப்பு கிடைத்தபோது, மத்திய அமைச்சர் வந்து பாராட்டுகிறார். “It is an another feather on his cap” என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறார். இது ஆங்கிலத்தில் பயன்படுத்துகிற ஒரு சாதாரணமான Phrase. வேறு எந்த மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும், இது அவரின் தொப்பியில் குத்தப்பட்ட மற்றொரு இறகு என்று மொழிபெயர்த்திருப்பார். ஆனால், ஔவை நடராசன் அவர்கள், “இது மன்னாதி மன்னனின் மணி மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கக் கல்” என்று மொழிபெயர்த்தார்.
இதையெல்லாம் கேட்டு, நான் அப்படியே பிரமித்துப்போயிருக்கிறேன். எப்படி இந்த மனிதனுக்கு இந்த Flow வந்து கொட்டுது? எவ்வளவு ஒரு Clarity என்ன ஓர் அழகான மொழியாளுமை? அப்படியே திகைத்துப் போயிருக்கேன்.
கோபப்பட்டாலும் கோபப்படாதவர் :
**********
நான் இங்குத் தனிப்பட்ட முறையில் ஒன்றைச் சொல்ல வேண்டும். நான் அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கேன். உங்களுக்குக் கொள்கை கிடையாது என்பது போல நிறைய மோதி, அவருக்குக் காயங்கள் எல்லாம் ஏற்படுத்தியிருக்கேன்.
ஒரு பட்டிமண்டபத்தில் அவர் நடுவராக இருந்தார். நான் எழுந்து வெளிநடப்பு செய்துவிட்டேன். ஏனென்றால், ஒரே விளையாட்டாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வெளிநடப்பு செய்துவிட்டேன். தனியாகக் கூப்பிட்டுச் சொன்னார், இதெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது ராஜா, Heart Attach வந்துவிடும், ஜாலியாக இருக்கனும், அதைச் சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏன் இப்படிக் கோபித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டார்.
பாருங்கள் அவரிடத்தில் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டால்கூட, ஒரு பேரன்பு காட்டுகின்ற தந்தையின் அன்பு. நீங்களெல்லாம் வளரனும் ராஜா, வளரனும் என்பார்.
நடுநிலை நாயகன் :
*****
நான் இன்றைக்கு வாழ்வில் ஓரளவு உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்று சொன்னால், அதில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கும் நான்கைந்து நபர்களில் மிகமிகமிக குறிப்பிடத்தக்கவர் டாக்டர்.ஔவை நடராசன் அவர்கள்.
ஏனென்றால், ஒரு பேச்சை எப்படிச் வடிவமைக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும், இதில்போய் அநாவசியமாக வெறித்தனமாக மூழ்கிவிடக்கூடாது. இரண்டு தரப்பையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு இருக்க வேண்டும் என்று அந்த நடுநின்ற நடுவில் நிற்றல் என்ற கலையை எனக்கு ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுத்த பெருமை ஔவை அவர்களுக்கு உண்டு.
ஔவைக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் :
**********
பர்சனலாகப் பாருங்கள். யாருமே செய்யத்துணியாத காரியத்தை, என் வாழ்க்கையில் எனக்கு அவர் செய்தார். டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் விழா. அதுவும் அவர் முதலமைச்சராகப் புகழின் உச்சத்தில் இருக்கின்ற காலம் அது. அது ஒரு கவியரங்கம். அந்தக் கவியரங்கத்தில், ஔவை நடராசன் அவர்கள் பாடுவதாகப் போட்டிருந்தது. அப்துல்ரகுமான், கிள்ளி வளவன், முருகு சுந்தரம் என்று ஆறு அல்லது ஏழு நபர்கள் பாடுகிறார்கள். அதில் டாக்டர். ஔவை நடராசன் அவர்களும் கவிதை பாடுவதாகக் கவியரங்க அழைப்பிதழில் இருந்தது. எனக்கு, போன் செய்து சொல்கிறார்… நான் ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருக்கிறது ராஜா, கவியரங்கத்திற்கு நான் செல்லவில்லையென்றால் தப்பாகிவிடும், ஏனென்றால் சி.எம். தலைமையில் நடைபெறும் கவியரங்கம்.. நீ ஒன்னு பண்ணு, கவிதை எழுது, நான் படிக்கிற மாதிரியே படித்துவிடு, நீ போ என்றார்.
நான் சொன்னேன், சி.எம். மேடையில், நான் ஒரு சோட்டா, இத்தனுன்டு, நான் போய் நின்றால் எப்படி மதிப்பார்கள், நான் யாரென்றே தெரியாது என்றேன்.
அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று, கருணாநந்தம் என்பவருக்குப் போன் செய்து சொல்லிவிட்டு, என்னை முதன் முதலில் நம் சி.எம். தலைமையில், நான் பேசுகிறேன். முதலில் கலைஞர் அவர்களுக்குக்கூட ஒரு சின்னக் கோபம். அவர் வரவில்லையென்று. அறிமுகம் பாட வேண்டிய கலைஞர் அறிமுகம் பாடவேயில்லை. அவரை படிக்கச்சொல்லு என்றார். நான் ஆரம்பித்து, நம்ம வேலையைக் காண்பித்துவிடுவோம் இல்ல- இது நானாக எழுதி வந்ததுதான் என்று காட்டவில்லையென்றால், நம்ம புத்தி என்ன ஆவது? ஆக, நான் என் வேலையைக் காண்பித்தவுடனே, அந்த இரண்டாவது ஸ்டேஜ் போனவுடனே, கலைஞர், என்னை நிறுத்த சொல்லி, எழுந்து மைக்கை வாங்கி, நீ சிறுவன் என்று ஏமாந்தேன், நீ ஒரு சிறுத்தைக்குட்டி, பாடு என்றார். என் வாழ்க்கையில் எனக்கு ஒரு பெரிய ஏற்றம் வருவதற்குக் காரணமாக இருந்த சம்பவம் ஏற்பட்டது, அவர்களின் பெருந்தன்மையால்தான்.
இதைவிட ஒரு முக்கியமான செய்தி, அவருடைய அந்தப் பண்பு நலன். அதாவது, இன்றைக்கு வேண்டுமானால் நாங்கள் பெரிய பேச்சாளராக இருக்கலாம். இன்று ஏதோ நாங்கள் உலகம் முழுக்கச் சுத்தலாம். நல்லா யோசித்துப் பாருங்கள், விவேகானந்தா காலேஜில் பி.யூ.சி. படிக்கும்போது, என்னுடைய அடையாளம் என்ன? நானும் இரவியும் அவர் அறையில் சென்று உட்கார்ந்திருப்போம். எங்களிடம் எவ்வளவு நேரம் பேசுவார் என்று நினைக்கிறீர்கள்? மணிக்கணக்கில் பேசுவார். அவர்பாட்டுக்கு நாள் கணக்காகப் பேசுவார். இன்றைக்கு உலகத்தில் யாரோடு பேசினாலும் நமக்கு என்ன பிரயோஜனம் என்று பார்ப்பார்கள். நமக்கென்ன லாபம் என்று கணக்கு பார்ப்பார்கள்.
ஆனால், அந்தக் காலக் கட்டத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாத எங்களுக்காக நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி, இதயத்தில் ஒரு இடத்தையும் ஒதுக்கி எங்களுக்காக அந்த இடத்தைக் கொடுத்தார் இல்லையா? அதை ஈடு செய்ய முடியுமா?
இன்றைக்கு வளராத ஒரு மனிதர் வளர்ந்த ஒரு மனிதரைப் போய்ப் பார்த்தால், என்ன நடக்கும்? என் விஷயம்? I am very busy என்னால் இப்போது பேச முடியாது என்பார்.
பலரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தியவர் :
***********
அப்படி ஒருவரைக்கூட அவர் நோகடித்ததாக வரலாறே கிடையாது. யார் வந்தாலும் உட்கார வைத்து மரியாதை கொடுப்பார். எங்களுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய பயிற்சியை அங்குக் கொடுத்தார்.
கருத்து வேறுபாடுகளை இன்முகத்தோடு ஏற்பவர் :
**************
ஆனால் ஒளவையோ… இன்றைக்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் புகழின் உச்சியில் இருக்கிறார்கள். அரசியலில் ஒரு பெருமகனார் உச்சியில் இருக்கிறார். இலக்கியத்தில் ஒருவர் பெரிய நிலையில் இருக்கிறார். சமய உலகில் ஒருவர் பெரிய நிலையில் இருக்கிறார்! ஒன்றை மறந்துவிடாதீர்கள். இன்றைக்குத் தமிழகத்தின் பல திசைகளில் பலபேர் பெரிய நிலையில் இருந்தவர்கள் ஒளவையால் வளர்த்துவிடப்பட்டவர்கள் என்பதுதான் உண்மையிலும் மிகப் பெரிய உண்மை . பலபேர் உயரத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மிக இளமையாக இருந்த காலத்தில் அன்பு பாராட்டி, தந்தையைவிட மிக அன்போடு பாராட்டி வளர்த்த பெருமை அவருடையது. அவர் ஒரு பேச்சாளர் மட்டுமல்ல….. ஒரு நல்ல சிந்தனையாளர். இரவி வந்திருக்கிறார்… அவரால் சொல்ல முடியாது. ஒருநாள் இரவிக்கும் அவருக்கும் இடையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு… யாரோ ஏற்படுத்திவிட்டது.
அப்போது, ஒளவை அவர்கள், மேடையில் உட்கார்ந்து இருக்கிறார். இரவி அப்போது வந்தார். அப்போது, ஔவை, ஒரு சீட்டு எடுத்து, இரண்டு வரிகள் எழுதுகிறார். எவ்வளவு பெரிய கவிஞர் பாருங்கள். “ஆரார் எது சொன்னபோதும் “யாழா முழவோடு மோதும்?” ஒரு சங்க இலக்கியப் புலவன் எழுதிய கவிதையும், ஔவையின் இந்தக் கவிதையும் ஒற்றைத் தன்மையுடையன.
சோகத்தை வெளிப்படுத்தாத கனியன் :
***********
நானும் பலபேரைச் சந்தித்திருக்கிறேன். ஏதாவது ஒரு சமயத்திலாவது சோகமாக, வருத்தமாக எதையாவது சொல் புலம்புவார்கள். ஒருநாள்கூடச் சொந்தச் சோகத்தைச் சொல்ல – புலம்பினதாக வரலாறே கிடையாது. எங்கு இருக்கிறாரோ இடத்தை உற்சாகமாக வைத்திருக்கிறார்!.
ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். ஔவை உயர்வோடு இருக்கப் பலர் காரணம். அவர் உயிரோடு உடலோடு இருக்கத் தாரா அம்மையார் காரணம். இருவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டு வாழ்த்துகிறேன். நன்றி. .
நான் நீண்ட நேரம் பேசுவது மரியாதையாக இருக்காது. ஒரே ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். இன்றைக்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் புகழின் உச்சியில் இருக்கிறார்கள். அரசியலில் ஒரு பெருமகனார் உச்சியில் இருக்கிறார். இலக்கியத்தில் ஒருவர் பெரிய நிலையில் இருக்கிறார். சமய உலகில் ஒருவர் பெரிய நிலையில் இருக்கிறார். ஒன்றை மறந்துவிடாதீர்கள். இன்றைக்குத் தமிழகத்தின் பல திசைகளில் பலபேர் பெரிய நிலையில் இருந்தவர்கள் ஔவையால் வளர்த்துவிடப்பட்டவர்கள் என்பதுதான் உண்மையிலும் மிகப்பெரிய
உண்மை. பலபேர் உயரத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மிக இளமையாக இருந்த காலத்தில் அன்பு பாராட்டி, தந்தையைவிட மிக அன்போடு பாராட்டி வளர்த்த பெருமை அவருடையது. அவர் ஒரு பேச்சாளர் மட்டுமல்ல…. ஒரு நல்ல சிந்தனையாளர். இரவி வந்திருக்கிறார்… அவரால் சொல்ல முடியாது. ஒருநாள் இரவிக்கும் அவருக்கும் இடையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு… யாரோ ஏற்படுத்திவிட்டது.
அப்போது, ஔவை அவர்கள் மேடையில் உட்கார்ந்து இருக்கிறார். இரவி அப்போது வந்தார். அப்போது ஒரு சீட்டு எடுத்து, இரண்டு வரிகள் எழுதுகிறார். எவ்வளவு பெரிய கவிஞர் பாருங்கள். ஆரார் எது சொன்னபோதும் யாழா முழவோடு மோதும்? ஒரு சங்க இலக்கியப் புலவன் எழுதிய கவிதையும், ஔவையின் இந்தக் கவிதையும் ஒற்றைத் தன்மையுடையன. மகா இரசிகன். இதைவிடப் பாருங்கள். அவர் இருக்கிற இடம் மிகவும் ஜாலியாக இருக்கும்.
நானும் பலபேரைச் சந்தித்திருக்கிறேன். ஏதாவது ஒரு சமயத்திலாவது சோகமாக, வருத்தமாக எதையாவது சொல்லிப் புலம்புவார்கள். ஒருநாள்கூடச் சொந்தச் சோகத்தைச் சொல்லி அவர் புலம்பினதாக வரலாறே கிடையாது. எங்கு இருக்கிறாரோ அந்த இடத்தை உற்சாகமாக வைத்திருக்கிறார்.
ஒரே வார்த்தை சொல்லி முடிக்கிறேன். ஔவை உயர்வோடு இருக்கப் பலர் காரணம். அவர் உயிரோடு உடலோடு இருக்கத் தாரா அம்மையார் காரணம் இருவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.

Add a Comment