POST: 2019-11-20T09:32:36+05:30

அமீர் அலியின் – ஆற்றொணாப் பிரிவு
=======================================

நேற்றுத் தான் நண்பர் அமீர் அலியின் நூலுக்கு அணிந்துரை எழுதி முடித்தேன் .
இன்று காலை நெல்லையிலிருந்து தொலைபேசி வந்தது என்று சொன்னார்கள் .

பிறகு தான் அது நூலுக்கு நினைவூட்டும் செய்தி அல்ல .
அவரை என்றும் நினைப்பதற்குரிய இரங்கல் செய்தி என்று கேட்டுத் தவித்துவிட்டேன் .

நலிந்தவர்களுக்கும் ,மெலிந்தவர்களுக்கும் நாள் குறித்து வைத்திருப்பது இயல்பு தான் .

ஆறடி உயரமும் – அகன்ற மார்பும் ,பிறரோடு பழகும் பரிவும் ஊருக்கு உழைத்த உறவும்
அவர் வாழ்க்கையை இவ்வளவு திடுமென முடிக்கும் என்று
எவரும் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள் .

சுற்றம் புலம்ப பறந்தோடி வந்த நண்பர் இரவியின் மனம் பதறத் தமிழாசான் அண்ணா என்று வாய் மணக்க அழைத்த அமீர் அலியை இனி எங்கே காணப் போகிறேன் .

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *