POST: 2019-12-20T10:39:40+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 225)

சொல்லாக்கச் செம்மல் முத்துப்பிள்ளை ஐயாவை அறிவேன்.

1990களின் மத்தியில் சென்னை வானொலியில் நான் கலைச்சொல்லாக்கத்திற்கென தொடங்கிய “நாளொன்று போனால் சொல்லொன்று அறிவோம்” எனும் நிகழ்ச்சிக்கு அன்றைய அமைச்சரும் என் கெழுதலை நண்பருமான முனைவர் தமிழ்க்குடிமகன் பரிந்துரையில் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார்.

மொழிப் புலமையாளர். உயர் பண்பாளர். அவரது நூற்றாண்டு காலந்தொறும் கனிந்து வளரும் தமிழுக்குப் புதிய அணிகலன் பூட்டிய பெருமை போற்றுதலாகும்.

— திரு.விஜய திருவேங்கடம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *