வாகை சூட வருக !
தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் உதவிப்பிரிவு அலுவலர் பணியிடங்களுக்காக – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று ( 11 1 2020 ) எழுத்துத்தேர்வு நடத்துகிறது .முதன் முதலில் ( 22 4 2001 ) ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புத்துறையில் இருவர் உதவிப்பிரிவு அலுவலர் பணியிடங்களுக்குப் பல்லாயிரம் பேர் போட்டியிட்ட நிலையில் இருவர் தெரிவு செய்யப்பட்டு இன்று துணை இயக்குனர்களாக மிளிர்கிறார்கள் .
3 2 2013 ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புத்துறைக்கு 16 பேர் உதவிப்பிரிவு அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டனர் .அவர்களுள் நால்வர் இன்று பிரிவு அலுவலர்களாக முன்னேறியுள்ளனர் .ஒருவர் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணி மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் ஐந்து உதவிப்பிரிவு அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று ( 11 1 2020 ) நடைபெறுகிறது .இளங்கலை – முதுகலை தமிழிலக்கிய மாணவர்களுக்கென அமைந்த இடமென்ற போதிலும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லையே என்று மனம் ஏங்குகிறது .
இம்முறை வெற்றி பெறுவார்கள் என எதிர் நோக்குகிறோம் !

Add a Comment