POST: 2020-02-25T10:19:05+05:30

பேரறிஞர் ஔவை துரைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு
===============================================

நாள் : 25.02.2020, செவ்வாய்க் கிழமை,
முற்பகல் 12.30 மணி

நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக்
கூடம்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை.

தலைப்பு : ஔவையும் புலமையும்
—————–

முன்னிலை :
——————–
முனைவர் ந.அருள்

பொழிவாளர் :
———————–

திரு.கு.சிவமணி,
ஆய்வு வளமையர் (ப.நி)
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

வரவேற்புரை

முனைவர் ந.அருள்

என் பாட்டனாருக்கு நெறி காட்டிய அண்ணணாய் அமைந்த பெருமைக்குரியவர், செந்தமிழ்த் திலகம், சிவகுப்புசாமிப் பிள்ளையாவார்.

தமிழ் நாட்டு வள்ளல்களைப் பற்றி எழுத்துக்கு எழுத்து இனிப்பூட்டும் நாடகங்களை புறநானூற்றுத் தொடர்கள் மின்னிக் காட்ட எழுதிய பெருந்தகை அவர்.

என் பாட்டனாரும் அவரும் இணைபிரியாமல் இருந்தார்கள்.

கரந்தையில், என் பாட்டனார் உறைந்தபோது, வாழ்வளித்த பெருந்தகைதான் சிவ குப்புசாமிப் பிள்ளையவர்கள்.

அவருடைய அருமைத் திருமகனாய்,
தமிழுலகத்தின் தனிமகனாய்,
புலமைத் திலகமாய், தமிழ்க் கல்லூரி முதல்வராய்,
செம்மொழி ஆய்வின் பெரும் பேராசிரியராய்,
புதுமை மாநில அரசு வெளியிட்ட சட்டப்
பெருங்களஞ்சியத்தின் ஆசிரியராய்,
நான் வாய் திறந்தால் பெரியப்பா
என்று நெஞ்சுருகி அழைக்கும் பேராசிரியர் சிவமணி அவர்கள், தொன்னூறாம் வயதைத் தொடவிருப்பவர்.

வாழ்வெல்லாம் தமிழ் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களையும் விட்டுப் பிரியாத சீடர்களையும் வளர்த்த பெருமையுடையவர்.

எவரேனும் ஔவை அவர்களின் உள்ளும் புறமும் தெரிந்த அவருடைய உயர் புலமையை அளந்த பெருமைக்குரிய பேராசிரியர், பெரியப்பா சிவமணி அவர்கள், இன்று உரையாற்ற வந்திருப்பது, வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

இந்த உரை, உரைவேந்தரின் அகல, ஆழத்தை ஆய்துக்காட்டும் சீர்பேருரையாகும்.

பேராசிரியர் அவர்கள், இசைந்து வந்ததே இந்த அறக்கட்டளைக்கு ஈடில்லாத பெருமையைச் சேர்க்கிறது. அவரை வரவேற்பதில் தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நானும் எல்லையில்லாத மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
ஔவைக்கு அதியமான் போல பேராசிரியர் சிவமணியின் தந்தையார் விளங்கினார்.

என் தந்தையார், தம் வாழ்வின் தொடக்கத்தில், தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் உரையாளராகச் சேர்ந்தார். அவரை, தன்னுடைய அழகிய புல்லட் விசையுந்தில் ஏற்றிக் கொண்டு போய் மன்னர் கல்லூரியில் என் இளவலைப் பணியில் சேர்த்திருக்கிறேன் என்று சொன்னதை நெகிழ்ச்சியோடு இன்று காலை குறிப்பிட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ஆணழகன் என்று உங்களை உடனிருந்தவர்கள் அழைத்ததை நான் பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

தமிழ்மணி ஒரு மாமணி திருமாமணி பேராசிரியர் சிவமணி அவர்களை வரவேற்கிறேன்.

உரைவேந்தர் ஆற்றிய அளப்பரிய பணிகளை போற்றும் வகையில் பேராசிரியர் சிவமணி அவர்கள் பேசிய நல்லுரை மனத்தை நெகிழ வைக்கிறது தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் மேலும் உயர்ந்து சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கள் குடும்பம் என்றும் நன்றியோடு தங்களை பாராட்டும்

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *