திருமதி.சானகி சொக்கலிங்கம்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இனிமையும் – எளிமையும் ,
எவரையும் சொக்க வைக்கும் பரிவும் பூண்ட
நண்பர் கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கத்தின்
துணைவியார் மறைந்த செய்தி
பேரிடியாக விழுந்திருக்கிறது .
ஆயிரம் நாட்களுக்கு மேல் அங்குமிங்கும் அகலாமல்
அனைத்து மருத்துவமும் செய்து தோற்றேனே !
என்ற அவர் குரல்
உருக்கத்தின் எல்லையைத் தொட்டு விட்டது .
நல்ல நூல்களைப் பதிப்பிக்கும் வாழ்விலே
தான் அவர் நாள் கழியும் !
என்பது தான் எனது ஆறுதலுரை !!
ஆறாத துயரத்தோடு
ஒளவை நடராசன்
15.03.2020

Add a Comment