https:///youtu.be/EB0ZkHusg_U
================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -2
குயிலிசையோடு குரலிசை இணைந்த கோலம்
கண்டு மகிழலாம்.
================================================
அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••
குயில் பாட்டு பாரதியாரின் உயிர்ப்பாட்டு என்று சொல்லலாம். குயில் கூவுகிறதாம். கூவுகிற குயிலின் ஓசை எத்தனை விதமாய்ப் புனைந்து காட்டலாம் என்பதைத் தமிழ் உலகத்தில் ஏற்றம் பெறச் செய்த பொன்வரிகளைத்தான் குயிலின் குரலாக பாரதியார் கூறுகிறார்.
குயில் தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்குகிறது. குயில் பேசுகிற அந்த குரல் இன்பத்தில் கனல் ஏற்றுவதாக மின்னொளியைக் கன்னலில் கலப்பது போல சொல்லமுடியாத சுவையோடு சூழ்ந்திருக்கும் அவ்வளவு பேரும் சொக்கிப்போகப் பாடத் தொடங்கி தன் கதையைத் தொடங்குகிறது.
தமிழில் முன்னெல்லாம் கோகிலம் என்பார்கள். அதனால்தான் தன் அருமைத் திருமகளின் குரலுக்கு வசந்த கோகிலம் என்றே பெயரிட்டார்கள். கோகிலம் என்பது குயில் ஆகும். அதனால்தான் இசை அரசிக்கு கோகில வாணி என்று பெயரிட்டார்கள்.
கோகிலக் குரல் வேந்தராக சூரியப் பிரகாஷ் அவர்கள் சுடச்சுட இசையின் திறன்கள் படப்பட இப்போது பாடுவதைக் கேட்டோம்.

Add a Comment