POST: 2020-07-16T10:15:41+05:30

தினமணி நாளிதழில் 13.07.2020 அன்று வெளியான கட்டுரை

பல்கலைக்கழக பெருமை
====================

அமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறந்த எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சன். அமெரிக்கர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த குணநலங்களான தன்னம்பிக்கை, கடமையுணர்ச்சி, விடுதலை வேட்கை மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகிய அனைத்துப் பண்புகளையும், நெறிமைகளையும் தமது ஆங்கில எழுத்துச் செறிவில் வேரூன்றியவர். உலக வாழ்க்கையின் தத்துவங்களை பல்கலைக்கழக நோக்கினை நியூமன் மட்டுமே எடுத்துரைத்திருந்தபோது சிறப்புமிக்க ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் எனும் தலைப்பிலான எமர்சனின் கட்டுரை பசுமையான இளமை நினைவுகளை நம் கண் முன்னே நிறுத்துகின்றது. ஒரு மிகச் சிறந்த நூல் அல்லது மேதையை உருவாக்கும் நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆற்றலை மெய்ப்பிக்க முற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
பிரிட்டன் பல்கலைக்கழகங்களுள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கெனச் சிறப்புமிக்க தனியிடம் உண்டு. தற்போதுகூட, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைக் காட்டிலும் அதிக அளவிலான புகழ்பெற்ற மாமணிகளைத் தங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களாகக் கொண்ட பெருமை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தையே சாரும். வழிபாட்டைக் கருதிய அரசரின் கல்லூரி, சிற்றாலயம், கல்லூகளில் பட்டு விரித்து போன்ற புல்வெளிகள் மற்றும் பூங்காக்கள் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள் சிலரைக் காண எனக்கு ஒரு நாள் மட்டுமே வாய்த்ததையெண்ணி நான் அடங்காத ஆர்வத்தால் வருத்தமும் அடைந்தேன்.
ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான சில அழைப்புகளை நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பெற்றேன்.
என் புதிய நண்பர்கள், அங்குள்ள அரங்குகள், போட்லியன் நூலகம், ராண்டால்ப் காட்சிக்கூடம், மெர்டான் அரங்கு மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினர். மிக உயரிய சிந்தனை வளங்கொண்ட நேர்மையான இளைஞர்கள் பலரை நான் அங்குக் கண்டேன். அவர்களுள் சிலர், மன அமைதி வேண்டுமெனில், தியாகங்கள் பல செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். மன அமைதி குறித்து என்னால் எந்த ஆலோசனையையும் வழங்க இயலவில்லை. ஆனால், இந்த ஆங்கிலேயர்களின் பாதுகாப்பான மற்றும் மென்மையான நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொண்டாலும், அவர்களின் அன்பும் ஒற்றுமையும் எனக்கு எங்கள் கேம்பிரிட்ஜ் நன்பர்களையே நினைவு கூர வைத்தன. அங்கிருந்த அரங்குகள் மிக உயர்ந்த மர வகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த சுவர்களை நிறுவனர்களின் புகைப்படங்கள் அலங்கரித்தன; மேசைகள் எழில்மிகு தட்டுகளால் மிளிர்ந்தன. ஓர் இளைஞர் முதலாவது மேசை முன் வந்துநின்று, சில பழமையான வழிபாட்டுப் பாடல்களை முணுமுணுத்தார். இத்தகைய பழக்கம் அங்கு நீண்ட நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது என்றே நான் கருதுகிறேன்.
அந்தப் பல்கலைக்கழக இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்குள் அறைக்குத் திரும்பிவிட வேண்டும். அதன் பின்னர் வரும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொரு அரங்கிலும் உள்ள காப்பாளர் அன்றிரவே அளிக்க வேண்டும் என்ற விந்தையான பழக்கம் அவர்களின் பண்பிற்கு எடுத்துக்காட்டு. செலவந்தர்கள் குடும்பத்திலிருந்த வந்த இளைஞர்கள் உட்பட 1200 இளைஞர்கள் அங்கு இருந்தபோதிலும், அவ்விடத்தில் ஒரு சிறு சச்சரவு கூட ஏற்பட்டதில்லை என்பது மேலும் வியப்பளித்தது.
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பலர் மிகப்பெரிய கொடையாளர்களாகத் திகழ்ந்தனர். ஒவ்வொரு செல்வந்த மாணவரும் பல்கலைக்கழகத்தை நீங்கிச் செல்லும்போது ஏதேனும் ஒரு பரிசுப் பொருளை அளிப்பது வழக்கமான செயலாகும். தோழர் டாக்டர் ஜெ. பின்வரும் குறிப்புகளை எனக்கு அளித்தார். இலண்டனில் உள்ள இரபேல் மற்றும் மைக்கேல் ஏஞ்செலோவின் ஓவியங்கள் சர் தாமஸ் லாரன்ஸின் தொகுப்புகளாகும். விலைமதிப்பில்லா இந்தப் பரிசுப்பொருள்கள், ஏழாயிரம் பவுண்டுகளுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பெற்றது., தொடர்புடைய குழு மற்ற நண்பர்களிடையே லார்ட் எல்டனை அழைத்து மூவாயிரம் பவுண்டுகளை வசூல்செய்தது. நூறு பவுண்டுகளுக்குப் பதிலாக, மூவாயிரம் பவுண்டுகளுக்கான காசோலை அளித்து அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கினார்.
பொல்டியன் நூலகத்தில், எகிப்திலிருந்து டாக்டர்.கிளார்க் என்பவரால் எடுத்து வரப்பட்ட கி.பி.896ஆம் காலத்தில் மெண்ட்சில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிளை (1450 என நம்புகிறேன்) எனக்குக் காட்டினார்; ஏறத்தாழ இருபது அரிய ஓலைகள் தொலைந்துபோன அதன் நகலையும் அவர் எனக்குக் காட்டினார். ஒரு நாள், நான் வெனிசில் இருந்தபோது, ஒரு அறை முழுவதும் நிரம்பி வழிந்த புத்தகங்களையும் கையெழுத்துப்படிகளையும் அவர் கொண்டு வந்தார். அவை கிழிந்தும் சேதமடைந்தும் காணப்பட்டன.
இந்த பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் கிரேக்க, இலத்தின் மற்றும் கணித அறிவும் நுட்பமான ஆங்கிலத்தைச் சுவை குன்றாமல் வழங்கும் மாண்பும்தான் மாணவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.
இங்கிலாந்து நாட்டினர் மிக உயர்வாகக் கருதுகிற – கற்றறிந்த பெருந்தகையாளர் எனும் கொள்கையை எய்துவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். செருமன் நாட்டு அறிஞர் ஒருவர், தங்கள் நாட்டு மக்களிடையே ஆங்கிலேயர்களின் பன்புகள் குறித்து விவரிக்கையில், “அது போன்ற குணநலன்கள் தங்கள் நாட்டில் இல்லை” என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இருபது அல்லது முப்பது திறமையாளர்களையும் முன்னூறு அல்லது நானூறு கற்றறிந்த சான்றோர்களையும் ஆக்ஸ்போர்டு உருவாக்குகிறது.
பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆங்கிலேய மாணவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் போன்றே நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஒரு புத்தகத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆங்கிலேய நாட்டுச் சட்டத்தை ஒவ்வொருவரும் ஆழமாக அறிய வேண்டும் என முதலாம் சார்லஸ் கூறினார்.
பறவைகள் தங்கள் கூட்டை உருவாக்குவது போன்று பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் ஒழுக்க நெறிமுறைகளை கட்டாயமாக்குவதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு நல்ல அறிவார்வமும் ஆவலும் உருவாகின்றன. இத்தகைய மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவ மேதைகள் ஒருபுறமிருக்க, இந்த காலத்தைச் சேர்ந்த, இங்கிலாந்தின் மிகச் சிறந்த கவிதைகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பட்டதாரிகளிடமிருந்து வழங்கியனவாகும். பிரித்தானியா பழமையோடு பெருமையையும் காத்துவரும் பல்கலைக்கழகங்களை அமெரிக்க அறிஞர் எமர்சன் மனத்தில் தோன்றிய காட்சிகளை வரைந்த திறம் ஆங்கிலக் கட்டுரைச் செல்வத்தில் அரிய புதையலாகத் திகழ்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *