பேராசிரியர் அழகேசன் மறைவு!
============================
பேராசிரியர் அழகேசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தொல்காப்பியத்தில் தோய்ந்த புலமையோடு, செந்தில், கந்தன் சேவடியையே நினைந்துருகும் நெஞ்சத்தவராய் வாழ்ந்தாய். அவருடைய அருமைத் துணைவியார், தூத்துக்குடியில் ஒப்பறிய மருத்தவராகத் திகழ்பவர். இருவரும் பத்து நாட்களுக்கு முன்னர், சென்னை வந்து ரேலா மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர்.
பெருந்தகை அழகேசன், உருக்கமுடன் பேசியதோடு, தொல்காப்பியம் பற்றிய என்னுடைய நூல்களை நான் ஊர் சென்றதும் அனுப்புவேன் என்றார். அம்மையாரைப் போல கணவரை காத்து மருந்தளிப்பவர் உலகில் சிலரே இருப்பர்.
அருமை பேராசிரியர், சென்னைக்கு திரும்பி வருவேன் என்று சென்றார். திரும்பி வராத இடத்திற்கே சென்று சேர்ந்தார்.
பேராசிரியர் பிரிவு, தமிழ் இலக்கணத்திற்கு வாய்த்த பேரிழப்பாகும். அவருடைய துணைவியார் மருத்துவர் இராஜேசுவரிக்கும், மகன் சுதன் குமாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment