குறுந்தொகை மாநாடு – 2002
=========================
மருத்துவ மாமணி தாரா நடராசனின் தலைமையுரை
==============================================
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூல்களுக்குச் சங்க இலக்கியங்கள் என்று பெயர். அக்காலத்தில் தோன்றிய பாடல்கள் எல்லாம் வகைப்படுத்தப் பெற்றுத் தொகுக்கப்பட்டன. அகம், புறம் என்னும் பொருளில் வீடு – நாடு என்ற நிலையில் பிரிக்கப்பட்டன. எட்டுத் தொகுப்புகளைக் கொண்ட ஒரு நூல் எட்டுத்தொகை பத்துத்தொகுப்புகள் உள்ள ஒரு நூலைப் பத்துப்பாட்டு என்றும் அழைத்தனர். ஆகவே பாட்டும் தொகையும் ஒன்று கூறினால் சங்க இலக்கியமாகும். பலர் கூடியிருந்து பேசி மகிழ்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போக்கு நாகரிகம் முதிர்ந்த நிலையில்தான் மலரும் என்பார்கள் . ஆகையால், புலவர் கூடியிருந்து முடிவு செய்ததன் விளைவாகச் சங்க இலக்கியம் உருவாயிற்று.
பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, வயது , உயரம், வகுப்பு பார்த்துப் பிரிப்பதுபோலப் புலவர்களும் பாடல்களை அளவுகளை – வரிகளைக் கணக்கிட்டும் பிரித்தார்கள். நீண்ட நடுத்தர, குறைந்த அடிகளை உடைய பாடல்கள் என்று வகுத்தார்கள். தொகுத்தும் கூறினார்கள்.
நீண்ட அடிகளை உடைய பாடல்கள் – நெடுந்தொகை என்று கூறப்பட்டது. இதற்கு அகநானூறு என்ற பெயருண்டு. இது 13 முதல் 31 அடிகள் உள்ளவை.
அளவோடு கூடிய நடுத்தர அடிகளைக் கொண்ட நூல் நற்றிணை எனப்பட்டது. இது 9 அடிகள் முதல் 12 அடிகள் உள்ள பாடல்கள் கொண்டவை.
இதற்கு அடுத்துக் குறைந்த அளவு தொகுப்பு அடி அளவுகளைக் கொண்ட குறுந்தொகை எனப்பட்டது.
குறுந்தொகை 4 அடி முதல் 8 அடி வரையுள்ள பாடல்கள் உள்ளவை. இந்த அடி அளவை நோக்கும்போது, இம்மூன்று நூல்களுமே ஒன்றன்பின் ஒன்றாக, அடுத்துத் அடுத்து தொகுக்கப் பெற்றவையோ எனக் கருத இடமுண்டு.
சங்கப் பாடல்கள் பலவற்றுக்கு ஆசிரியர்களாகத் திகழும் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலியோர் பாடல்கள் இந்தக் குறுந்தொகையுள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, இது மற்ற நூல்களுக்கு முற்பட்டது என்று கூறலாம். குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, 401 பாடல்கள் உள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன் , இன்று இருப்பதுபோன்ற மக்கள் தொகை இருந்திருக்காது. பெண் கல்வி என்பதும் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். ஆனால் மிகவும் நெருக்கம் வரவும் மக்களிடையே இருந்திருக்கும். பெண்களுக்கு வீட்டில் பொறுப்பு அதிகம் இருந்திருக்கிறது. வீட்டிலேயே அடைபட்டும் இருந்தால் இன்று சமையல் என்பதுகூட, பெரிய தண்டனையாகச் சிலருக்கு இருக்கிறது. ஆனால் அன்று சமையலறைதான் சமுதாயக் கூடமாகும்.
விருந்தோம்பல் முதலானவை பெரும்பாலும் அன்று வீட்டிலேயே கவனித்துக் கொள்ளும் முறை இருந்தது. இன்று அப்படி இல்லை எங்கும் உணவகங்கள் உள்ளன.
பெண்கல்வி உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது. இருபாலாரும் துரிதக் கதியில் செயல்படுகின்ற காலம் இது
இந்த நிலையில் காதல் வாழ்வு, குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, விருந்தினர் உபசரிப்பு, வீட்டைக் கட்டிக் காத்தல் முதலியன கேள்விக் குறியாகிவிட்டன. திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள், திருமணத்தால் தன் கல்வி உயர்வும், திறமையும் தேர்ச்சியும் குறைந்துவிட்டன என்று கருதுபவர்கள், குழந்தைப்பேறு என்பது வேண்டாமென்பவர்களும், குழந்தைகளை வளர்ப்பதை அரசாங்கம் ஒரு கடமையாக எடுத்துக் கொள்ளக்கூடாதா என்று சிங்கப்பூர் பிரதமர் ஒருமுறை கூறினார். இந்தச் சூழ்நிலையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகம் இருந்த வாழ்க்கை முறையில் வெகு சில கற்பனைகளையும், சில நடப்புகளையும் வைத்தும் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்புதான் குறுந்தொகை. முன்பின் தெரியாதவர்கள், சாதி வேறுபாடு, இல்லாத நிலை, எதிர்பாராமல் அலுவலகத்திலோ, படிக்கும் இடத்திலோ, விபத்து நிகழ்ந்த இடத்திலோ, நண்பர்கள் வீட்டிலோ பயணத்திலோ, வணிகத்திலோ, எங்கோ இரண்டு பேர் சந்தித்துக் காதல் மணம் செய்துகொள்வது போன்ற நிலைதான் அன்றிருந்தது. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பாடல், படத்தில் கூட வந்தது. ஒரு வரிசை சொல்கிறேன்.
நீ யாரோ நான் யாரோ
நீ வேறோ இன்றி நாள் வேறோ
இந்தப் பாடல் குறுந்தொகையாக வரும் ஒரு பாடலின் நிழல். அந்தப் பாடல்.
1) யாயும் ஞாயும் யாராகியரோ
(என் அன்னையும் உள் அன்னையும் எங்கெங்கே இருந்தார்கள் அவர்கள்
யாரோ)
2) எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
(என் தந்தையும் உன் தந்தையர் எந்த வகையிலும் உறவுடையவர்கள்
இல்லையே)
3) யானும் நீயும் எவ்வழி அரிதும்
(நானும் நீயும் எப்படித்தான் அறிந்து இணைந்தோம்)
4) செம்புலப் பெயல்நீர் போல
(தரையில் செம்மண்ணில் கலந்த மழைநீர் போல)
5) அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே
(நாம் கொண்ட அன்பினால் கரைந்துபோய்த் தொடர்ந்து வழிவழியாகத்
தடநிறைகள் நடக்கப் போகின்றன)
இந்த ஐந்து வரிப் பாடலின் இயற்கையை அமெரிக்கர்கள் பெரிதும் வியந்ததால் தான் என்ற பேராசிரியர் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துாண்டியது. இந்தப் பாடல்தான் என்பது நூலின் பெயர்)
இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு, இதை எழுதியவர் யார் என்று தெரியாமல் போய்விட்டது. சிவாஜியாக நடித்ததால் சிவாஜி கணேசன் என்ற பெயர் ஏற்பட்டும் பின்னர்ச் சிவாஜி என்று நிலைத்துவிட்டதுபோல, இந்தப் புலவர் பெயர் பாட்டில் வந்த உவமை காரணமாகச் செம்புலம் பெயல்நீர் என்றே ஆகிவிட்டது.
தனது கடமைகளை மிக நன்றாக உணர்ந்தவர்கள் சங்கக் காலத்தில் வாழ்ந்த மகளிர் என்று கூறலாம். ஒரு பெண்ணாகவும் புலவராகவும் இருந்த பொன்னடியார் என்பார்.
தாயின் கடமை மகளைப் பெறுதல்,
தந்தையின் கடமை சான்றோனாக்குதல்
வேந்தனின் கடமை நல்லொழுக்கமுடையவனாக்குதல்,
கொல்லனின் கடமை வேல் எடுத்துத் தருதல்
இளைஞனின் கடமை போரில் வெற்றி பெறுதல்,
என்ற பாடல் உங்களுக்குத் தெரிந்த பாடல். எனவே மகளிர் நல்ல அறிவுத் திறம் உடையவர்களாகப் பழங்காலத்தில் இருந்தார்கள்.
ஒளவையார் அரசர்களுக்கு இடையில் தூது சென்றது, பெண்களின் நிலையைக் காட்டும்.
குறுந்தொகையில் பாடல் இடம் பெறும் மகளிர் அறிவுடையவர்களாக, சிறந்த பேச்சுத்திறன் உடையவர்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
என்னுடைய தொழில் மருத்துவம். என்னுடைய குழல் தமிழ். சமீபத்தில் ஒரு நூலைப் புரட்டினேன். 1940ஆம் ஆண்டு நடந்த “குறுந்தொகை மாநாட்டில்” என் மாமனார் உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை உரையாற்றியிருக்கிறார். 62 ஆண்டுகள் கழிந்து குறுந்தொகை பற்றிய பேச்சுக்கு நான் தலைமை தாங்குவது எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கிறது. மொழிபெயர்ப்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.பாலசுப்பிரமணியன் கவிஞராவார். அவருடைய துணைவியார் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய முதுநிலைச் செவிலியராவார். மொழிப் பெயர்ப்புத் துறையில் இருமொழிப் புலமையோடு விளங்கிய பண்பாளர் பாலசுப்பிரமணியன், டாக்டர் மு.வ எழுதிய கரித்துண்டு என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றவர்.
====================

Add a Comment