தின செய்தி நாளிதழில் இன்று (31.08.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
இமயம் வளர்ந்த வரலாறு
………………………………………
எழுத்துச் சிகரம் நாகை தருமன் புரட்சித் தலைவரைப் பற்றி 1951 முதல் 1987 வரை தொகுத்த பட்டியலினை சென்றவாரம் வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியை பார்ப்போம் ….. 2.10.1984: அண்ணல் காந்தியடிகள் சிலைக்குப் புரட்சித் தலைவர் மாலை அணிவித்தார். 6.10.1984: அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் இந்திராகாந்தி, முதலமைச்சர் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு தொலைபேசி வாயிலாக அறிகிறார். 16.10.1984: பிரதமர் அன்னை இந்திராகாந்தி நேரில் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பார்த்து விட்டுச் செல்கிறார். வாழ்த்து கூறுகிறார். எழ முயல்பவரைப் படுக்கச் சொல்கிறார் அன்னை இந்திரா “உங்களுக்காக தமிழ்நாடு மட்டுமல்ல இந்த நாடே பிரார்த்திக்கிறது. முன்பு சங்கடங்களைச் சமாளித்தது போலவே இந்த நெருக்கடியையும் நீங்கள் சமாளிப்பீர்கள்” அன்னை இந்திராகாந்தியின் ஆசி இது. இதுதான் அவர்கள் இருவரது கடைசி சந்திப்பு புரட்சித் தலைவரைப் பார்க்கக்கூடப் புரட்சித் தலைவியை அனுமதிக்காமல் மறுக்கின்றனர். வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பிரெட் மேன் என்ற டாக்டர் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்றார். ஜப்பானிலிருந்து டாக்டர் கானு வந்தார். தமிழகம் முழுதும் வழிபாடு. மக்கள் கலக்கம் – கவலை- கண்ணீர் பிரதமர் இந்திரா சுட்டுக்கொலை! நவம்பர் 1984: பிரதமர் ராஜீவ் காந்தி உதவியினால், தனி விமானத்தில் டாக்டர்கள் துணையோடு புரட்சித் தலைவர் அமெரிக்கா செல்கிறார். புரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். 27 நவம்பர் 1984: ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் புரட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 19.12.84: மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுகிறது- புரட்சித் தலைவருக்கு, பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதி சிறுநீரகம் கொடுத்து உதவுகிறார். 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது! 24.12.1984: பொதுத் தேர்தலின் அனைத்திந்திய அண்ணா தி.மு.க வெற்றி! மூன்றாவது முறையாகப் புரட்சித் தலைவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2.2.1985: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை வருகை பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கிறது அதிகாலையில் தலைவரைக் காண முதல் நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது முதல்வராகப் பதவியேற்பு! பேசும் திறனில் பெரும்பகுதியை இழந்திருந்த புரட்சித் தலைவர் தன் மன உறுதியால், விடாமுயற்சியால் ஓரளவு தேர்ச்சி பெற்றார். புரட்சித்தலைவரின் சாதனை வரிசை மேல்சபைக் கலைப்பு Ø 25 ஆயிரம் பேருக்கு வேலை. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி. சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி 13.7.1986: எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மாநாடு. மதுரையில் கூடியது. புரட்சிச் செல்விக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீண்டும் முக்கியத்துவம். கொள்கை பரப்புச் செயலாளராக ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவர் மனம் திறந்து பாராட்டு! இரண்டாவது நாள் ஆறு அடி நீளமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் முதல்வர் எம்.ஜி.ஆரிடம். புரட்சிச் செல்வி வழங்கினார். செப்-1986: அமெரிக்காவுக்குப் புரட்சித் தலைவர் பயணம், மருத்துவப் பரிசோதனை முடிந்து திரும்பினார். அக்டோபர்-1986: புரட்சித் தலைவரே கழகப் பொதுச் செயலாளரானார் ஆட்சியின் சாதனைப் பட்டியல் சூலை 1987: கடற்கரைக் கூட்டம். புரட்சித் தலைவருக்குப் பிரதமர் இராஜீவ் காந்தி புகழ்மாலை! ஆகத்து 1987: அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு செப்டம்பர் மாதம் திரும்பினார். 22.12.87: நேரு சிலையைப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைத்தார். புரட்சித் தலைவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும். 24.12.87: புரட்சித் தலைவர் அதிகாலை நேரத்தில் உடலால் மறைந்தார். உணர்வுகளால் மக்களோடு ஒன்றிவிட்டார். இராஜாஜி மண்டபத்தில் நல்லுடல் வைக்கப்பட்டு பிரதமர் இராஜீவ் காந்தி, மத்திய, மாநிலங்களின் அமைச்சர்கள் அஞ்சலி, பிரமுகர்கள், மக்கள் அழுகை அலைகடல்கள் யாவும் ஆர்ப்பரித்துச் சென்னைக்கு வந்தது போல் கூட்டம் அதிர்ச்சியால் மாண்டோர்…. தீக்குளித்துச் செத்தவர்கள்…. விஷமருந்திப் பலியானோர்….. நெரிசலில் சிக்கி உயிர் துறந்தோர் ஏராளம்…. 25.12.87: பீரங்கி வண்டியில் புரட்சித் தலைவர் உடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம். மாலை 3 மணியளவில் தான் பின்பற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்கும் நினைவிடம் அருகில் புரட்சித் தலைவர் ஓய்வு கொள்கிறார். துப்பாக்கிக் குண்டுகள் முழங்குகின்றன! இராணுவத்தினர்… முப்படையும் இதோ மரியாதை செய்கின்றன! மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது எழுத்துச் சுடர் நாகை தருமன் எழுதிய வரிகள் வருமாறு:- புரட்சித் தலைவர் இறந்துவிட்டாரா? மறைந்து விட்டாரா? சரியாத சரித்திரம் படைத்து, சகாப்தமாகத் திகழ்பவரை….. சாவு தொடமுடியுமா? வற்றாத வரலாறாகத் திகழ்ந்த வானமளந்த புகழ்கொண்ட…. வள்ளலை நம்மிடமிருந்து அள்ளிச்செல்ல காலனும் மனம் கலங்குவானே! புரட்சித் தலைவர், உலகம் முழுதும் உள்ள கருணை உள்ளங்களில் குடி கொண்டுள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா. மக்கள் மத்தியில் அண்ணாவுடன் புரட்சித் தலைவர்! அந்த ஏழை எளிய மக்களின் சிரிப்பில் அண்ணாவும், அவரது அருமைத்தம்பி, இதயக்கனி புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுவதைக் காணுங்கள். அண்ணா புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி மக்கள்! இயேசு நாதர்’ ”மூன்று நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன்! தோன்றுவேன் என்றார். இதோ….. முதல்வர் புரட்சித் தலைவி மக்கள் மத்தியில் புரட்சித் தலைவர்……. நம் எம்.ஜி.ஆர்…. பிறந்துவிட்டார்….! முதல்வராகப் பதவியேற்பு! மக்களுக்கு உதவி. வடிவத்தால் – வேறுபட்டாலும், செயல்களால் ஒன்றுபடுவதைக் காணுங்கள்! சாதனைகள் புரட்சித் தலைவர் சத்துணவு உண்ணும் குழந்தைகளுடனும் தாய் உள்ளம் கொண்டவரைத் தலைவராக – முதல்வராகக் கண்டோம்! அவர்…. புரட்சித் தலைவர்! ‘பாரத ரத்னா’ டாக்டர் புரட்சித் தலைவர்! புரட்சித் தலைவி மக்களுக்குப் பரிவுடன் பொருள்கள் வழங்குதல் தாயே- தலைவியாக – முதல்வராகக் காண்கின்றோம்! இதோ… புரட்சித் தலைவி! புத்துலகம் படைக்கப் புறப்பட்ட புதுமைப்பெண்….. எழுச்சி மிக்க இணையற்ற தலைவி- முதல்வி- புரட்சித் தலைவர் கண்ட கனவுகளை நனவாக்க, அவர் வாரிசாக அவராலேயே அறிமுகப்படுத்தப்பட்ட தலைவி….. மதுரையில் நடைபெற்ற வீரவரலாறு கூறும் வெற்றி மாநாடு, ஊர்வலம்! புரட்சித் தலைவி மகிழ்ச்சி மக்கள் ஆதரவெனும் மகத்தான சக்தி பெற்ற தலைவி…. டாக்டர் புரட்சித் தலைவி! ஆமாம்…. அதே கனிவு….. அடடா… அதே கருணை….. கண்டிப்பு…. தூங்காமை… கல்வி… துணிவுடமை…. சட்டப்பேரவையில் அண்ணா படம் அருகில் புரட்சித் தலைவர் படத்தைத் திறந்து வைத்தார். நீங்காது கொண்டு, தமிழகம் தழைத்து வளர தளராது பாடுபடும் தனிப்பெரும் தலைவி! தமிழ்நாடு முதன்முதலாகத் தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர்! பொதுத் தேர்தலில் புதிய சாதனையாக அமோக ஆதரவு பெற்ற வீராங்கனை தமிழக மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆர் நடை….. புரட்சித் தலைவர் நடப்பது உற்று கவனியுங்கள்…. தமிழகத்தை….. தமிழக முதல்வரை! இதோ!…..எம்.ஜி.ஆர் பிறந்து விட்டார்… வந்துவிட்டார் எம்.ஜி.ஆர் பிறந்தார் தமிழ்நாட்டில் 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு 9.12.78: புரட்சித் தலைவர் அயல்நாட்டுப் பயணமாக 40 நாட்கள் சென்று திரும்புதல் 24.9.1979: பெரியார் மாவட்டம் தொடக்கம் 25.5.1983: கிருஷ்ணா நதிநீர்த் திட்டத் தொடக்கம் 20.9.1983: புரட்சித் தலைவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்குதல் 20.11.1983: புரட்சித் தலைவருக்கு கலை உலகம் பாராட்டுப் பெருவிழா 2.3.1984: அன்னை தெரேசா மகளிர் பல்கலைக் கழகம் தொடக்கம் 15.7.1984: காமராசர் மாவட்டம் தொடக்கம் 16.7.1984: இராமநாதபுரம் மாவட்டம் தொடக்கம் 17.7.1984: பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் தொடக்கம் 16.9.1984: தஞ்சையில் மாமன்னர் ராஜராஜனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா 15.9.1985: அண்ணா மாவட்டம் தொடக்கம் 15.9.1985: புரட்சித் தலைவருக்கு அண்ணா விருது வழங்குதல் 5.2.1986: போப் ஆண்டவருக்கு வரவேற்பு 14.4.1986: மதுரை உலகத்தமிழ்ச் சங்கம் தொடக்கம் 19.10.1986: வ.உ. சிதம்பரனார் மாவட்டம் தொடக்கம் 4.2.1987: தில்லியில் பாரதி சிலை திறப்பு 25.3.1987: திருவரங்கம் குடமுழுக்கு 14.4.1987: தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தை இராஜீவ் காந்தி தொடங்கி வைத்தார். 12.12.1987: பிரதமர் இராஜீவ், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், சென்னையில் பண்டித நேருசிலை திறப்பு விழாவில் பங்கேற்பு தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை… – ஔவை நடராசன் தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment