POST: 2020-10-16T15:01:27+05:30

ஆற்றமுடியாத துயரம்

அன்பிற்குரிய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர்
டாக்டர் ஒளவை அருள் அவர்களுக்கு ,

வணக்கம்.
தங்கள் அன்னையாரின் மறைவை அறிந்து பெரிதும் வருந்தினேன் .
அவர்கள் உங்களைக் ” சான்றோன் எனக் கேட்ட தாய் ” ஆவர் .
அவர்கள் தஞ்சையில் இருக்கும் போது என்னை மிகவும் ஊக்கப்படுத்தி மேலும் மேலும் எழுதத் தூண்டினார்கள்

அவர்களை நான் எப்படி மறக்க முடியும் ?

அன்னை தந்தை நிழலில் வளர்ந்தவர் நீங்கள்.தாயின் நிருவாகத் திறனும் – தந்தையின் அறிவுத் திறனும் உங்கள் உடைமையாகப் பொலிக .

தந்தையார் உடல்நலம் பேணுங்கள்.
அவர்கள் தமிழ்நாட்டின் சொத்தாவார் .

மேடைகள் தோறும் ஒலித்த அந்த யாழின் நரம்பு கட்டுக் குலையாதவாறு எழுந்துவர இறைவனை வேண்டுகின்றேன் .

அன்பன்

பேராசிரியர் முனைவர்
கு .வெ .பாலசுப்பிரமணியன்
எம் .ஏ .,எம்.பில் .,பி.எச் .டி .,

திருவள்ளுவர் ஆண்டு 2051 ,
ஆவணி 4

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *