POST: 2020-10-27T10:17:52+05:30

கலைமாமணி டி கே எஸ் கலைவாணன்
23 8 2020

சொல்லின்செல்வர்
பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள்
அண்ணாநகர் கிழக்கு
சென்னை – 600 102

பேரன்புக்கும் பெருமதிப்பிக்கும் உரிய பெருந்தகையீர் !
பணிவார்ந்த வணக்கம்.
தங்களின் பாசமிகு மனைவியாரும் ,எங்களின் மதிப்பிற்குரிய அண்ணியாரும் ( உறவின் முறையில் மதினியார் ) தலைசிறந்த மருத்துவரும் – சிறந்த கலாரசிகரும் ,தங்கள் இனிய குடும்பத்தலைவியாகவும் விளங்கிய திருமதி டாக்டர் தாரா நடராஜன் அம்மையார் மறைவெய்திய செய்தி திருமதி .வாசுகி கண்ணப்பன் அவர்கள்மூலம் அறிந்து மிகுந்த மன வருத்தமடைந்தேன்.

” தாயிற் சிறந்த கோயிலுமில்லை ” என்பது அவ்வையின் வாக்கு .எனவே குடும்பம் என்னும் கோயிலில் ஒரு தெய்வமாக விளங்கும் தாயின் இழப்பு என்பது என்றும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் .

அன்புத்துணைவியாரை இழந்து வருந்தும் தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தாருக்கும் ,தாயை இழந்து வருந்தும் தங்கள் பிள்ளைகளுக்கும் ,எனக்கு நன்கு அறிமுகமான தம்பி அருள் அவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் – இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

வாழ்க தாரா அம்மையார் புகழ் !

அன்புள்ள
டி கே எஸ் கலைவாணன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *