மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 59)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VII)”
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
காட்சி – 98
அருப்புக் கோட்டை தொகுதியில் சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட புரட்சித்தலைவர் 29 ஆயிரத்து 378 வாக்கு வித்தியாசத்தில் ( தமிழகத்திலியே அதிக வாக்கு வித்தியாசம் ) வெற்றி !
காட்சி – 99
அண்ணா நினைவிடத்தில் புரட்சித்தலைவர் அஞ்சலி. ( 30.6.77 )
காட்சி – 100
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் பாபு ஜெகஜீவன்ராம் தந்தை பெரியார் சிலை திறந்துவைக்கிறார். விழாவில் டாக்டர் நாவலர் அ .தி மு கழகத்தில் இணைகிறார்.
காட்சி – 101
புரட்சித்தலைவர் அரசு சாதனைகள். பெரியார் எழுத்துச்சீர்திருத்தம், தந்தை பெரியார் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுதும் கொண்டாடியது. நினைவுநாள் நிறுவியது, சத்துணவுத் திட்டம், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்தது. ராஜராஜ சோழன் இலக்கிய விருது வழங்கச் செய்தது… காமராசர், பாவேந்தர் பாரதிதாசன் ,அன்னை தெரசா பெயரால் கல்லூரி… அண்ணா பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ் மாநாடு, உலகத்தமிழ்ச்சங்கம்…. ( 14.4.86 )
சென்னைக்குக்குடிநீர் – தெலுங்கு கங்கைத்திட்டம்…
காட்சிகள் காண்பிக்கலாம்.
காட்சி – 102
கழக ஆட்சி கலைப்பு (பிப்ரவரி,1980 ) நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. ( மே,1980 ) நடந்த பொதுத்தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு, புரட்சித்தலைவர் அமோக வெற்றி. கழகம் தனிப் பெரும்பான்மை பெற்றது. புரட்சித் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். (9.6.80)
காட்சி – 103
புரட்சித்தலைவர் முன்னிலையில் புரட்சி செல்வி ஜெயலலிதா அவர்கள் கழக உறுப்பினராகச் சேர்ந்தார். (1982)
கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
காட்சி – 104
சத்துணவுத் திட்டச் செயற்பாட்டுக் கண்காணிப்பு உயர் மட்டக் குழு உறுப்பினராக புரட்சி செல்வி ஜெயலலிதா நியமனம்.
காட்சி – 105
புரட்சி செல்வி ஜெயலலிதா தனது சொந்தச் செலவில் ஒரு லட்சம் ரூபாயில் அன்னை சந்தியா பெயரில் சத்துணவுக் கூடத்தை உருவாக்கித்தருகின்றார்.
காட்சி – 106
மாநிலங்கள் அவைத் தேர்தலில் புரட்சிச் செல்வியைப் போட்டியிடச்செய்து, நாடாளுமன்றத்துக்கு புரட்சி தலைவர் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அமர்ந்து கொள்கை முழக்கமிட்ட இருக்கை ( 185 )ல் அமர்ந்து செயல்படுகிறார்.
அண்ணாவின் குரல்… புரட்சித்தலைவி குரல்… ஆங்கிலப்பேச்சு.
காட்சி – 107
சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சி தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி, பெருமை கொள்கிறது. ( 1983 )
காட்சி – 108
கலை உலகம் பாராட்டு (20.11.83 படக்காட்சி
காட்சி – 109
அண்ணல் காந்தி சிலைக்குப் புரட்சி தலைவர் மாலை அணிவிக்கிறார். (2.10.84)
படக்காட்சி அல்லது ஒளிப்படம்
காட்சி – 110
இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன். படக்காட்சிகள், பாடல்காட்சிகள்
காட்சி – 111
புரட்சித் தலைவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல். ( 6.10.1984 ) பிரதமர் இந்திரா தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உடல் நலம் குறித்து அறிந்து கொள்ளுதல்.
காட்சி – 112
பிரதமர் இந்திரா நேரில் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரை பார்க்கிறார். வாழ்த்து கூறுகிறார். அவரைக்கண்டதும் எழமுயன்றவரை படுக்கச் சொல்கிறார்.
அன்னை இந்திரா குரல்… “உங்களுக்காகத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே பிரார்த்தனை செய்கிறது. முன்பு சங்கடங்களைச் சமாளித்ததைப் போலவே இந்த நெருக்கடியையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.”
காட்சி – 113
வெளிநாட்டு மருத்துவ நிபுணர் பிரெட்மேன் என்ற டாக்டர் மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்கிறார்.
காட்சி – 114
ஜப்பானிலிருந்து டாக்டர் கானு வந்து சிகிச்சையளிக்கிறார்.
காட்சி – 115
இந்து மதக்கோவில் பிரார்த்தனை.
காட்சி – 116
கிருத்துவ மதம் கோவிலில் பிரார்த்தனை.
காட்சி – 117
இசுலாமிய மசூதியில் பிரார்த்தனை.
காட்சி – 118
மருத்துவமனையில் கவலையுடன் மக்கள் புரட்சித்தலைவரைக் குறித்துக் கேட்பது.
காட்சி – 119
பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, மக்கள் துயரம் (நவம்பர், 84) வானொலிச் செய்தி அல்லது தொலைக்காட்சி படக்காட்சி.
காட்சி – 120
பிரதமர் ராஜீவ் காந்தி பேசுவதுபோல் காட்சி .தனி விமானத்தில் டாக்டர்கள் துணையோடு, புரட்சித்தலைவர் அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார். ஒளிப்படம் காண்பித்தல் அல்லது படக்காட்சி.
காட்சி – 121
ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் புரட்சித்தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுதல் (27-11-84)
காட்சி – 122
புரட்சித்தலைவருக்குப் பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதி சிறுநீரகம் (மாற்று சிறுநீரகம்) பொருத்தப்படுகிறது. 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. செய்தி வாசித்தல் (குரல்)
காட்சி – 123
பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் வெற்றி. 24.12.84
மூன்றாவது முறையாகப் புரட்சித்தலைவர் முதல்வராகின்றார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல்.
காட்சி – 124
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை திரும்புகிறார். சிகிச்சை முடிந்தது. (2.2.85)
பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கின்றது. புரட்சித்தலைவர் மகிழ்ச்சி… மக்கள் ஆரவாரம்.
படக்காட்சி காண்பிக்கலாம்…..
காட்சி – 125
முதலமைச்சராகப் பதவியேற்பு. (10.2.85) மூன்றாவது முறை.
படக்காட்சி காண்பிக்கலாம்…..
காட்சி – 126
பேரறிஞர் அண்ணா பவளவிழா மலர் வெளியீடு முதல்வர் சிகிச்சைக்காகச் செலவிட்ட ரூ.96 லட்சம் நிதியமைச்சர் நாவலரிடம் வழங்குதல். (30.6.85)
காட்சி – 127
சாதனைகள்…..
மேல்சபைக் கலைப்பு,
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி கோரிக்கை!
சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி.
காட்சி – 128
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு மதுரையில் கூடியது. கொள்கை பரப்புச் செயலாளராகப் புரட்சிச்செல்வி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார் . புரட்சித்தலைவர் பாராட்டுரை! (13.7.86)
ஆறு அடி நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை முதல்வர் புரட்சித் தலைவரிடம் புரட்சிச் செல்வி வழங்குதல். (14.7.86)
புரட்சித்தலைவர் பாராட்டுரை…. குரல், படக்காட்சி காண்பிக்கலாம்.
காட்சி – 129
மருத்துவப் பரிசோதனைக்காகப் புரட்சித்தலைவர் அமெரிக்கா பயணம். பரிசோதனை முடிந்து திரும்புகிறார். (செப்.86) படக்காட்சி அல்லது செய்தி.
காட்சி – 130
புரட்சித்தலைவர் கழகப் பொதுச்செயலாளராகிறார். அக்டோபர் 1986.
காட்சி – 131
கடற்கரைக் கூட்டம், புரட்சித்தலைவருக்குப் பிரதமர் ராஜீவ் காந்தி புகழ்மாலை. (சூலை, 1987) படக்காட்சி
காட்சி – 132
அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு புரட்சித்தலைவர் திரும்புகிறார். (ஆகஸ்ட், 1987)
காட்சி – 133
சென்னை, கத்திப்பாராச் சந்திப்பில் நேரு சிலையைப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொண்டு முதல்வர் புரட்சித்தலைவர் திறக்கச் செய்கிறார்.
நிகழ்ச்சி….. படக்காட்சி…..
காட்சி – 134
புரட்சித்தலைவர் சாதனைகள்.
இலவசப்பாடநூல் வழங்கும் திட்டம்,
காவல்துறையினருக்கு விருது வழங்குதல்,
தமிழ் அறிஞர்களுக்கு விருது,
பெரியார் மாவட்டம் தொடங்கியது (24.9.1979)
காமராஜர் மாவட்டம் தொடக்கம் (15.4.84)
இராமநாதபுரம் மாவட்டம்… (16.7.84)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் … (17.7.84)
சிதம்பரனார் மாவட்டம் தொடக்கம் (19.10.85)
அண்ணா மாவட்டம்
ஏழை இசுலாமியர் மற்றும் விதவைகளுக்கு இலவசமாகப் புத்தாடைகள் வழங்குதல்…
நலிந்த பிரிவினருக்கு இஸ்திரிப் பெட்டி போன்றவை வழங்குதல்…
காட்சி – 135
குடும்பத் தலைவர்…. வயது கூடிக் காணப்படுதல் ( தொடக்கக் காட்சி )
குடும்பத் தலைவர்: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா. அந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிரிப்பில் அண்ணாவும், புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுகிறார். சரித்திரம் படைத்த சாமானியர்களின் தலைவர், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் புகழ் இந்த மண்ணும் விண்ணும் உள்ளவரை நிலைத்திருக்கும். புரட்சித்தலைவர் பேசும்போது ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே’ என்பார்.
தாயைப் போற்றும் தன்னிகரற்ற தலைவர்களைத் தாய் தமிழகமும் தாய்மொழி தமிழும் மறக்காது.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.
புரட்சித்தலைவர் மக்களுடன் தோன்றும் காட்சிகள்
‘தாயில்லாமல் நானில்லை’ – பாடல் ஒலிப்பது.
‘நாளைய வெற்றியைச் சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’- பாடல்
புரட்சித்தலைவர் வணக்கம் கூறும் காட்சி மக்களுக்குள் மறைவது.
காட்சி – 136
கலவையில் காஞ்சி மாமுனிவரைச் சந்தித்தது.
‘நல்லவனாக, மக்களுக்காக வாழ்ந்து மறைய வேண்டும்’ என்று வேண்டுகோள்.‘
காட்சி – 137
காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சந்திப்பு.
காட்சி – 138
டாக்டர் பிரீட்மேன், டாக்டர் கானு ஆகியோருக்குப் பரிசளித்தது.
காட்சி – 139
கல்பாக்கம் அனல் மின்நிலையத் தொடக்க விழா. பிரதமர் இந்திராவுடன், புரட்சித்தலைவர்.
காட்சி – 140
அறிஞர் அண்ணா விருது பெறுவது (15.9.85)
காட்சி – 141
தவத்திரு குன்றக்குடி அடிகளார், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார்,எழுதுவேங்கை கோவி.மணிசேகரனுக்கு விருது வழங்குதல்.
காட்சி – 142
போப் ஆண்டவருக்கு நினைவுப்பரிசு வழங்குதல் (5.2.86)
காட்சி – 143
திருவரங்கம் ராஜகோபுரம் குடமுழுக்குத் திருவிழா (25.3.87)
காட்சி – 144
ஒலிம்பிக் வீரர் பாஸ்கரனுக்கு சிறப்பு செய்தல்.
காட்சி – 145
மேட்டூர் அனல் மின் நிலைய விழா.
காட்சி – 146
தஞ்சையில் ராஜ ராஜன் 1000வது முடி சூட்டு விழா. (16.9.84)
பிரதமர் இந்திராவுடன் பங்கேற்பு.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment