சஷ்டி இயன்முறை மருத்துவ நிறுவனம்
செய்தி மடல் – இதழ் -2
பக்கம் எண் 1
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி .
காலம் நாளும் புதிய மாற்றங்களைக் கண்டு வளர வளர நோய்களும் நலிவுகளும் பெருகும்.நோய்களுக்கு மருந்து உட்கொள்வது போலத் தலைவலி ,கூனமைவு , கழுத்துவலி , தோள்வலி , முதுகு, மூட்டுவலி , உள்ளங்கால் வலி , இடுப்பு வலி என்று வலிகள் பெருகும்போது மருத்துவத்தில் ஒரு பகுதி என்றாலும் கூட மருத்துவர்கள் உடனே பரிந்துரைப்பது இயன் மருத்துவர் அறிவுரைகளை , இயன் மருத்துவ வித்தகர்களை நீங்கள் கண்டு பயிற்சி பெறுவது தக்கது என்று வலியுறுத்துவதை நாம் இப்போது காணலாம் .
அந்த வகையில் நீவுதல் , பிடித்தல் , ஒற்றடம் கொடுத்தல் , நடைப் பயிற்சி அமைவுப்போக்கி என்று பல்வேறு பயிற்சிகளைக் கற்றுத் தருகின்ற ஒருவகையான உடலியல் மருத்துவத்தோடு சேர்ந்த உயர் மருத்துவ சிகிச்சையாக இயன்முறை மருத்துவம் அமைந்திருக்கிறது.
இந்த இயன்முறைப் பயிற்சியில் வல்லவர்களும் இப்போது பெருகி வருகிறார்கள் ,உலகத்தில் இப்போது விளையாட்டுப் போட்டிகள் எங்கும் நடைபெறுவதால் – பங்குபெறுகின்ற வீரர்களுக்குப் பயிற்சி தருவதற்காகவே எவ்வளவு செலவு செய்தேனும் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் அங்கே அவர்களையும் அமர வைக்க வேண்டும் என்கிற கருத்து உலக அளவில் எங்கும் நிகழ்கிறது .
அந்த வகையில் இயன்முறைப் பயிற்சி மருத்துவராக விளங்கும் நண்பர் இரகுநாத் மனோகரனும் அவர் துணைவியாரும் ஒருசேர இந்தப் பயில் மருத்துவத்தில் முதனிலை பெற்று இந்தப் பயிற்சி அரங்கத்தை நடத்தி வருவது கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
நிறுவனம் வளர்ந்து வருவதும் அவர்கள் புகழ் ஓங்கி வருவதும் எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது .நான் பலமுறை நடக்க முடியாமல் அவ்வப்போது மூட்டு வலியினால் சில வேளைகளில் தொல்லைப்படத் தோன்றும்போது எல்லாம் எனக்குப் பயிற்சி அளித்த வகையில் என்னை நடக்க வைக்கவும் கை கால்களை நன்றாக வீசி நன்னடை பெறவும் பயிற்சி தந்த வகையில் அவரை நான் பாராட்டுகிறேன். வளர்ந்து வருகிற இயன்முறை மருத்துவதுக்கான செய்தி இதழை நிறுவனம் நடத்துவது காலத்தோடு வேண்டியது .
நிறுவனம் நடத்தும் நண்பர் இரகுநாத் மனோகரன் வெற்றி பெற வாழ்த்தி வரவேற்கிறேன் .
இந்தச் செய்தி மடல் ஓங்குக ! வாழ்க !! வெல்க !!!

Add a Comment