POST: 2020-12-10T11:40:31+05:30

என்னிதன் பண்பே !
_________________________________________

சேரமான் கோதை சிந்திய கண்ணீர்

யாங்குப் பெரிது ஆயினும்,

நோய்அளவு எனைத்தே,

உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்

கள்ளி போகிய களரியம் பறந்தலை ‘

வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு

ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ,

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ,

இன்னும் வாழ்வல்

என் இதன் பண்பே !

– புறம் 245.

இன்றைய நாள் ( 10 – 12 – 2020 ) கடந்த ஆண்டு வரை

எனக்குப் பொன்னாளாக இருந்தது .

இன்று 59 ஆம் ஆண்டைய

திருமண நாளை நினைவூட்டுகிறது .

தாராவின் படங்களையும் ,
இசை இயற்புலவர் விசயலட்சுமியிடம் வீணை கற்ற வித்தகமும்
பெயர்த்தியை வாழ்த்திய பெருமிதத்தையும்
இதனோடு இணைத்திருக்கிறோம் .

அமெரிக்காவில் வாழும் தமிழ்ச்செல்வி தேமொழி அவர்கள்
தொகுத்தெடுத்த காணொளிக்கு

என் கைகுவித்த வணக்கம் .

நெஞ்சில் அழல் மூட்டுகிறது .

ஆறுதல் எப்படிப் பெறுவது

– ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *