குடந்தை நகர்ப் புலவர் கோவே வாழ்க !
” குடந்தை நகர்க் கலைஞர் கோவே ” என்று தமிழ்க்கடல் உ வே சா அவர்களின் ஒப்பற்ற புகழைப் பாரதியார்
போற்றினார் .
” குடந்தை நகர்ப் புலவர் கோவே ” என்று பேராசிரியர் இராம.குருநாதனைப் பாரதியார் தொடரில்
பாராட்டி மகிழ்கிறேன் .
சிந்தனையாளர் – சீர்திருத்தவாணர் – பெரும் பேராசிரியர் – புனைகதையாளர் – கவியரசர் – நாடகச்செம்மல் –
சால்புத்திலகம் எனப் பேராசிரியர் புகழ் பாடுவதற்குச் சொற்கள் இன்னும் காத்திருக்கின்றன .
” கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ” யாக அங்கிங்கெனாதபடி எங்கும் சென்று தமிழ் வளர்ச்சிக்குத்
தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் .
எளிமைக்கு எவ்வளவு பெரிய வலிமை என்பதைப் பேராசிரியரிடம் தான்
பிறங்கிடக் கண்டேன் .
ஆழ்ந்த புலமை கனிந்த திறத்தால் அரிய ஆங்கிலக் கவிதைகளை மொழி பெயர்த்து அவர் வழங்கிய அளிப்பும் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமாகும் .
ஒருவிரல் கவிதையெழுதும் – மறுவிரல் காவியம் செய்யும் – நடுவிரல் நாடகம் புனையும் –
அடுத்த விரல்
வரலாறு எழுதும் –
கட்டை விரல் கட்டுரைகளை வரையும் என ஐந்து விரல்களையும் சேர்த்துப் புலமைச்
செழுமையில் வெற்றிக்கொடி ஏந்துகிறார் .
நல்லிசைப்புலமை நம்பியாகத் திகழும் பேராசிரியர் இராம .குருநாதன் தமிழக அரசிடமிருந்து
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றது தகுதிக்கு அமைந்த கவிகையாகும் .
நீண்ட தமிழால்
நிமிர்ந்த புகழ் ஒளிர
நீடு வாழ்க !! .
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment