POST: 2021-05-06T07:36:41+05:30

அமைச்சர் அரங்கநாயகம் மறைவு !
(16.1. 1931 – 29.4.2021)

அமைச்சர் அரங்கநாயகம் புரட்சித்தலைவர் ஆட்சியில் புகழோடு மிளிர்ந்தவர் .

பெருந்தகை கோவை .தம்பி – இயக்குநர் சந்திரசேகர் இடையில் நான் அவர் இல்லத்தில் பன்முறை விருந்துண்டவன்.

.தமிழக அரசில் அப்போது மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும் – தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறைச் அரசு செயலராகவும் பணியாற்றினேன் .

கல்விச் சீர்திருத்தத்தில் கரையில்லாத ஆர்வம் கொண்டிருந்தார் .

சீன நாடு சென்று திரும்பிய பின் சீனச் சிந்தனை என்று மேடைகளில் பேசினார் .

கடந்த பத்தாண்டுகளில் ஓரிருமுறை நயவுரை நம்பியோடு சென்று வந்தேன் .அப்போது கல்வியமைப்பையும் – அரசியல் முயற்சிகளையும் குறிப்பிட்டு நெடுநேரம் கலந்துரையாடினோம் .

ஆழ்ந்த சிந்தனையுடையவர் .

தனியார் கல்லூரிகள் என்ற தருவை நட்டுவளர்த்துத் தழைக்கச் செய்த தனிப்பெருமை கொண்டவர் .

அமைச்சரின் துணைவியார் புலவர் தேர்வுப்பெற்ற தமிழாசிரியர் –

அமைதியே வடிவம் பூண்டவர் . முதுமை நலிவால் ஆசிரியர் – அமைச்சரை நாடிழந்துவிட்டது .

அமைச்சர் அரங்கநாயகம், கல்வித்துறையில் இருந்தார்.

தமிழ்வளர்ச்சித்துறை, அப்போது கல்வித்துறையின் வயமிருந்தது.

ஆரவாரமில்லாமல் அமைதியாக, எதையும் ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பது, அவரது குணம்.

எந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்று நாம் எப்போது கேட்டாலும், மனம் கோணாமல், படித்துப் பார்த்துக் கையொப்பம் இடுவார்.

கல்வியைப் பற்றிய கருத்துரைகள் எங்கிருந்தாலும், அவற்றைத் திரட்டி வைத்துக் கொள்வார்.

யாரைப் பார்த்தாலும், தோள்தட்டிப் பேசுகிற தோழமை உணர்ச்சியோடு, என்ன வேண்டும் என்று பரிவுடன் கேட்பார்.

என் மக்கள் மூவரும் கிறித்தவக் கல்லூரி மேனிலைப்பள்ளியில் பயின்றபோது ஒருமுகம் புகழ்ந்து பாராட்டிய முருகன் அதியமான் அமைச்சரின் திருமகன் அமெரிக்காவில் மாமருத்துவராகப் புகழோடு விளங்குகிறார் .

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *