POST: 2021-05-20T10:27:27+05:30

மாமனிதர் பூண்டி ஐயா வாண்டையார் !
(11.5.1929-17.5.2021)

உயிர் பெற்றுத் துளிர்க்கும் போது தொடங்கி ,உலரும் நாள் வரை நறுமணத்தை நல்கும் திருப்பெயர் துளசி வாண்டையாராகும் .

வேளாண்மைத்திலகம் – கல்விநெறித்தலைவர் – காந்தியச்செம்மல் –
தேசிய திலகம் –
எளியவர்களை அரவணைத்த மன்னர் ,
இடைவிடாது பன்னூற் பயிற்சியில் இன்பம் கொண்டவர் .

ஐயா நிறுவிய பூண்டி புட்பம் கல்லூரியில் நான் பேசிவிட்டு ஐயாவைக் காணச் சென்றேன் .

பெருமகனார் காட்டிய பரிவும் – மொழிவளம் பற்றிய சிந்தனையும் நினைவை விட்டு நீங்கவில்லை .

காந்திய நோன்பைக் கடைபிடித்த மாமனித மாணிக்கச்சுடர் மறைந்தார் என்பதை ஒரு மரபு முடிவது போல உணர முடிகிறது .

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *