POST: 2021-05-21T10:31:34+05:30

கொரானா புயலின் கொடுமைக்குக் கண் இல்லையே !

அருமை அண்ணன் பொறியியல் வல்லுநராக ஒய்வு பெற்ற எம் நடராசன் அவர்களின் மறைவு(12.6.1932 – 6.5.2021)

ஒளவை குடும்ப முதல் கிளையாக எஞ்சியிருந்த மரபு முறிந்து விட்டது.

ஒளவைக் குடும்பத்தில் நான்கு கிளைகள் இருந்தன.

முதல் கிளை பெரியப்பா மயிலாசலம் பிள்ளை அவர்களின் மக்கட்செல்வங்களில் எஞ்சியிருந்த மூன்றாம் மகன் நடராசன் ஆவார்.

இரண்டாம் கிளை இரட்டணை முத்துக்குமாரசாமி பிள்ளை அவர் குடும்பத்தில் சந்தானம் கூடுவாஞ்சேரியில் வாழ்கிறார்.

அவருடைய திருமகளுக்கு லோகாம்பாள் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

லோகாம்பாள் வாழ்வு தில்லியில் அவலத்தில் முடிந்தது.

எஞ்சிய மகளிர் மாமணிகளாக ஒளிர்கின்றார்கள்.

மூன்றாம் கிளை பெரியப்பா சுப்பிரமணிய பிள்ளை சென்னையில் மறைந்தார்,அவருக்கு மகப்பேறு இல்லை.

நான்காம் கிளை உரைவேந்தர் ஒளவை துரைசாமி…

ஒவ்வொரு குடும்பத்தில் நடராசன் பெயர் அமைந்தது..

.அண்ணன் நடராசன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நம் வீட்டில் இருந்து பொறியியல் படித்தார்.

பல்லாண்டுகள் கழித்து மதுரையில் மின் துறையில் பணியாற்றி பிறகு சென்னைக்கு வந்து மேலான பதவி பெற்று ஓய்வு பெற்றார்.

அண்ணாநகரில் வீடு வாங்கி வாழ்ந்திருந்தார்.

எங்கள் இல்லத்திற்குச் சில முறை வந்திருந்து கண்ணன், அருள், பரதன் மூன்று பேரும் உங்கள் வாழ்வின் மூவேந்தர்கள் என்று கனிவோடு கூறி மகிழ்ந்தார்.

நிறை வாழ்வில் அவர் நிலை பற்றி அறிய முடியவில்லை.

அவர் மறைவு பேரிழப்பாகும்.

துயரத்தோடு
ஒளவை நடராசன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *