நாரணன் நமன் தொடுவதா!
நட்புச் செம்மல் டெல்டா நாராயணசாமி மறைவு (15.9.1936-25.5.2021) மாளாத துயரத்தைத் தருகிறது.
பொது நலத்துக்காகவே பொழுதெல்லாம் வாழ்ந்த பெருமையும், புதிய திறமையும்,
அல்லற்படுவோரை அரவணைத்த அருமையும் எண்ணிக் கலங்குகிறேன்.
என்னைக் காணும் போதெல்லாம் எழுந்து நின்று என்னைத் தொட்டு நான் உங்கள் தம்பி என்றாரே!
நான் நம்பிய தம்பி மறைந்தார் என்ற கொடுந்துயருக்கு எல்லையில்லை.
மகன் இளமாறனையும், தோள் இணைத்த நயவுரை நம்பியும் ஆறுதல் கொள்வதின்றி வழியில்லை….
வெந்த புண்ணில் வேறொரு அம்பு பாய்ந்தது!
துயரத்தோடு…
ஒளவை நடராசன்

Add a Comment