POST: 2021-06-04T09:46:25+05:30

முரசொலி-3.6.2021 பக்கம் 5

வின்சென்ட் சர்ச்சில் – மாசேதுங்கை விட மாபெரும் சிந்தனையாளர் கலைஞர் !

-முனைவர் ஒளவை நடராசன் புகழாரம்-

வின்சென்ட் சர்ச்சில் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள் தான்.

அவருக்கு ஆங்கில இலக்கியத்திலே நோபல் பரிசு பெற்றுக் கொடுத்தது.

உலகத்தில் சர்ச்சிலுக்குப் பிறகு அப்படிப்பட்ட இலக்கிய மனம் உடையவர் என்று, மாசேதுங்கைச் சொல்வார்கள்.

இந்த இரண்டு பேரிடமும் காணாத ஒருதிறம், நம்முடைய கலைஞர் பெருமானுடைய பெருந்திறமை என்பதற்கு ஒரு சான்று சொல்வதென்றால்,

கலைஞர் அவர்களுக்கு அரசியல் தெரியும்,
இலக்கியம் தெரியும்,
கலை தெரியும்,
சிந்தனை தெரியும்,
எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி என்று எடுத்துக் காட்டவும் தெரியும்.

அவர் சிந்திய எழுத்தினுடைய துளிதான், என்னைப் போன்றவர்களையெல்லாம் துணைவேந்தராக ஆக்கியது.

(கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய ‘கலைஞர் புகழ் வணக்கம்’ நிகழ்ச்சி)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *