இன்னுமொரு நூற்றாண்டு இரும்
சுகி சிவம் –
செப்டம்பர் 6 – 2020.
சொல்லின் செல்வரின் தேன் சொட்டுக்கள்…2
ஒளவை நடராசனின் அறிவு,திறமை,புலமை, இனிமை, எல்லாவற்றையும்விட முக்கியம் அவருடைய இனிமை – ஹிஸ் ஸ்வீட்நஸ his sweetness
அவர் சர்க்கரை வியாதி உள்ளவர். அவரிடம் வேடிக்கையாகக் கேட்டார்கள், “சர்க்கரை வியாதி” என்று “இந்த உலகத்தில் சர்க்கரை வியாதி இல்லாத ஒரே ஒருவரைச் சொல்லு பார்ப்போம்” என்பார்.
“சுகர்நோ”- இந்தோனேசியாவின் ஜனாதிபதி.
அவர் ஒருத்தர்தான் சர்க்கரை வியாதி இல்லாதவர். பாக்கி எல்லாரும் சர்க்கரை வியாதிக்காரர்கள் .
உடம்பில் மிக நீண்ட காலம் அந்த நோய். ஆனால் அதைப்பற்றி அவர் இம்மியும் கவலைப்பட்டதில்லை. அது எரியும். கால் எரியும், தொந்தரவு பண்ணும், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார், சிரித்துக்கொண்டே இருப்பார், மகிழ்ச்சியாக இருப்பார்.
மேடைக்கு வருகிறார் என்று சொன்னால் பல பேர் நினைத்துக் கொண்டிருப்பார்கள் அவர் எதோ தயாரிப்பு இல்லாமல் மேடைக்கு வருகிறார் என்று.
கிடையாது. இன்றைக்கு உள்ள பேச்சாளர்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் நாக்கு நுனியில் பேசிப் பார்ப்பார். “என்பார்கள்”, என்று கூறலாமா?” என்று.
எதுகை மோனையில் எப்போதும் அவருக்கு ஒரு பிரியம் உண்டு. “பட்டுக்கொடி பளபளவென்று பறப்பதைப் போல” என்று. மோனையாக வந்தால் மோனையாகவே வர வேண்டும்.
“எட்டுதிசை, அந்தப் பட்டுத்துணி” என்று தொடங்கி, எட்டுத் திசையும் என்று எதுகை வந்தால் இன்னும் அகம் மகிழ்வார்.
இதை மகிழ்வுந்தில் வரும்போதும் மேடையில் அமர்ந்திரருக்கும் பொழுதும், உதட்டை அசைத்து, அவர் பேசுவதைப் பக்கத்திலிருந்து பார்த்ததால் எங்களுக்குத் தெரியும்.
தயாரிப்பு இல்லாமல் எங்கள் ஒளவை மேடைக்கு வர மாட்டார், தயாரிப்பார்.
ஆனால் தயாரிப்பு எப்படி இருக்கும் என்றால், அவர் ஒரு கலைக்களஞ்சியம். எல்லாமே அவரிடம் உண்டு. அதனால் மனதுக்குள்ளேயே அவர் அப்படியே அசைபோட்டுப் பேசிப் பார்ப்பார்.
மற்றொன்று – அவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு சமஸ்தானம். அவர் ஒரு ராஜாங்கம். எப்படி ராஜாங்கம் என்று சொல்வது? அவரை ஓர் அரசாங்கம் என்று நான் பாராட்டுவது?
இனிமேல் அவரைப் புகழ்ந்து எனக்கு ஒன்றும் காரியம் ஆகப் போவது கிடையாது.
ஒரு நான்கு வாய்ப்பு எனக்கு அவர் வாங்கிக் கொடுக்கப் போகிறார் என்று அர்த்தம் கிடையாது.
நான் நன்றியோடு இருக்க வேண்டுமா இல்லையா? இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய மனிதரோடு நான் பழகி இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு நான் நன்றியோடு இருக்க வேண்டும் அல்லவா?
அவர் ஒரு ராஜாங்கம். என்ன ராஜாங்கம்? ஒரு நிமிடத்தில் 100 முறை “ராஜா,ராஜா” என்று சொல்லுவார். “ராஜா… இந்த புத்தகத்தை எடுத்து அங்கே வைத்துவிடுங்கள் ராஜா… ராஜா… எடுத்தால் எடுத்ததை எடுத்த இடத்தில் வையுங்கப்பா…” என்பார்.
மேடைக்குப் போறோம், இராமலிங்கர் பணி மன்றத்தில், “ராஜா… வந்திருக்கிறவர்களுக்குத் தண்ணீர் தாகம் இருந்தா சோடா உடைத்துக் குடுங்கப்பா… சோடா உடைத்துக் கொடுக்கிறேன் என்று டமால்னு பாதியாக உடைத்துக் கொடுத்து விடாதீங்கப்பா… அந்த சோடாவை எப்படி உடைக்க வேண்டுமோ… அதை உடைக்கற சத்தம் கேட்கக்கூடாதுபா” ராஜா… ராஜா… ராஜா… யாரை? ஓட்டுனரும் ராஜாதான்…
நண்பர்களும் ராஜா தான்… இளம் பிள்ளைகள் யாரைப் பார்த்தாலும் ராஜாதான்…
எனக்குத்தெரிந்து இத்தனை ராஜாக்களை அடிமைகளாக வைத்திருந்த ஒரு மிகப்பெரிய சக்கரவர்த்தியை நீங்கள் எங்குத் தேடினாலும் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான பேரை ராஜா…ராஜா…ராஜா-என்று தன்னுடைய சமஸ்தானத்தில் அவர் உள்ளே வைத்திருந்தார். அப்போது அவர் சக்கரவர்த்தி தானே.
கடுஞ்சொல் பேசமாட்டார். எவ்வளவு சிக்கலான சூழ்நிலைகளில் கூட கடிந்து ஒரு சொல் பேசியதைப் பார்த்ததாக வரலாறே இல்லை. அவருக்கு இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம் என்பதற்கு ஒரு சான்று,
என்னுடைய நண்பர் முருகு சரண் – என்று பெயர். ஒரு நல்ல கவிஞர். முருகு சரண் கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் எப்படியாவது இராமலிங்கர் பணி மன்றத்துக்குள் சேர்த்து விட்டால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் முருகு சரணை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். முருகு சரண் அவரது வீட்டுக்குப் போகிறார். ஒளவை நடராஜன் அவர்களுடைய வீட்டில் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இருக்கும். மிகப்பெரிய நூலகம் இருக்கு.
அவருக்குப் புத்தகங்கள் என்றால் அவ்வளவு உயிர். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் எல்லாம் கலைந்து பிரிந்து கிடந்தது , ஒரு ஒழுங்கு இல்லாமல்… அது அது இருக்க வேண்டிய அலமாரியில் இல்லாமல்… புத்தகங்கள் எல்லாம் சிதறிக் கீழே கிடக்கிறது… அவர் கொஞ்சம் கூச்ச படுகிற மாதிரி ஒரு வார்த்தை சொன்னார்… “முருகு சரண்… இங்கே எதுவுமே சரியாக இருக்காது, அது அது இஷ்டத்துக்குக் கலைந்து கிடக்கும். அதை ஒன்றும் பெரிது படுத்தாதீங்க” என்று சொன்னார்.
முருகு சரண் பெரிய இலக்கியவாதி, கவிஞர். ஒரு நொடிப்பொழுதில் ஒளவையின் மனதில் இடம்பிடித்துவிட்டார். “இந்த மாதிரி கலைந்து கிடந்தால் தான ஒளவை-க்குப் பிடிக்கும்” என்றார். என்ன பெரிய நயம் தெரியுமா? அதாவது இதற்குச் சங்க இலக்கியம் நமக்குத் தெரியவேண்டும்.
அதியமானுக்கு மிகவும் வேண்டியவர் புலவர் ஒளவையார். அந்த ஒளவையார், தொண்டைமான் இளந்திரையனைப் பார்க்கச் செல்கிறார். அந்த தொண்டைமான் இளந்திரையன் தன்னுடைய ஆயுதக் கிடங்கைக் காட்டுகிறான். அங்கு நல்ல வேலெல்லாம் எண்ணை தடவி, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆயுதக்கிடங்கு முழுக்க அப்படி இருக்கிறது.
ஒளவையார் தன்னை வியக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் வந்துகொண்டே இருக்கும் வெளியிலிருந்து அதையெல்லாம் அடுக்குவதற்கு இடமில்லை என்று தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி, அப்படிச் சொன்னால் அதைக் கேட்டு ஒளவையார் அதியமானிடம் தான் எவ்வளவு வலிமையாக இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தொண்டைமான் இளந்திரையன் எல்லாவற்றையும் காட்டுகிறான்.
ஆனால், ஒளவையார் ஒரு வார்த்தை சொன்னார், “பரவாயில்லையே… ஒன்று கூட கருக்குலையாமல் சுத்தமாக இருக்கிறதே… ஒன்றுகூட உருக்குலைவு ஏற்படாமல் அப்படியே எண்ணெய் பூசிய கையுடன்… நெய் பூசிய கையுடன் இருக்கிறது.. எவ்வளவு அழகாக அடுக்கி வைத்திருக்கிறாய்? இதைப்போன்று அதியமான் படைக்கலம் இல்லை.
அதிகமான போர்களுக்குச் சென்று…கூர் மழுங்கிக் கிடக்கும். கொல்லன் உலைக்களத்துக்குப் போய்ட்டு போய்ட்டு வரும். அந்த ஆண்மை மிக்க போர்க்கருவிகள் எப்போதும் சிதறிக்கிடக்கும். நீ எப்படி வரிசையாக அடுக்கி வைத்து இருக்கிறாய்?” இந்த ஒரு வரியில் அவனைக் கொன்றேவிட்டார் .
“நீ அடுக்கி வைத்திருப்பதால் பயன் கிடையாது. எந்தப் போருக்குமே நீ சென்றது கிடையாது. அவன் அதிகமான போர்களுக்குச் சென்றவன். எனவே, அவனுடைய கருவிகள் எல்லாம் அடுக்கி இருக்காது” என்று சொல்லிவிட்டு… சங்க இலக்கியத்தில் வருகிற அந்த ஒளவையை, இந்த ஒளவையோடு ஒப்பிட்டு முருகு சரண் சொன்னார்…அடுக்கி இருந்தால் ஒளவைக்குப் பிடிக்காதே… கலைந்து கிடந்தால் தான் ஒளவைக்குப்பிடிக்கும் என்றார்.
“முருகு சரண்… முருகு சரண் கொன்னே போட்டுட்டீங்க… கொன்னே போட்டுட்டீங்க” என்று முருகு சரணை வேலைக்கு உடனே எடுத்துக்கொண்டார். நான் இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், எத்தனை பெரிய இலக்கிய ரசிகர் எங்கள் ஒளவை என்பதற்கு இது ஓர் அடையாளம்.
அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை வரும். பேச்சிலேயே கிண்டல் இருக்கும். கேலி இருக்கும். சிரித்துக் கொண்டே இருப்பார். அந்த உதட்டில் எப்போதும் இருக்கும். பத்மா சுப்பிரமணியம் நடனத்தைப் பார்த்தால் தெரியும். நடனமாடும் பொழுது இதழில் அந்த சிரிப்பு மாறாமல் ஆடுவார்கள். நாட்டியத்திற்கு அது ஒரு பெரிய இலக்கணம்.
அதே போன்று ஒளவை நடராசன் அவர்கள் பேச்சைப் பார்த்தால் முகத்தில் எந்த பக்கத்திலிருந்து புகைப்படம் எடுத்தாலும் அழகாக இருக்கும். அந்த முகத்தில் அந்தச் சிரிப்பு மாறாமல் அப்படியே இருக்கும். அவருடைய தனித்த ஒரு மிகப் பெரிய சிறப்பு அது.எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
ஒரு முறை, ஒளவை அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் தடைபட்டு விட்டது. அதனால் ஒலிவாங்கி எடுக்கவில்லை. உடனே, அருகில் அமர்ந்திருந்த நான் எழுந்து அவரிடம் மெதுவாக, “சார் மைக் கேட்கவில்லை. கரண்ட் கட் ஆயிடுச்சி.மைக் கேட்கவில்லை”. என்று சொன்னேன்.
அதை இம்மி கூடப் பொருட்படுத்தாமல் அவர் பாட்டுக்கு என்ன பேசிக் கொண்டிருந்தாரோ அதைப் பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து அப்படியே பேசுகிறார். என்ன இது? மறுபடியும் அவருக்கு கேட்கவில்லையோ என நினைத்து , “சார் மைக் கட்டாயிடுச்சு… கரண்ட் இல்லை, யாருக்குமே கேட்கவில்லை” என்று சொன்னேன். அவர் ஒரு வார்த்தை சொன்னார் பாருங்கள், “இருந்தப்ப மட்டும் எவன்பா கேட்டான்?” என்றார்.அத்தனை கிண்டல். அத்தனை கேலி.
ஒரு பட்டிமன்றத்தில் எல்லோருக்கும் பட்டம் கொடுக்கிறார் அவர். சும்மாவா அது? இவர் அப்படிப்பட்ட நாவலர். நற்றமிழ் நாவலர். இவர் அப்படி இப்படி என்று. எனக்கு அந்தச் சமயத்தில் கோபம் அவர் மீது. “பட்டமளிப்பதன் மூலமாகவே தன்னை ஒரு பல்கலைக்கழகமாக நினைத்துக் கொள்கிற ஒளவை அவர்களே” என்று கேலியாகப் பேசினேன். ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுப்பது மூலமாகவே நீங்கள் பல்கலைக்கழகமாக ஆகிவிடலாம் என நினைக்கிறீங்களா?” என்று அந்த பட்டிமன்றத்தை அவர் கனமாக நடத்தவில்லை, மிகவும் விளையாட்டாக நடத்தினார். நான் உடனே கோபித்துக்கொண்டு பட்டிமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று நான் வெளியில் போய்விட்டேன்.
எனக்கு அப்பொழுது அப்படி ஓர் இயல்பு. பிறகு என்னை அழைத்து, “ஏன் ராஜா இதுக்கல்லாமா கோபப்படுவாங்க? இந்தப் பட்டிமன்றம் ஒரு பெரிய மகா மன்றமா ? மகிழ்ச்சியாக இருங்கள். அடிக்கடி கோபித்துக் கொள்கிறீர்களே! நீங்கள் எதிர்காலத்தில் விட்டுக்கொடுத்து வர வேண்டாமா? எல்லோருடனும் இணங்கிப் போக வேண்டாமா?” என்று, வாழ்க்கை என்றால் என்ன என்று சொன்னார்.
ஒளவை அவர்கள், டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜானகி அம்மா போன்ற முதல்வர்கள் இருந்தபோது பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோதும் பணியாற்றியிருக்கிறார். நான்கு முதல்வர்களிடத்திலும் நல்ல பெயர் வாங்கி அந்த இடத்திலிருந்து வெளியில் வந்திருக்கிறார். யோசித்துப் பாருங்கள்.
எங்கள் பொள்ளாச்சி அருட்செல்வர் ஐயா நா.மகாலிங்கம் அவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். நா.மகாலிங்கம் அவர்களுக்கு கோபம் வராதபடி அந்த இலக்கிய விழாவைக் கொண்டு செலுத்த வேண்டுமென்றால் ஒளவை நடராசன் அவர்களால் மட்டும்தான் முடியும். அந்த விழாவில் எத்தனையோ நடக்கும்.
ஆனால், அவர் ஒரு விளையாட்டான ஒளவை அல்ல. எவ்வளவு கண்ணியமான பெரிய மனிதர் ஒளவை என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் அந்த பெயர் தெரியுமோ தெரியாதோ? சோமயாஜுலு என்பவர் விடுதலைப் போராட்ட மாவீரர்.
அவர் இராமலிங்கர் பணிமன்ற விழாவில் பேசுகிறார். ஏன்? சார் விடுதலைப் போராட்ட வீரராக இருந்தால் அவர் பேச்சில் வல்லவராக இருக்க வேண்டுமா? அவர்கள் எல்லாம் தேசத்திற்காகத் தியாகம் செய்தவர்கள். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இல்லை. சபையில் கேட்பவர்களுக்குச் சுவை என்பது இல்லை. இது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சோமையாஜுலு அவர்கள் பேசும்போது கை தட்டி உட்கார வைக்கலாம் என்று மக்கள் கைதட்டுகிறார்கள். தவறுதானே அது.
ஒரு தேசத் தியாகிக்கு நாம் அப்படி ஓர் அவமரியாதை கொடுக்கலாமா? எங்களோடு இங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஒளவை, “இந்த மக்களுக்குப் பாருப்பா அந்த ஆள் எவ்வளவு பெரிய தேச விடுதலைப் போராட்ட தியாகி என்பது தெரியல… கைதட்டுகிறார்கள்…” என்று விருட்டென்று எழுந்து போய்ப் பேசினார்கள். அதாவது தவறு என்று மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று.
அது முடிந்து கிரிதாரி பிரசாத் ஐயா கீதா போதகருடைய பேச்சு இருக்கிறது. அதன் மேலுள்ள மோகத்தில் மக்கள் காத்திருக்கிறார்கள் . அந்தப் பேச்சை சுவாரசியமாக கேட்பதற்கு இந்த ஆள் இடைஞ்சலாக பேசிக்கொண்டிருக்கிறார் என்று சோமயாஜுலு பேச்சை கைதட்டி உட்கார வைக்க நினைக்கிறார்கள். சோமையாஜுலு ஒருவழியாக முடித்தவுடனே மைக் முன்னே சென்று மக்களுக்குப் பாடம் நடத்தினார் ஒளவை நடராசன் அவர்கள். என்ன சொன்னார் தெரியுமா?
“பெரியோர்களே… அவர் பேசுவதே அந்த உதட்டிலேயிருந்து தமிழ் அழகாக இருக்கும். பட்டு நெசவு போல் இருக்கும். அவரது உச்சரிப்பிலேயே ஒரு பெரிய அழகு உண்டு. என்றைக்குமே இளமை மாறாமல் தமிழ் பேசுகிறவர் அவர். சோமையாஜுலுவைப் பற்றிச் சொல்கிறார், “அவர் எவ்வளவு பெரிய தியாகி. அவர் தியாகங்களுக்கெல்லாம் நாம் ஈடு கொடுக்க முடியுமா? நாம் ஒரு சுவையான ஒரு சொற்பொழிவு வேண்டும் என்பதற்காகத் தேசத்திற்கு பாடுபட்ட தியாகிகளுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் இருக்கலாமா” என்று மக்களுக்குப் பாடம் நடத்தினார்.
இத்தனைக்கும் அவர் யாரு? வரவேற்புரை, நன்றியுரை இந்த மாதிரி ஏதாவது ஒன்று சொல்லுவார். ஆனால்,அந்த விழாவில் திடீரென எழுந்து, “நான் நன்றியுரையை பிரசாத் அவர்கள் பேச்சுக்குப் பிறகு சொன்னால் நீங்கள் கேட்க மாட்டீர்கள். அதனால் நன்றி உரையை நான் முதலிலேயே சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்து, மக்களுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லி, பிரசாத் அவர்களுடைய பேச்சின் மோகத்தால்தான் மக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று அதை ஓரங்கட்டி அப்படியே நிறுத்தி வைத்து, பேச்சு என்றால் என்ன?என்ற ஓர் இலக்கணத்தை நிரூபித்து, தேசத்திற்காகப் பாடுபட்டவர்கள் எவ்வளவு மரியாதைக்கு உரியவர்கள் என்பதைப் புரிய வைத்து, கடைசியாக ஒரு ஐந்து நிமிடம் எட்டு மணிக்கு விழா முடிய வேண்டும்.
எட்டு மணிக்கு ஐந்தே நிமிடம் இருக்கும்போது சொல்லுகிறார். “இன்னும் ஐந்து நிமிடம் விழா நிறைவு பெறுவதற்கு இருக்கின்றது . கீதா போதகர் கிரிதாரி பிரசாத் அவர்கள் இப்பொழுது உரையாற்றுவார்” என்றார். “பேச்சு முக்கியமல்லை. தேசத்திற்காகப் பாடுபட்டவர்கள் முக்கியம்” என்பதைக் கண் முன்னாலே எங்களுக்குப் புரிய வைத்த இடம் அந்த இடம்.
அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். நீங்கள் எப்பொழுது எதைப்பற்றி கேட்டாலும் சரி. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ,தேவாரம் ,திருவாசகம் ,கம்பராமாயணம் என்று எதைப் பற்றியுமே ஆழமான ஒரு படிப்பு. அப்படி ஒரு நீண்ட சிந்தனையும் திறனும் உடையவர் அவர்.
அவரது எல்லையற்ற ஆற்றலுக்கு மேலுலமாறு உதாரணம், தொலைபேசி அடிக்கிறது. அப்பொழுது அவர் அரசாங்கத்தில் பணியில் இருக்கிறார். அப்போதெல்லாம் இக்காலத்தைப் போன்ற செல்போன் கிடையாது. தொலைபேசி மட்டும்தான் வரும். தொலைபேசியை எடுத்து “ஹலோ” என்கிறார். எதிர்தரப்பில் இருந்து வருகிறது, “நான் இராமச்சந்திரன் பேசுகிறேன்” என்று. “ராமச்சந்திரன்-னா எந்த ராமச்சந்திரன்? ஏகப்பட்ட ராமச்சந்திரன் இருக்கிறார்கள்?” ஏன்னா இவருக்கு நண்பர்கள் ராமச்சந்திரன் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
அப்போது முதல்வராக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவருக்கு அப்பொழுது தெரியவில்லை. உண்மையிலேயே பேசியது எம்ஜிஆர் அவர்கள்.அவர் இதைப்போல சிலகுறும்பு செய்வார். அவரே தொலைபேசியில் நேரடியாக அவரை அழைத்து, “நான் ராமச்சந்திரன் பேசுகிறேன்” என்றார்.
“ராமச்சந்திரன்னா? மொட்டையா சொன்னா எப்படித் தெரியும்? எந்த ராமச்சந்திரன்?” என்று இவர் கேட்கிறார். “உங்களுக்கு எத்தனை ராமச்சந்திரன் தெரியும்?” அவர் பதில் அங்கிருந்து. “அது ஏகப்பட்ட ராமச்சந்திரன் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ம்… நீங்கள் எந்த ராமச்சந்திரன்னு சொன்னால்தான உங்களை எனக்குத் தெரியும்?” என்று சொன்னார். “நான் முதலமைச்சர் ராமச்சந்திரன் பேசுகிறேன்”. என்றார்.
சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. “ஐயா… ஐயா…மன்னிக்க வேண்டும்… தாங்கள் என்று நினைக்கவில்லை. தங்களின் உதவியாளர்கள் தானே முதலில் தொலைபேசியில் அழைப்பார்கள். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் வேறு யாரோ ராமச்சந்திரன் என்று நினைத்தேன்”. என்றார்.
“பரவாயில்லை. உங்களுக்கு எத்தனை ராமச்சந்திரனை தெரியும் சொல்லுங்கள் எல்லாரையும் கேட்போம். யார்யாரென்று” எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே கேட்டுட்டு, ஒரு செய்தி சொல்கிறார். “இந்த விண்வெளிக்குப் போய்விட்டு வந்த வீரர்களுக்கு இன்று இரவு நான் விருந்து கொடுக்கிறேன். அவர்களுக்கு ஒரு சாப்பாடு கொடுக்கிறேன். அப்பொழுது நினைவுப் பரிசு ஒன்று வெள்ளியில் ஒரு பெரிய பரிசு கொடுக்கிறேன். அந்தப் பரிசில் தமிழிலிருந்து ஒரு நல்ல வார்த்தை பொறித்து கொடுக்க வேண்டும்.
அது விண்வெளியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.” எப்படி எல்லாம் நிபந்தனைகள் போடுகிறார் என்று பாருங்கள். “இப்போதே வேண்டும். ஏனென்றால் அது தயாராகி வரவேண்டும். ” நீங்கள் உடனே எனக்கு ஒரு திருக்குறள் சொல்லுங்கள். திருக்குறளோடு விண்வெளியில் எது சம்பந்தப்பட்டது? ஒரு குறள் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார். இதைப் போல் ஒரு முதலமைச்சர் கேட்டால் நம்மால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? ஒரு நொடியில்.. தாமதிக்காமல் எங்கள் ஐயா ஒளவை நடராஜன் சொல்கிறார்கள்,
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து” ( 353 )
என்று இப்படி ஒரு திருக்குறள் இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது.
யார் சந்தேகம் இல்லாதபடி தெளிவாக இவ்வுலகத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து – தள்ளி இருந்தால்கூட வானகம் என்பது நணியது உடைத்து – பக்கத்தில் இருப்பதைப்போல. விண்வெளியாகவே இருந்தாலும் தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டு போகிறவனுக்கு அது பக்கத்தில் இருக்கும் என்று இன்னொரு பொருள் வருகிறது அதற்குள். திருவள்ளுவர் இப்படிச் சொன்னதற்கு காரணம் வேறு.
அதனுடைய பொருள் வேறு. அந்தக் குறள் அதுக்குப் பொருந்தும் என்று சொன்ன உடனேயே… “பலே… நடராஜன்… பலே” என்று எம்ஜிஆர் அவர்கள் பாராட்டிவிட்டு, “இன்று மாலை விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், அந்த விருந்துக்கு நீங்களும் வாருங்கள்” என்றார். இவ்வாறு பல முதல்வர்களால் பாராட்டப்பட்ட, கவிக்கோ அப்துல் ரகுமான் இன்னும் சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற கவிஞர்களாலும் , பொள்ளாச்சி அருட்செல்வர் போன்ற, தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற… எத்தனையோ அரசியல் தலைவர்கள்… எத்தனையோ பெருமக்கள் பாராட்டி… பாராட்டி… பாராட்டிப் புகழ் பேசுகின்ற பெருமைக்குரியவர்கள் ஒளவை நடராஜன் அவர்கள்.
அவருடைய சொந்த வாழ்க்கையில் அண்மையிலே அவரது துணைவியாரை இழக்க வேண்டியச் சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பிரிவைத் தாங்குவது அவர்களுக்குச் சிரமம். ஏனென்றால் எல்லா வகையிலும் அவருக்கு உடல் நலத்திலும் சரி, பாதுகாவலராகவும் சரி துணையாக இருந்து பெருமை சேர்த்தவர்கள் அம்மையார் தாரா நடராஜன் அவர்கள். அவரே சொல்லுவார், “தாரா…தாரா… வந்தாரா ? அப்படித்தான் எல்லாருமே கேட்பார்கள்” என்று சொல்வார்.
அவர் திருமணமான புதிதில் கன்னியாகுமரி போயிருக்கிறார்கள்.அங்குச் சூரிய மறைவினைப் பார்க்க வேண்டும் என்று அம்மா சொல்லி இருக்கிறார்கள். இவர் நண்பருடன் பேச ஆரம்பித்தால் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருப்பார். பேசிக்கொண்டிருந்தவர் போகவேண்டும் என்பதை மறந்து விட்டார். அம்மா நேராகப் போய் சூரிய மறைவினைப் பார்த்துவிட்டு வந்து கொஞ்சம் கோபப்பட்டு விட்டார்கள். அதனால் கோபித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள். இந்த சம்பவத்தை நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் சொல்லிட்டுச் சென்றார் , அதாவது மனைவியைப் பற்றிக் குறையாகச் சொல்லாமல் சொல்கிறார்.
“அம்மா மிகவும் ஒழுக்கமானவர்கள்…எல்லாவற்றிலும் மிகவும் நேர்த்தியாக இருப்பவர்கள். நான் ஒன்றுமே கிடையாது. எல்லாம் நினைச்சபடி இருக்குற ஆள். எப்படித்தான் அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை” என்று தன்னுடைய துணைவியாருடைய பெருமையை, “நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று “அவர்களைப் போன்று நீங்கள் ஒழுக்கத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பார்.
அப்படிப்பட்ட மிகச்சிறந்த ஒளவை அவர்கள் பல்லாண்டு… பல்லாண்டு… வாழ வேண்டும். அவர்களை நான் வாழ்த்தி, வணங்கி, இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வைணவத்தில் வாழ்த்துவார்கள் , அதைப்போல ஒளவையைப் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்.
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.இன்னுமொரு நூற்றாண்டு இரும்
சுகி சிவம் –
செப்டம்பர் 6 – 2020.
சொல்லின் செல்வரின் தேன் சொட்டுக்கள்…2
அவருடைய அறிவு, அவருடைய திறமை, அவருடைய புலமை, அவருடைய இனிமை, எல்லாவற்றையும்விட முக்கியம் அவருடைய இனிமை – ஹிஸ் ஸ்வீட்நஸ். அவர் சர்க்கரை வியாதி உள்ளவர். அவரிடம் வேடிக்கையாகக் கேட்டார்கள், “சர்க்கரை வியாதி” என்று “இந்த உலகத்தில் சர்க்கரை வியாதி இல்லாத ஒரே ஒருவரைச் சொல்லு பார்ப்போம்” என்பார்.
“சுகர்நோ”- இந்தோனேசியாவின் ஜனாதிபதி. அவர் ஒருத்தர்தான் சர்க்கரை வியாதி இல்லாதவர். பாக்கி எல்லாரும் சர்க்கரை வியாதிக்காரர்கள் . உடம்பில் மிக நீண்ட காலம் அந்த நோய். ஆனால் அதைப்பற்றி அவர் இம்மியும் கவலைப்பட்டதில்லை. அது எரியும். கால் எரியும், தொந்தரவு பண்ணும், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார், சிரித்துக்கொண்டே இருப்பார், மகிழ்ச்சியாக இருப்பார்.
மேடைக்கு வருகிறார் என்று சொன்னால் பல பேர் நினைத்துக் கொண்டிருப்பார்கள் அவர் எதோ தயாரிப்பு இல்லாமல் மேடைக்கு வருகிறார் என்று. கிடையாது. இன்றைக்கு உள்ள பேச்சாளர்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் நாக்கு நுனியில் பேசிப் பார்ப்பார். “என்பார்கள்”, என்று கூறலாமா?” என்று.
எதுகை மோனையில் எப்போதும் அவருக்கு ஒரு பிரியம் உண்டு. “பட்டுக்கொடி பளபளவென்று பறப்பதைப் போல” என்று. மோனையாக வந்தால் மோனையாகவே வர வேண்டும். “எட்டுதிசை, அந்தப் பட்டுத்துணி” என்று தொடங்கி, எட்டுத் திசையும் என்று எதுகை வந்தால் இன்னும் அகம் மகிழ்வார். இதை மகிழ்வுந்தில் வரும்போதும் மேடையில் அமர்ந்திரருக்கும் பொழுதும், உதட்டை அசைத்து, அவர் பேசுவதைப் பக்கத்திலிருந்து பார்த்ததால் எங்களுக்குத் தெரியும்.
தயாரிப்பு இல்லாமல் எங்கள் ஒளவை மேடைக்கு வர மாட்டார், தயாரிப்பார். ஆனால் தயாரிப்பு எப்படி இருக்கும் என்றால், அவர் ஒரு கலைக்களஞ்சியம். எல்லாமே அவரிடம் உண்டு. அதனால் மனதுக்குள்ளேயே அவர் அப்படியே அசைபோட்டுப் பேசிப் பார்ப்பார்.
மற்றொன்று – அவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு சமஸ்தானம். அவர் ஒரு ராஜாங்கம். எப்படி ராஜாங்கம் என்று சொல்வது? அவரை ஓர் அரசாங்கம் என்று நான் பாராட்டுவது? இனிமேல் அவரைப் புகழ்ந்து எனக்கு ஒன்றும் காரியம் ஆகப் போவது கிடையாது. ஒரு நான்கு வாய்ப்பு எனக்கு அவர் வாங்கிக் கொடுக்கப் போகிறார் என்று அர்த்தம் கிடையாது. நான் நன்றியோடு இருக்க வேண்டுமா இல்லையா? இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய மனிதரோடு நான் பழகி இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு நான் நன்றியோடு இருக்க வேண்டும் அல்லவா?
அவர் ஒரு ராஜாங்கம். என்ன ராஜாங்கம்? ஒரு நிமிடத்தில் 100 முறை “ராஜா,ராஜா” என்று சொல்லுவார். “ராஜா… இந்த புத்தகத்தை எடுத்து அங்கே வைத்துவிடுங்கள் ராஜா… ராஜா… எடுத்தால் எடுத்ததை எடுத்த இடத்தில் வையுங்கப்பா…” என்பார்.
மேடைக்குப் போறோம், இராமலிங்கர் பணி மன்றத்தில், “ராஜா… வந்திருக்கிறவர்களுக்குத் தண்ணீர் தாகம் இருந்தா சோடா உடைத்துக் குடுங்கப்பா… சோடா உடைத்துக் கொடுக்கிறேன் என்று டமால்னு பாதியாக உடைத்துக் கொடுத்து விடாதீங்கப்பா… அந்த சோடாவை எப்படி உடைக்க வேண்டுமோ… அதை உடைக்கற சத்தம் கேட்கக்கூடாதுபா” ராஜா… ராஜா… ராஜா… யாரை? ஓட்டுனரும் ராஜாதான்… நண்பர்களும் ராஜா தான்… இளம் பிள்ளைகள் யாரைப் பார்த்தாலும் ராஜாதான்…
எனக்குத்தெரிந்து இத்தனை ராஜாக்களை அடிமைகளாக வைத்திருந்த ஒரு மிகப்பெரிய சக்கரவர்த்தியை நீங்கள் எங்குத் தேடினாலும் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான பேரை ராஜா…ராஜா…ராஜா-என்று தன்னுடைய சமஸ்தானத்தில் அவர் உள்ளே வைத்திருந்தார். அப்போது அவர் சக்கரவர்த்தி தானே.
கடுஞ்சொல் பேசமாட்டார். எவ்வளவு சிக்கலான சூழ்நிலைகளில் கூட கடிந்து ஒரு சொல் பேசியதைப் பார்த்ததாக வரலாறே இல்லை. அவருக்கு இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம் என்பதற்கு ஒரு சான்று,
என்னுடைய நண்பர் முருகு சரண் – என்று பெயர். ஒரு நல்ல கவிஞர். முருகு சரண் கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் எப்படியாவது இராமலிங்கர் பணி மன்றத்துக்குள் சேர்த்து விட்டால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் முருகு சரணை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். முருகு சரண் அவரது வீட்டுக்குப் போகிறார். ஒளவை நடராஜன் அவர்களுடைய வீட்டில் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இருக்கும். மிகப்பெரிய நூலகம் இருக்கு.
அவருக்குப் புத்தகங்கள் என்றால் அவ்வளவு உயிர். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் எல்லாம் கலைந்து பிரிந்து கிடந்தது , ஒரு ஒழுங்கு இல்லாமல்… அது அது இருக்க வேண்டிய அலமாரியில் இல்லாமல்… புத்தகங்கள் எல்லாம் சிதறிக் கீழே கிடக்கிறது… அவர் கொஞ்சம் கூச்ச படுகிற மாதிரி ஒரு வார்த்தை சொன்னார்… “முருகு சரண்… இங்கே எதுவுமே சரியாக இருக்காது, அது அது இஷ்டத்துக்குக் கலைந்து கிடக்கும். அதை ஒன்றும் பெரிது படுத்தாதீங்க” என்று சொன்னார்.
முருகு சரண் பெரிய இலக்கியவாதி, கவிஞர். ஒரு நொடிப்பொழுதில் ஒளவையின் மனதில் இடம்பிடித்துவிட்டார். “இந்த மாதிரி கலைந்து கிடந்தால் தான ஒளவை-க்குப் பிடிக்கும்” என்றார். என்ன பெரிய நயம் தெரியுமா? அதாவது இதற்குச் சங்க இலக்கியம் நமக்குத் தெரியவேண்டும்.
அதியமானுக்கு மிகவும் வேண்டியவர் புலவர் ஒளவையார். அந்த ஒளவையார், தொண்டைமான் இளந்திரையனைப் பார்க்கச் செல்கிறார். அந்த தொண்டைமான் இளந்திரையன் தன்னுடைய ஆயுதக் கிடங்கைக் காட்டுகிறான். அங்கு நல்ல வேலெல்லாம் எண்ணை தடவி, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆயுதக்கிடங்கு முழுக்க அப்படி இருக்கிறது.
ஒளவையார் தன்னை வியக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் வந்துகொண்டே இருக்கும் வெளியிலிருந்து அதையெல்லாம் அடுக்குவதற்கு இடமில்லை என்று தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி, அப்படிச் சொன்னால் அதைக் கேட்டு ஒளவையார் அதியமானிடம் தான் எவ்வளவு வலிமையாக இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தொண்டைமான் இளந்திரையன் எல்லாவற்றையும் காட்டுகிறான்.
ஆனால், ஒளவையார் ஒரு வார்த்தை சொன்னார், “பரவாயில்லையே… ஒன்று கூட கருக்குலையாமல் சுத்தமாக இருக்கிறதே… ஒன்றுகூட உருக்குலைவு ஏற்படாமல் அப்படியே எண்ணெய் பூசிய கையுடன்… நெய் பூசிய கையுடன் இருக்கிறது.. எவ்வளவு அழகாக அடுக்கி வைத்திருக்கிறாய்? இதைப்போன்று அதியமான் படைக்கலம் இல்லை.
அதிகமான போர்களுக்குச் சென்று…கூர் மழுங்கிக் கிடக்கும். கொல்லன் உலைக்களத்துக்குப் போய்ட்டு போய்ட்டு வரும். அந்த ஆண்மை மிக்க போர்க்கருவிகள் எப்போதும் சிதறிக்கிடக்கும். நீ எப்படி வரிசையாக அடுக்கி வைத்து இருக்கிறாய்?” இந்த ஒரு வரியில் அவனைக் கொன்றேவிட்டார் .
“நீ அடுக்கி வைத்திருப்பதால் பயன் கிடையாது. எந்தப் போருக்குமே நீ சென்றது கிடையாது. அவன் அதிகமான போர்களுக்குச் சென்றவன். எனவே, அவனுடைய கருவிகள் எல்லாம் அடுக்கி இருக்காது” என்று சொல்லிவிட்டு… சங்க இலக்கியத்தில் வருகிற அந்த ஒளவையை, இந்த ஒளவையோடு ஒப்பிட்டு முருகு சரண் சொன்னார்…அடுக்கி இருந்தால் ஒளவைக்குப் பிடிக்காதே… கலைந்து கிடந்தால் தான் ஒளவைக்குப்பிடிக்கும் என்றார்.
“முருகு சரண்… முருகு சரண் கொன்னே போட்டுட்டீங்க… கொன்னே போட்டுட்டீங்க” என்று முருகு சரணை வேலைக்கு உடனே எடுத்துக்கொண்டார். நான் இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், எத்தனை பெரிய இலக்கிய ரசிகர் எங்கள் ஒளவை என்பதற்கு இது ஓர் அடையாளம்.
அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை வரும். பேச்சிலேயே கிண்டல் இருக்கும். கேலி இருக்கும். சிரித்துக் கொண்டே இருப்பார். அந்த உதட்டில் எப்போதும் இருக்கும். பத்மா சுப்பிரமணியம் நடனத்தைப் பார்த்தால் தெரியும். நடனமாடும் பொழுது இதழில் அந்த சிரிப்பு மாறாமல் ஆடுவார்கள். நாட்டியத்திற்கு அது ஒரு பெரிய இலக்கணம்.
அதே போன்று ஒளவை நடராசன் அவர்கள் பேச்சைப் பார்த்தால் முகத்தில் எந்த பக்கத்திலிருந்து புகைப்படம் எடுத்தாலும் அழகாக இருக்கும். அந்த முகத்தில் அந்தச் சிரிப்பு மாறாமல் அப்படியே இருக்கும். அவருடைய தனித்த ஒரு மிகப் பெரிய சிறப்பு அது.எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
ஒரு முறை, ஒளவை அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் தடைபட்டு விட்டது. அதனால் ஒலிவாங்கி எடுக்கவில்லை. உடனே, அருகில் அமர்ந்திருந்த நான் எழுந்து அவரிடம் மெதுவாக, “சார் மைக் கேட்கவில்லை. கரண்ட் கட் ஆயிடுச்சி.மைக் கேட்கவில்லை”. என்று சொன்னேன்.
அதை இம்மி கூடப் பொருட்படுத்தாமல் அவர் பாட்டுக்கு என்ன பேசிக் கொண்டிருந்தாரோ அதைப் பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து அப்படியே பேசுகிறார். என்ன இது? மறுபடியும் அவருக்கு கேட்கவில்லையோ என நினைத்து , “சார் மைக் கட்டாயிடுச்சு… கரண்ட் இல்லை, யாருக்குமே கேட்கவில்லை” என்று சொன்னேன். அவர் ஒரு வார்த்தை சொன்னார் பாருங்கள், “இருந்தப்ப மட்டும் எவன்பா கேட்டான்?” என்றார்.அத்தனை கிண்டல். அத்தனை கேலி.
ஒரு பட்டிமன்றத்தில் எல்லோருக்கும் பட்டம் கொடுக்கிறார் அவர். சும்மாவா அது? இவர் அப்படிப்பட்ட நாவலர். நற்றமிழ் நாவலர். இவர் அப்படி இப்படி என்று. எனக்கு அந்தச் சமயத்தில் கோபம் அவர் மீது. “பட்டமளிப்பதன் மூலமாகவே தன்னை ஒரு பல்கலைக்கழகமாக நினைத்துக் கொள்கிற ஒளவை அவர்களே” என்று கேலியாகப் பேசினேன். ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுப்பது மூலமாகவே நீங்கள் பல்கலைக்கழகமாக ஆகிவிடலாம் என நினைக்கிறீங்களா?” என்று அந்த பட்டிமன்றத்தை அவர் கனமாக நடத்தவில்லை, மிகவும் விளையாட்டாக நடத்தினார். நான் உடனே கோபித்துக்கொண்டு பட்டிமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று நான் வெளியில் போய்விட்டேன்.
எனக்கு அப்பொழுது அப்படி ஓர் இயல்பு. பிறகு என்னை அழைத்து, “ஏன் ராஜா இதுக்கல்லாமா கோபப்படுவாங்க? இந்தப் பட்டிமன்றம் ஒரு பெரிய மகா மன்றமா ? மகிழ்ச்சியாக இருங்கள். அடிக்கடி கோபித்துக் கொள்கிறீர்களே! நீங்கள் எதிர்காலத்தில் விட்டுக்கொடுத்து வர வேண்டாமா? எல்லோருடனும் இணங்கிப் போக வேண்டாமா?” என்று, வாழ்க்கை என்றால் என்ன என்று சொன்னார்.
ஒளவை அவர்கள், டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜானகி அம்மா போன்ற முதல்வர்கள் இருந்தபோது பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோதும் பணியாற்றியிருக்கிறார். நான்கு முதல்வர்களிடத்திலும் நல்ல பெயர் வாங்கி அந்த இடத்திலிருந்து வெளியில் வந்திருக்கிறார். யோசித்துப் பாருங்கள்.
எங்கள் பொள்ளாச்சி அருட்செல்வர் ஐயா நா.மகாலிங்கம் அவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். நா.மகாலிங்கம் அவர்களுக்கு கோபம் வராதபடி அந்த இலக்கிய விழாவைக் கொண்டு செலுத்த வேண்டுமென்றால் ஒளவை நடராசன் அவர்களால் மட்டும்தான் முடியும். அந்த விழாவில் எத்தனையோ நடக்கும்.
ஆனால், அவர் ஒரு விளையாட்டான ஒளவை அல்ல. எவ்வளவு கண்ணியமான பெரிய மனிதர் ஒளவை என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் அந்த பெயர் தெரியுமோ தெரியாதோ? சோமயாஜுலு என்பவர் விடுதலைப் போராட்ட மாவீரர்.
அவர் இராமலிங்கர் பணிமன்ற விழாவில் பேசுகிறார். ஏன்? சார் விடுதலைப் போராட்ட வீரராக இருந்தால் அவர் பேச்சில் வல்லவராக இருக்க வேண்டுமா? அவர்கள் எல்லாம் தேசத்திற்காகத் தியாகம் செய்தவர்கள். அவரது பேச்சு சுவாரஸ்யமாக இல்லை. சபையில் கேட்பவர்களுக்குச் சுவை என்பது இல்லை. இது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சோமையாஜுலு அவர்கள் பேசும்போது கை தட்டி உட்கார வைக்கலாம் என்று மக்கள் கைதட்டுகிறார்கள். தவறுதானே அது.
ஒரு தேசத் தியாகிக்கு நாம் அப்படி ஓர் அவமரியாதை கொடுக்கலாமா? எங்களோடு இங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஒளவை, “இந்த மக்களுக்குப் பாருப்பா அந்த ஆள் எவ்வளவு பெரிய தேச விடுதலைப் போராட்ட தியாகி என்பது தெரியல… கைதட்டுகிறார்கள்…” என்று விருட்டென்று எழுந்து போய்ப் பேசினார்கள். அதாவது தவறு என்று மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று.
அது முடிந்து கிரிதாரி பிரசாத் ஐயா கீதா போதகருடைய பேச்சு இருக்கிறது. அதன் மேலுள்ள மோகத்தில் மக்கள் காத்திருக்கிறார்கள் . அந்தப் பேச்சை சுவாரசியமாக கேட்பதற்கு இந்த ஆள் இடைஞ்சலாக பேசிக்கொண்டிருக்கிறார் என்று சோமயாஜுலு பேச்சை கைதட்டி உட்கார வைக்க நினைக்கிறார்கள். சோமையாஜுலு ஒருவழியாக முடித்தவுடனே மைக் முன்னே சென்று மக்களுக்குப் பாடம் நடத்தினார் ஒளவை நடராசன் அவர்கள். என்ன சொன்னார் தெரியுமா?
“பெரியோர்களே… அவர் பேசுவதே அந்த உதட்டிலேயிருந்து தமிழ் அழகாக இருக்கும். பட்டு நெசவு போல் இருக்கும். அவரது உச்சரிப்பிலேயே ஒரு பெரிய அழகு உண்டு. என்றைக்குமே இளமை மாறாமல் தமிழ் பேசுகிறவர் அவர். சோமையாஜுலுவைப் பற்றிச் சொல்கிறார், “அவர் எவ்வளவு பெரிய தியாகி. அவர் தியாகங்களுக்கெல்லாம் நாம் ஈடு கொடுக்க முடியுமா? நாம் ஒரு சுவையான ஒரு சொற்பொழிவு வேண்டும் என்பதற்காகத் தேசத்திற்கு பாடுபட்ட தியாகிகளுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் இருக்கலாமா” என்று மக்களுக்குப் பாடம் நடத்தினார்.
இத்தனைக்கும் அவர் யாரு? வரவேற்புரை, நன்றியுரை இந்த மாதிரி ஏதாவது ஒன்று சொல்லுவார். ஆனால்,அந்த விழாவில் திடீரென எழுந்து, “நான் நன்றியுரையை பிரசாத் அவர்கள் பேச்சுக்குப் பிறகு சொன்னால் நீங்கள் கேட்க மாட்டீர்கள். அதனால் நன்றி உரையை நான் முதலிலேயே சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்து, மக்களுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லி, பிரசாத் அவர்களுடைய பேச்சின் மோகத்தால்தான் மக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று அதை ஓரங்கட்டி அப்படியே நிறுத்தி வைத்து, பேச்சு என்றால் என்ன?என்ற ஓர் இலக்கணத்தை நிரூபித்து, தேசத்திற்காகப் பாடுபட்டவர்கள் எவ்வளவு மரியாதைக்கு உரியவர்கள் என்பதைப் புரிய வைத்து, கடைசியாக ஒரு ஐந்து நிமிடம் எட்டு மணிக்கு விழா முடிய வேண்டும்.
எட்டு மணிக்கு ஐந்தே நிமிடம் இருக்கும்போது சொல்லுகிறார். “இன்னும் ஐந்து நிமிடம் விழா நிறைவு பெறுவதற்கு இருக்கின்றது . கீதா போதகர் கிரிதாரி பிரசாத் அவர்கள் இப்பொழுது உரையாற்றுவார்” என்றார். “பேச்சு முக்கியமல்லை. தேசத்திற்காகப் பாடுபட்டவர்கள் முக்கியம்” என்பதைக் கண் முன்னாலே எங்களுக்குப் புரிய வைத்த இடம் அந்த இடம்.
அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். நீங்கள் எப்பொழுது எதைப்பற்றி கேட்டாலும் சரி. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ,தேவாரம் ,திருவாசகம் ,கம்பராமாயணம் என்று எதைப் பற்றியுமே ஆழமான ஒரு படிப்பு. அப்படி ஒரு நீண்ட சிந்தனையும் திறனும் உடையவர் அவர்.
அவரது எல்லையற்ற ஆற்றலுக்கு மேலுலமாறு உதாரணம், தொலைபேசி அடிக்கிறது. அப்பொழுது அவர் அரசாங்கத்தில் பணியில் இருக்கிறார். அப்போதெல்லாம் இக்காலத்தைப் போன்ற செல்போன் கிடையாது. தொலைபேசி மட்டும்தான் வரும். தொலைபேசியை எடுத்து “ஹலோ” என்கிறார். எதிர்தரப்பில் இருந்து வருகிறது, “நான் இராமச்சந்திரன் பேசுகிறேன்” என்று. “ராமச்சந்திரன்-னா எந்த ராமச்சந்திரன்? ஏகப்பட்ட ராமச்சந்திரன் இருக்கிறார்கள்?” ஏன்னா இவருக்கு நண்பர்கள் ராமச்சந்திரன் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
அப்போது முதல்வராக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவருக்கு அப்பொழுது தெரியவில்லை. உண்மையிலேயே பேசியது எம்ஜிஆர் அவர்கள்.அவர் இதைப்போல சிலகுறும்பு செய்வார். அவரே தொலைபேசியில் நேரடியாக அவரை அழைத்து, “நான் ராமச்சந்திரன் பேசுகிறேன்” என்றார்.
“ராமச்சந்திரன்னா? மொட்டையா சொன்னா எப்படித் தெரியும்? எந்த ராமச்சந்திரன்?” என்று இவர் கேட்கிறார். “உங்களுக்கு எத்தனை ராமச்சந்திரன் தெரியும்?” அவர் பதில் அங்கிருந்து. “அது ஏகப்பட்ட ராமச்சந்திரன் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ம்… நீங்கள் எந்த ராமச்சந்திரன்னு சொன்னால்தான உங்களை எனக்குத் தெரியும்?” என்று சொன்னார். “நான் முதலமைச்சர் ராமச்சந்திரன் பேசுகிறேன்”. என்றார்.
சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. “ஐயா… ஐயா…மன்னிக்க வேண்டும்… தாங்கள் என்று நினைக்கவில்லை. தங்களின் உதவியாளர்கள் தானே முதலில் தொலைபேசியில் அழைப்பார்கள். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் வேறு யாரோ ராமச்சந்திரன் என்று நினைத்தேன்”. என்றார்.
“பரவாயில்லை. உங்களுக்கு எத்தனை ராமச்சந்திரனை தெரியும் சொல்லுங்கள் எல்லாரையும் கேட்போம். யார்யாரென்று” எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே கேட்டுட்டு, ஒரு செய்தி சொல்கிறார். “இந்த விண்வெளிக்குப் போய்விட்டு வந்த வீரர்களுக்கு இன்று இரவு நான் விருந்து கொடுக்கிறேன். அவர்களுக்கு ஒரு சாப்பாடு கொடுக்கிறேன். அப்பொழுது நினைவுப் பரிசு ஒன்று வெள்ளியில் ஒரு பெரிய பரிசு கொடுக்கிறேன். அந்தப் பரிசில் தமிழிலிருந்து ஒரு நல்ல வார்த்தை பொறித்து கொடுக்க வேண்டும்.
அது விண்வெளியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.” எப்படி எல்லாம் நிபந்தனைகள் போடுகிறார் என்று பாருங்கள். “இப்போதே வேண்டும். ஏனென்றால் அது தயாராகி வரவேண்டும். ” நீங்கள் உடனே எனக்கு ஒரு திருக்குறள் சொல்லுங்கள். திருக்குறளோடு விண்வெளியில் எது சம்பந்தப்பட்டது? ஒரு குறள் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார். இதைப் போல் ஒரு முதலமைச்சர் கேட்டால் நம்மால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? ஒரு நொடியில்.. தாமதிக்காமல் எங்கள் ஐயா ஒளவை நடராஜன் சொல்கிறார்கள்,
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து” ( 353 )
என்று இப்படி ஒரு திருக்குறள் இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது.
யார் சந்தேகம் இல்லாதபடி தெளிவாக இவ்வுலகத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து – தள்ளி இருந்தால்கூட வானகம் என்பது நணியது உடைத்து – பக்கத்தில் இருப்பதைப்போல. விண்வெளியாகவே இருந்தாலும் தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டு போகிறவனுக்கு அது பக்கத்தில் இருக்கும் என்று இன்னொரு பொருள் வருகிறது அதற்குள். திருவள்ளுவர் இப்படிச் சொன்னதற்கு காரணம் வேறு.
அதனுடைய பொருள் வேறு. அந்தக் குறள் அதுக்குப் பொருந்தும் என்று சொன்ன உடனேயே… “பலே… நடராஜன்… பலே” என்று எம்ஜிஆர் அவர்கள் பாராட்டிவிட்டு, “இன்று மாலை விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், அந்த விருந்துக்கு நீங்களும் வாருங்கள்” என்றார். இவ்வாறு பல முதல்வர்களால் பாராட்டப்பட்ட, கவிக்கோ அப்துல் ரகுமான் இன்னும் சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற கவிஞர்களாலும் , பொள்ளாச்சி அருட்செல்வர் போன்ற, தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற… எத்தனையோ அரசியல் தலைவர்கள்… எத்தனையோ பெருமக்கள் பாராட்டி… பாராட்டி… பாராட்டிப் புகழ் பேசுகின்ற பெருமைக்குரியவர்கள் ஒளவை நடராஜன் அவர்கள்.
அவருடைய சொந்த வாழ்க்கையில் அண்மையிலே அவரது துணைவியாரை இழக்க வேண்டியச் சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பிரிவைத் தாங்குவது அவர்களுக்குச் சிரமம். ஏனென்றால் எல்லா வகையிலும் அவருக்கு உடல் நலத்திலும் சரி, பாதுகாவலராகவும் சரி துணையாக இருந்து பெருமை சேர்த்தவர்கள் அம்மையார் தாரா நடராஜன் அவர்கள். அவரே சொல்லுவார், “தாரா…தாரா… வந்தாரா ? அப்படித்தான் எல்லாருமே கேட்பார்கள்” என்று சொல்வார்.
அவர் திருமணமான புதிதில் கன்னியாகுமரி போயிருக்கிறார்கள்.அங்குச் சூரிய மறைவினைப் பார்க்க வேண்டும் என்று அம்மா சொல்லி இருக்கிறார்கள். இவர் நண்பருடன் பேச ஆரம்பித்தால் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருப்பார். பேசிக்கொண்டிருந்தவர் போகவேண்டும் என்பதை மறந்து விட்டார். அம்மா நேராகப் போய் சூரிய மறைவினைப் பார்த்துவிட்டு வந்து கொஞ்சம் கோபப்பட்டு விட்டார்கள். அதனால் கோபித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள். இந்த சம்பவத்தை நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் சொல்லிட்டுச் சென்றார் , அதாவது மனைவியைப் பற்றிக் குறையாகச் சொல்லாமல் சொல்கிறார்.
“அம்மா மிகவும் ஒழுக்கமானவர்கள்…எல்லாவற்றிலும் மிகவும் நேர்த்தியாக இருப்பவர்கள். நான் ஒன்றுமே கிடையாது. எல்லாம் நினைச்சபடி இருக்குற ஆள். எப்படித்தான் அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை” என்று தன்னுடைய துணைவியாருடைய பெருமையை, “நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று “அவர்களைப் போன்று நீங்கள் ஒழுக்கத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பார்.
அப்படிப்பட்ட மிகச்சிறந்த ஒளவை அவர்கள் பல்லாண்டு… பல்லாண்டு… வாழ வேண்டும். அவர்களை நான் வாழ்த்தி, வணங்கி, இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வைணவத்தில் வாழ்த்துவார்கள் , அதைப்போல ஒளவையைப் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்.
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

Add a Comment