அருவியும் – மலையும் வாழியர் நெடிதே !
உலகப்புகழ்ப் பெற்ற கனடா பல்கலைக்கழகத்தின் சார்பில் நிறுவப் பெற்ற நாவலர் அறக்கட்டளை
கவிப்பேரருவி – தமிழ் முழுதறிந்த தன்மையர் நம் கவியரசர் ஈரோடு தமிழன்பனுக்கும் ,
நுண்ணிய புலமை வாய்ந்த திண்ணிய நெஞ்சினர் என்று அனைத்து நாடுகளும் பாராட்டும் நிறைகலைத்திலகம் பேராசிரியர் மறைமலை அவர்கட்கும்
விருது வழுங்குவதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தேன் .
என் தோழராகிய கவியரசரும் –
மாணவச்செம்மல் என்று மதித்துப்போற்றும் மறைமலை அவர்களும்
தகுதியால் தலை நிமிர்ந்து வென்று நிற்கும் வெற்றியாளர்கள் .
இந்தப் பெருமித வெற்றியை நான் போற்றிப் பாராட்டுகிறேன் .
இருவரும் நேரில் கனடா செல்ல வாய்ப்பில்லாது போனால் ,
இருவரின் இல்லம் தேடி கனடா பல்கலைக்கழகத்தினர் வந்து வழங்குவது பொருத்தமாக இருக்கும் .
வளர்க தமிழ் ! வெல்க தமிழ் !
அன்போடு
ஒளவை நடராசன்
10 07 2021

Add a Comment