POST: 2021-07-29T10:27:29+05:30

சர்வதேசத் தமிழ்த் தாவர அனைத்து நாட்டு உணவாளர் பேரவை ,

சென்னை –

30 11 2014 .

அன்பார்ந்த பெருமக்களே !

உலகத் தாவர உணவாளர்கள் ஒருங்கு கூடி தமிழகத்தில் ஒரு கிளை இயக்கத்தை உருவாக்குவது நமக்கெல்லாம் பெருமிதமாக இருக்கிறது.

தினமணி ஆசிரியர் அவர்கள் பேசும் போது குறித்த செயல்கள் நமக்கு தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி ஒரு தளர்ச்சியைத் தருகிறது.

இந்திய மாநிலங்களுக்குள்ளேயே புலால் உணவு அதிகமாக உண்பவர்கள் உள்ள மாநிலம் தமிழகம்தான்.

குறைவாக உண்ணும் மாநிலம் குஜராத் மாநிலம் என்று ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள்.

காலத்தின் கோலம் உணவில் இப்படிப்பட்ட கேடு பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

தமிழில் நீங்கள் பார்த்தால் புலால் மறுப்பு என்பது எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ளலாம்.

புலை என்றாலேயே வெறுப்பு என்று பொருள்.

புலவி என்று சொன்னாலேயே கூட மாறுபடுவது என்பது பொருள்.

புலை, புலால், புலவு என்று சொல்கிற சொற்கள் எவையுமே தமிழுக்கு இசைந்த சொற்கள் இல்லை.

உயிர்க்கொலையும், புலைப்புசிப்பும் உடையவர் எல்லாம் உறவினர் அல்லர் என்பது வள்ளற் பெருமானுடைய திருமொழியாகும்.

உறவினர் அல்லர் என்று சொல்லுவது மட்டுமல்லாமல் அவர்கள் மக்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கூடக் கருதமுடியாது என்ற வகையில், தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டே அப்படிச் சொல்லி வந்தனர் .

இன்னும் கூட ஒன்று சொல்லலாம்.

உண்ணுகிற பொருளுக்கு உணவு, ஊண் என்று தான் பொருள்.

ஊன் என்பதற்கு உணவு என்ற பொருளே கிடையாது.

உடம்பினுடைய தோலுக்குத் தான் ஊன் என்று தான் பெயர்.

இன்னும் கூட நம்முடைய மலையாள நண்பர்கள் ‘ஊணு கழிஞ்சுன்னோ’ என்றுதான் கேட்பார்கள்.

எனவே, உண்ணுகிற பொருள்தான் ஊண் என்று அழைக்கப்படுகிறதே தவிர, தவறாக ஊண் என்பது ஊன் என்று மாறுபட்டதனால் எந்த நாளும் ஊன் உண்ணுகிற பழக்கம் தமிழர்களிடத்தில் இல்லை என்று சொல்லலாம்.

காலத்தினுடைய பழமையில் சங்கப்பாடல்களில் ஊனைச் சமைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம்.

காலம் நாளுக்கு நாள் மாறி வருகின்ற பொழுது, அறிவு வளர்ச்சியும்,ஆற்றல் வளர்ச்சியும் பெருகும்போது, கருத்துக்கள் மாறும். அந்த வகையிலேயேதான் கள்ளுண்ணுதலும், ஊணுண்ணுதலும் ஒரு பழக்கம் போல் சில காலம் அமைந்தன என்று சொன்னால் அந்த நாளிலேயே உண்ணாமையைப் போற்றுகிற பழக்கமும் இருந்திருக்கிறது.

உண்ணாமையைப் போற்றுகிற பழக்கம் என்று எடுத்துப் பார்த்தால், ஓராயிரம் ஆண்டுகள் என்று கணக்கிட்டுச் சொன்னால் அங்கே கூட இராவணனுடைய இல்லம் இது; வீடணனின் இல்லம் இது என்று சுட்டிக் காட்டுகின்ற பொழுது என்ன அடையாளம் சொல்வது என்று சொன்னால் ஊன் மணம் கமழாத வீடு இந்த வீடு என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே, காலத்தில் நமக்கே தெரியும்.

இலைகளும், தழைகளும், கனிகளும், காய்களும் மக்கள் இனத்தில் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்டவை.

வெட்டுவது அல்லது தின்பது , அரைப்பது என்ற சொற்களைப் பற்றியெல்லாம் ஆராய்ந்தவர்கள்கூட இந்த உணவு முறையில் புலால் உணவு தான் இப்படிப்பட்ட ஒரு முரட்டுப்போக்கினை நமக்கு உருவாக்கிற்று என்று சொல்கிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சான்றாகச் சொல்வார்கள்.

சான்றோர்கள் பேசும் பொழுது உண்ணுகிற பழக்கம், உடுக்கிற பழக்கம் அல்லது குளிக்கிற பழக்கம் அல்லது தனக்கு இருக்கிற சில தனிப்பட்ட பழக்கங்களைப் பற்றியெல்லாம் ஒரு பெரிய கருத்தாக எடுத்துப் பேசக் கூடாது என்ற கருத்தும் உண்டு.

அது சில பேருக்குச் சில வகையில் அமைந்து விடும் என்று.

ஆனால் திருவள்ளுவர் புலால் உண்ணாமை, கொல்லாமை என்ற இரண்டு அதிகாரங்களை அமைத்திருப்பதன் நோக்கமே இந்தப் புலை, கொலை இரண்டும் எப்படி ஒன்றாக இணைந்தது என்பதைக் காட்டுகிறது.

எனவே, கொலை செய்கிற மனம்தான் புலை உண்ணுகிற மனமாகிறது.

புலை உண்ணுகிற மனம் தான் கொலை செய்கிற மனமாகவும் ஆகிறது என்று கருத்து போல இடம் தருகிறது ,

கொல்லாமைக்கு என்று ஒரு அதிகாரம்;
புலால் உண்ணாமைக்கு என்று ஒரு அதிகாரம் என வகுத்து இருப்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.

இன்னும் கூடச் சொன்னால் திருவள்ளுவர் அவ்வளவு கடுமையாகச் சிலவற்றைச் சொல்லமாட்டார்.

அவர் பெரும்பாலும் இப்படி இருந்தால் நல்லது என்று சொல்லி இருப்பார்.

உண்ணற்க கள்ளை உணில் உண்க என்று சொல்வார்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

அந்தச் சொல்லையே பாருங்கள்

தன்ணூன் பெருக்கற்குத் தான் பெரிதினும் ஊண் உண்பான்.

அவர் உணவை அல்ல ஊன் உண்கிறவரைப் போய் உணவு உண்கிறவன் என்று கருத முடியுமா என்று சொல்லி. அதுமட்டுமல்லாமல் எது கடவுள் ?
எங்கே இருக்கிறார் கடவுள் ? என்றெல்லாம் கேட்கிறீர்களே –

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உலகமும் தொழும் –
என்று சொல்கிற ஒரு பெருமிதம் இருக்கிறது .

தமிழ்நாட்டில் இயல்பான ஒரு சமய உணர்வு எப்போது வரும் என்று சொன்னால், உணவில் தான் வரும் என்று நினைத்திருக்கிறார்கள்.

அவர்கள் உண்ணுகிற பழக்கத்திலேயே தான் வரும் என்றும் கருதினால் வைணவர்களாகட்டும் அல்லது மற்றவர்களாகட்டும் நாங்களெல்லாம் சைவர்கள் என்று சொல்வார்கள்.

ஆகவே உண்ணுகிற பழக்கத்தை வைத்துக்கொண்டே சமய உணர்வு எப்படி உருவாகிறது என்று எண்ணிப் பார்க்கின்ற பொழுது, தமிழகத்திலேயே வள்ளற் பெருமான் வருந்திச்சொன்ன கருத்து என்ன என்று சொன்னால் எத்தனையோ வழிபாட்டு முறைகள், யோகம் சொன்னார், யாகம் சொன்னார் என்றெல்லாம் பலரைச் சொல்லுவார்கள்.

ஆனால் வள்ளலாரைப் பின்பற்றுவது என்பதற்கு ஏதேனும் ஒரு வழி இருக்குமானால் புலால் உண்ணாமை ஒன்றுதான் ஒழுக்கம் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அவர் வேறு ஒரு கருத்தையும் எல்லாக் கருத்தையும் நீங்கள் பிழிந்து பார்த்தாலும் கூட உயிர்கள் மீது காட்டுகிற இரக்கம் என்று சொல்வதிலே இந்தப் புலால் உண்ணாமைக்காகவே சுத்த சன்மார்க்கத்தை உருவாக்குவது என்று அவர் நினைத்தது நாம் எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

எப்படியோ மறந்துபோய் நம்முடைய சொற்கள் திரிந்ததால், ஊன் வேறு ஊண் வேறு என்கிற பழக்கத்தை இனியாவது நாம் வலியுறுத்தி உண்ணப்படுவது ஊணே தவிர, ஊண் என்பது ஒரு போதும் உண்ணப்படுவது அன்று .

சான்றாண்மைக்குப் பெரிய இலக்கணமாகத் திகழ்ந்த புத்தபெருமான் கூட கிடைக்கிற உணவை எடுத்து உண்டு விடலாம்.

இதில் என்ன மறுப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

மற்ற எல்லாச் சமய நூல்கள் சொன்ன போதும் கூட நண்பர் சொன்னது போல, தமிழகத்தினுடைய ஒரு சாரமான நூல் என்று நினைக்கின்ற பொழுது திருவள்ளுவர் இந்தப்புலால் உண்ணாமையை மிகப்பெரிதாக வற்புறுத்துவது அவருடைய குறிக்கோளுக்கும் அரணாகிறது .

இது ஒரு நல்ல நாள். நீங்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி இருக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல.

இந்த நல்ல நாளில் வட மாநிலங்களில் கூட திருக்குறள் நாள் கொண்டாடலாம் என்று பேசினார்கள் என்பதும் என்பதும், நம்முடைய தருண் விஜய் தன்னுடைய மேலவைச் சொற்பொழிவில் கூட இந்தக் கருத்தைக் குறித்திருக்கிறார் என்று பார்க்கும்போது திருவள்ளுவர் எங்கே பிறந்தார் என்பது மட்டுமல்ல, வடமாநிலங்களிலும் இருந்தார் என்பதற்குரிய சான்றாக இந்த நாள் கொண்டாடுவதனால் புலால் உண்ணுகிற பழக்கம் மெல்ல மெல்லக் குறைந்து, குறைந்து, குறைந்து பிறகு தேய்ந்து, ஒழிந்து, மாய்ந்து விட வேண்டும் என்பது தான் நம்முடைய விருப்பமாகும் .

:https://youtu.be/DFvsHR-iiZs

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *