இலக்கியச் செல்வருக்கு ஈடில்லாத இழப்பு ! – துணைவியார் மறைவு
அருமை அண்ணல் – இலக்கியச் செம்மல் அரசியல் திலகம் குமரி அனந்தன் துணைவியார் மறைந்த செய்தி கேட்டு மனம் துணுக்குற்றேன் .
ஓயாத புயலான கணவர் வாழ்வில் துணையாகவும் – மேதகு ஆளுநராகத் தம் திருமகளாரைக் கண்ணாரக் கண்ட பெருமாட்டியாராகவும் விளங்கிய திருமதி கிருஷ்ணகுமாரி அம்மையார் வாழ்வு நிறைவடைந்தது .
எண்பதைத் தாண்டினால் தான் நிறை முதுமையின் தொடக்கம் என்று கூறலாம் .
தொடக்க முதுமையில் அம்மையார் மறைந்தார் .
உயர்ந்த குடும்பத்தின் திருமகளாகவும் – ஒப்பற்ற கணவரின் மனைவியாகவும் ஓங்கிய புகழ் கொண்ட மகளாருக்குத் தாயாகவும் அவரைத் தமிழ்நாடு என்றும் பாராட்டி நெகிழும் .
துயரத்தோடு
ஒளவை நடராசன்
18 8 2021

Add a Comment