வாசுகி அம்மையார் வடித்த கண்ணீர் !
எங்கிருந்தாலும் வாழ்க !
அன்புள்ள அருள்
பெரிய மனநிறைவாக உங்க அம்மாவுக்கு செய்ய வேண்டிய அந்த பூஜையைச் சிறப்பாகச் செய்தீர்கள்.(4.8.2021)
அதிலும் ஒளியகம் ஒளியரசு ஐயா அமைதியாக முழுமையாக அக்கறையோடு நிறைவேற்றினார் .
அது ஒன்னு தான் நமக்கு நேரடியாக நல்வாழ்வு தரக்கூடியது.
அம்மாவுடைய படத்தைப் பார்க்கும்போது நமக்கு அவர்கள் நம் முன் இல்லை என்கிற வேதனை
ஆனால் என்னமோ தெரியல கூட இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது.
இன்று கூட டாக்டர் என்னுடன் இருக்கிற மாதிரி உணர்கிறேன்
இல்லை என்று நினைக்கத் தோன்றவில்லை.
அதே மாதிரி நம் அம்மா இருப்பதை உணர முடிகிறது .
அதே மாதிரி தான் அம்மாவும் கூட இருக்கிற மாதிரி தான் தோன்றுகிறது.
நிச்சயமாக உடம்பாக இல்லையென்றாலும் அவங்களுடைய ஆன்மா உங்களை எப்பவும் வழிநடத்தும்
அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஒரு அருமையான குடும்பம் இப்படி தமிழுக்காகவும் உலக ஆரோக்கியத்திற்கான மருத்துவத்திற்கும் பிள்ளைகளை ஈன்றெடுத்த பெருமாட்டி அவர்கள்.
அந்த வகையில் நல்ல தாய் தந்தையரை பெற்ற மகன்கள். நீங்கள் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள்.
அவங்கள எப்படிப் பார்த்துக்கணும் , கண்ணும் கருத்துமாய் ரெண்டு பேரையும் பார்த்துக் கொண்டதைக் கண்ணால் பார்க்கிறேன்
உண்மையிலே நீங்கள் மூவரும் சிறந்த மகன்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் .
அவர்களுடைய ஆன்மா சாந்தியோடு உங்கள் குடும்பத்தை வாழையடி வாழையாய் ஆசி வழங்கிப் பாதுகாத்து நல்ல உயர்நிலைக்குக் கொண்டு வருவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
மீண்டும் மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களையும் என்னுடைய அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்
எங்கிருந்தாலும் வாழ்த்திட வேண்டும் அம்மா !
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்த்திட வேண்டும் !
இறையடி நிழலில் துயிலும் அன்னையே !
எங்கிருந்தாலும் வாழ்த்திட வேண்டும் !
அம்மா உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிறைந்தவரே !
உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிறைந்தவரே !
செயலால் அனைவரது நினைவில் வாழ்பவரே !
செயல்களால் அனைவரது நினைவிலும் வாழ்பவரே !
எங்கிருந்தாலும் வாழ்த்திட வேண்டும் அம்மா !
கண்ணான கணவரைக் கருத்துடன் காத்தவரே !
முத்தான மும்மணிகளை உலகிற்கு ஈந்தவரே !
கணவரை கருத்துடன் காத்தவரே !
மருத்துவப் பணியில் நிறைவாழ்வு வாழ்ந்தவரே !
மனம் உருகி உம்மையே போற்றி வணங்குகின்றோம் !
மனமுருகி உம்மையே போற்றி வணங்குகின்றோம் !
இன்றோ எங்கிருந்தாலும் வாழ்த்திட வேண்டும்
இறையடி நிழலில் துயிலுரும் அன்னையே !
எங்கிருந்தாலும் வாழ்த்திட வேண்டும் அம்மா !
வாழ்த்திடுவேன் அம்மா !
நல் ஆசி தந்து வாழ்த்திட நீர் அம்மா !!…..
திருமதி வாசுகி கண்ணப்பன்

Add a Comment