வெற்றி உலா வரும் தங்கத்தாரகை – செல்வி. இனியா பரதன் நடராசன்
எடின்பர்கு கோமான் விருது மூலம் குடியரசுத் தலைவர் விருதுக்கான தங்கத் தரநிலையை நிறைவு செய்த செல்வி. இனியா நடராசனுக்கு எங்கள் பள்ளியில் பனிரெண்டாமிலும் இனியாவுக்கு நெஞ்சார வாழ்த்துகள் !
விலங்குகளைப் பாதுகாப்பதற்கும், யூதரின மகளிர் சங்கத்திற்குத் தொண்டுகள் செய்யவும் தனது நேரத்தை வழங்கி இனியா நற்பணி ஆற்றியுள்ளார்.
இனியா ஒரு புதிய கருவியை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
அதன் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்களைத் தனது திறனை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்தினார்.
இணையவழி வகுப்புகள் நடக்கும்போதிலும், தான் மேற்கொண்ட புதிய முயற்சியில் அரிய முன்னேற்றத்தைக் கண்டார்.
கராத்தே பயிற்சியில் கலந்து கொண்டு, அதில் முதல் நிலை கருப்புப் பட்டை வென்ற பின் ஓடத் தொடங்கினார்.
துணிச்சல் நிறைந்த பயணம் மற்றும் வாழ்விடம் சார்ந்த திட்டம் இரண்டிலும் மிகுந்த இடர்ப்பாடுகளைக் கடந்து வந்ததாகவும் ஒவ்வொரு மூன்று நிலைகளையும் கடந்து வருவதில் வியக்கத்தக்க மன உறுதியையும் கடமையுணர்வையும் வெளிப்படுத்தியதாகவும் இனியா தன் நேர்காணலில் கூறினார் .
குடியரசுத் தலைவர் விருது, பன்னாட்டு அளவில் மதித்தேற்க்கப்பட்ட இளைஞர் மேம்பாட்டுத் திட்டமாகும்,
பங்கேற்பாளர்கள் பற்பல துறைகளில் வளர்ச்சியடைவதற்கு இவ்விருது ஊக்கமளிப்பதுடன், சீரான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான உந்துதலையும் அளிக்கிறது.
இந்த நிலையை அடைவதற்கு மிகுந்த ஊக்கமும் – உறுதியும் தேவைப்படுகின்றன .
விருதை முடித்த பங்கேற்பாளர்கள் பன்னாட்டு இளைஞர்களுக்கு விருதாளர்கள் சமூகத்தில் இணைகிறார்கள்.
பரந்து விரிந்த சமுதாயத்தின் மீது எங்கள் மாணவர்கள் கொண்டுள்ள அக்கறையையும், சவால் நிறைந்ததொரு செயலை முயல வேண்டும் எனும் மன உறுதியையும் வெற்றி கொள்ள வேண்டும் எனும் பொறுப்புணர்வையும் இப் பாராட்டு வெளிபடுத்துவதால், இத்தகைய முயற்சிக்கு ரெட் ஹில் பள்ளி ஆதரவளிக்கிறது.
உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் – இனியா !
நமது மரபின் மாட்சிக்குப் பெருமிதம் சேர்த்துள்ளார் தென்னாப்பிரிக்காவிலுள்ள என் பெய்ர்த்தி இனியா .!!
ஒளவை நடராசன்
Massive congratulations to Inia Natarajan (Grade 12) who has completed the GOLD Standard of the President’s Award through the Duke of Edinburgh Award!
Inia completed her service by dedicating time to Animal Ark and knitting squares for the Union of Jewish Women. Inia learned to play a new instrument and used her Oboe lessons for her skill component and showed great progress despite a shift to online lessons. She participated in Karate of which she is 1st Dan black belt and took up running! Inia says that she was pushed out of her comfort zone on both her adventurous journey and residential project, and has shown incredible #grit and #commitment in completing each of the three levels.
The President’s Award is an internationally recognised youth development programme that encourages participants to develop themselves in multiple areas thus encouraging a balanced lifestyle. It requires a great deal of dedication and participants who complete the award join a community of international award holders. Redhill supports this initiative as it reflects the #CARE our students have for the broader community, the #COURAGE to try something challenging and the #COMMITMENT to follow through
We are exceptionally proud of you, Inia!

Add a Comment