ஜப்பானிய நிகழ்ச்சி – ஒரு குறிப்பு :
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியைப் பறி கொடுத்திருந்த முதிய மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனச்சோர்விலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மனவியல் மருத்துவர் விக்டர் பிராங்கெல்லை அணுகினார்.
அணுகியவருடைய நிலையை அலசுவதற்கோ அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கோ மருத்துவர் பிராங்கெல் முனையவில்லை.
பிராங்கெல் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டார்.
உங்கள் மனைவிக்கு முன்னர் நீங்கள் இறந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் ?
இதைக் கேட்டு வந்திருந்த அவர் நிலைகுலைந்து போனார்.
அது என் மனைவிக்கு மிகவும் கொடுமையானதாக அமைந்திருக்கும்.
நான் இல்லாமல் அவள் மிகவும் துயரப்பட்டிருப்பாள்,என்று அந்த முதியவர் தெரிவித்தார்.
அதைக் கேட்ட விக்டர் பிராங்கெல் , நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு பெரிய மனத்துயரத்தை – அவலத்தைத் தவிர்த்திருக்கிறீர்கள் என்று பார்த்தீர்களா !
டாக்டர் இதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரே விலை உங்கள் நிலை நீங்கள் உயிர் பிழைத்திருப்பதும் உங்கள் மனைவிக்காகத் துக்கப்படுவதும் – ஆறுதல் அடைவதும் தான் என்று கூறினார்.
அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.
அவர் பிராங்கெல்லின் கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மன நிம்மதியுடன் அவருடைய மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
தன்னுடைய ஆருயிர் மனைவிக்காக அவர் தன் துக்கத்தைத் தாங்கிக் கொண்டார்.
இப்போது அவருடைய வாழ்க்கைக்கு ஒரு ஆறுதல் கிடைத்துவிட்டது.
மொழியாக்கம் :
திருமதி நாகலட்சுமி சண்முகம் – மும்பை . பக்கம் 62-63

Add a Comment