பகுத்தறிவுத் தந்தை !
தமிழர் வாழ்வின் விடிவெள்ளி
அறிஞர்க்கு அறிஞர்
மானமும் அறிவும் மாந்தர்க்கு உடைமை !
எந்நாளும் தலைநிமிர்ந்து வாழும்
தன்மானமே வாழ்வின் கடமை !
பெரியார் 143 ஆம் பிறந்த நாள் இன்று (17.9.2021)
வாழ்வில் புத்தொளி கண்ட பொன்னாள் !
பெரியார் கொள்கை வெல்க !
சாதி ,மதம் ,குலம் முதலிய முதலைகளின் வாய்ப்பட்டு
தவித்த தமிழினத்தைத் தானே நின்று –
தன்னையே நம்பி வென்று காட்டிய வெண்தாடி வேந்தன் ,
ஆலயம் , நீதிமன்றம் ,
ஆட்சியவை ,
கல்வி நிறுவனங்கள்
இப்படி அங்கிங்கெனாதபடி
ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்த
திராவிட இனத்தை எதிர்த்து காத்து வாழ்வளித்த ஆலமரம்!
அந்த ஆலின் நிழலில் தான்
தலைமுறை – தலைமுறையாக
நாம் நிமிர்ந்து வாழ்கிறோம் .
வாழ்க பெரியார் !
வெல்க பகுத்தறிவு !!
ஒளவை நடராசன்
சமூகநீதி நாள் உறுதி மொழியின் தமிழ் மூலத்தை தில்லி வாழ் நண்பர்கள் ஆங்கிலத்திலத்திலும்,இந்தியிலும் வேண்டும் என்றதும் என் மகன் மொழிபெயர்ப்பு இயக்குநர் அருள் ஆங்கிலத்திலும்,பிரிவு அலுவலர் பொன்னையா பூபதி இந்தியில் ஆற்றிய மொழியாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி நாள் உறுதிமொழி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்,
பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய
கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது
இரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!
Social Justice Day-Solemn Oath
Beings by birth are equal
along the Path of Love and compassion
Every place is my town,
everyone, my kin
along the Path of Culture-
I swear to abide by these dictum all along my life course.
All actions shall I perform
with Vision sharp
spotlit by self respect
and ministerial conscience persistently
I submit myself totally
to equality, fraternity and common weal,
never overstepping the Reasonable.
Passion for Humanism and Humanity
shall circulate in my bloodstream
To raise a human Society
on fundamental Social Justice
all through my life
I shall carry on, unto the last,
I swear.
सामाजिक न्याय दिवस की शपथ
सभी प्राणियों के जन्म में समता देखनेवाला ‘प्रेम’ और
वसुधैव कुटुम्बकम्, याने,
‘यह धरती ही मेरा परिवार है’, की ‘सम्यता’ को
अपने जीवन के सिद्धांत मानकर चलूँ।
स्वाभिमानी व्यक्तित्व और चेतना की तीक्षणता
आदि से मेरे कर्म भरे रहे।
समता, भाईचारा और समधर्म आदि सिद्धांतों पर
मैं अपने को निछावर करूँ।
मानव-प्रेम और मानवता ही
मेरे लहू के प्रवाह बने रहें।
आज मैं शपथ लेता / लेती हूँ कि
सामाजिक न्याय के नींव पर खड़े
समाज के निर्माण की
मेरी या़त्रा अविरत चलती रहे।

Add a Comment