செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 19
மக்களைத்தேடி மருத்துவம்
மருத்துவத்துறையின் மணிமுடியாக மக்களைச் சென்றடையும் மருத்துவம் என்ற திட்டத்தின் பெருமையை அளவிட்டுரைக்க முடியாது .
இங்கிலாந்தில் தான் மக்கள் உடல்நலம் அரசின் பொறுப்பில் அமைந்தது என்பர்
.அந்தக்கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் இந்த ஒப்பற்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார் . .
கைநீட்டி அழைத்தால் கடவுள் வருவார் என்பது போல உயிர்காக்கும் மருத்துவம் மக்களைத் தேடி விரைந்து வந்திருக்கிறது .
அமைச்சர் பெருந்தகை மா சுப்பிரமணியன் கடமை வீரர் , மக்கள் நலனைக் கருத்தாகக் கொண்டவர் என்பதை மாநகரத்தந்தையாக அவர் திகழ்ந்த போதே நிலை நிறுத்தியவர் .
இராப்பகலெல்லாம் பாராது இருபத்து நான்கு மணிநேரமும் மக்கட்பணிக்குத் தம்மை ஒப்படைத்துள்ளார் .
அமைச்சரின் உயர்வைத் தமிழக முதல்வரே நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் .
முத்தமிழறிஞர் கலைஞர் சிந்தனைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இத்தொடரில் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேருரையில் அவர் கூறிய மணியான கருத்துக்கள் இன்று நடைமுறையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைத்தவாறே நிறைவேறி வருவது நமக்குப் பெருமிதம் தருவதாகும் .
“ மருத்துவர்கள் திறமைசாலிகளாக இருப்பதுடன் மனித நேயமுடையவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும்.
நோயென்று வருகின்ற ஒருவருக்கு மருத்துவர் காட்டும் இன்முக வரவேற்பே நோய் தீர்க்கும் முதல் சிகிச்சையாகிறது.
மருத்துவரின் நம்பிக்கையூட்டும் பேச்சே நோயாளியின் இதயத்துக்கு வலுவூட்டுகிறது.”
– கலைஞர்
பட்டமளிப்புப் பேருரையை இனிக் காணலாம் .
கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தலைவரை அழைத்து இம் மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்ததிலும் – இந்த ஆண்டு இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதிலும் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் நம் வேந்தராம் ஆளுநர் அவர்களும், துணைவேந்தரும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் எனக்கும் ஒரு பட்டம் வழங்குவது, என்று முடிவு செய்தார்கள் என்பது , என்னை அழைத்தபோது எனக்குத் தெரியாது.
முடிவெடுத்த பிறகு அவர் தம் உணர்வுகளை மறுத்திட வழியின்றி, நண்பர் பெயரால் அமைந்த பல்கலைக்கழகமன்றோ, அதனை எண்ணிப் பூரிப்புக் கொண்டு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளுவரின் நான்கு வகை மருத்துவத் துறையைக் கருதினார் .
மருந்து என ஒரு தனி அதிகாரமே திருவள்ளுவப் பெருமான் எழுதினார் ,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் –
வாய்நாடி வாய்ப்பச் செயல். என்றும்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்றும் கூறியதோடு அல்லாமல் –
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
என்ற குறள் மூலம்
நோயுற்றவன்,
நோய் தீர்க்கும் மருத்துவன், நோய்க்கேற்ற மருந்து,
அருகிருந்து மருந்தளிக்கும் செவிலியர்
என நான்கு வகைப்பாடு உடையது மருத்துவத்துறை என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவர் வரையறுத்துள்ளார்.
அகத்தியர், திருமூலர், தேரையர், புலிப்பாணி, போகர் எனப் பழம்பெரும் ஆன்றோர்கள், பல்லாண்டுகளுக்கு முன்பே அவர்கள் நடைமுறையிற் கொண்ட இன்று எளிமையாகப் புறக்கணிக்கப்படும் பச்சிலை மூலிகை மற்றும் பல்வேறு மருந்துகளைப் பற்றி விளக்கிச் சொல்லிப் புகழ்நாட்டும் மருத்துவத்தை பழம் போக்கில் வையத்திற்கு வழங்கிச் சென்றுள்ளார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியினூடே புதிய புதிய கண்டுபிடிப்புகள். ஆய்வுகள், நாளும் பெருகிவரும் இக்காலத்திலும் கூட நாட்டு வைத்தியத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் இணைப்புப் பாலம் ஒன்று இல்லாமற் போகவில்லை.
எடுத்துக்காட்டாகக் , காமாலை நோய்க்குக் கீழா நெல்லி வேரை முன்பு அப்படியே அரைத்துக் கொடுத்தோம் !
இன்று அதனைப் பக்குவப்படுத்தி, அளவிற் சிறிதாக்கி – ஆனால் அதன் சக்தி குறையாமல், நவீனக் குப்பிகளில் அடைத்துப் பயன்படுத்துகிறோம் !
இப்படிப் பழைய வைத்தியம், இன்றைய பல நவீன முறைகள் எனும் மாடமாளிகை, கூட கோபுரங்கள் எழுந்திட அடித்தளமாய் முன்னர் விளங்குவதை நாம் மறந்திடலாகாது !
தமிழகத்தில் முறையான மருத்துவக் கல்வி தொடங்கி, இன்றைக்கு 155 ஆண்டுகள் ஆகின்றன.
முதன் முதலாகச் சென்னை மருத்துவக் கல்லூரி, 1835 – ஆம் ஆண்டு உதயமாயிற்று.
இரண்டாவதாக ஸ்டான்லி மருத்துவப் பள்ளி, 1938 – ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது.
மேலை நாடுகளின் மருத்துவக் கல்வி வளர்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சி போன்றவை இடைவிடாது நமது மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தப் பெருந்துணையாக அமைந்துள்ளன.
ஒரு நாட்டின் செழிப்பும் அமைதியும் நிலைபெற, அந்த நாட்டின் வளம்பெற்ற மக்களே பெருங் காரணமென்பேன்.
தமிழக அரசு இன்று பத்து மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும், இரண்டு செயற்கை உறுப்புப் பொருத்தி மறுவாழ்வு தரும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது.
மருத்துவர்கள் திறமைசாலிகளாக, தேவைக்கேற்ற மருத்துவ மனைகள் மட்டுமிருப்பின் போதாது.
அந்தத் திறமைசாலிகள் மனித நேயமுடையவர்களாகவும், மருத்துவமனைகள் மக்களின் உயிர்காக்கும் கடமையுணர்வுமிக்கதாகவும் இருந்திடும் புனித நிலையங்களாகவும் திகழ்ந்திடல் வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு ஏழைக்கும் போதிய மருத்துவ வசதி இன்மையால், சிகிச்சை பெற இயலவில்லை என்ற நிலை ஏற்படக் கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாயிருந்து வருகிறேன்.
இம் மாநிலத்தில், நவீன மருத்துவ வசதி கிடைக்கவில்லையென்று எவரும் வேதனை படக்கூடாது.
எல்லா மருத்துவ வசதிகளும் இம்மாநிலத்தில் கிடைப்பதற்கான வழி செய்வதும், தொழில் நுட்பப் பணியாளர்கள் மருத்துவர்கள், மருத்துவத் துணைப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டியதும் மிகவும் இன்றியமையாதவையாகும்.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, மக்கள் நல்வாழ்வுப் பணிக்கெனப் பல்கலைக் கழகம் ஒன்றை ஏற்படுத்துவதால் ஏற்படக் கூடிய நன்மை தீமை குறித்து, மருத்துவத் துறையினர் கூடி விவாதம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த விவாதம், டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார் காலத்திலேயே தொடங்கி வைக்கப்பட்டது.
பல்கலைக் கழகங்களில், துறை நிலையில் இருந்த வேளாண்மைக் கல்வி, தனித்தனித் துறைகளில் சிறப்பு நிலை பெறுவது என்ற கோட்பாடு உருவாகியதன் விளைவாக இந்நாட்டில் பல வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் மலர்ந்தன.
இந்த வளர்ச்சியானது பசுமைப் புரட்சிக்கும் பால் வளப் பெருக்கத்திற்கும் வித்திட்டது.
கல்வியானது, இன்றைய நிலையில் விரிந்து, பரந்து, பல துறைகளாகப் பல்கியுள்ளது.
அத்துறைகளின் தரமும் மேம்பாடு குறையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது கொள்கை வகுப்போரின் பொறுப்பாகும்.
இம்மாநிலம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவது குறித்து, அடுத்துக் கவனம் செலுத்தியது.
இதனால் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி பெற்று, ஆராய்ச்சிக்கான வள வாயில்கள் பெருகி, தொழில் நுட்பக் கல்வியாளர்கள் தொழில் துறையில் அதிக நாட்டம் செலுத்தத்தக்க சூழ்நிலை உருவாகி,
மக்களின் கனவு நனவாகி வருகிறது.
மருத்துவப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துவதால் மருத்துவக் கல்வியின் தரமும் மருத்துவ முறையும் பொது நலவாழ்வு நிலையும் மேம்பாடடைய வழி வகுக்கும்.
மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் ஏனைய பல்கலைக்கழகத்திற்குமிடையே கொள்கை அளவிலும், கல்வி அளவிலும் பல வேறுபாடுகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், நிருவாக நடைமுறைகளில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் இருப்பது பற்றி ஒரு சிலர் மட்டுமே அறிவர்.
இதில் எத்தகைய இடர்ப்பாடு இருந்தாலும், இம்மாநிலத்தில் மருத்துவப் பட்டதாரிகளுக்கு அளிக்கும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதன் அவசியத்திற்கு எதிரான மாற்றுக் கருத்து ஏதுமில்லை .
இக்காலம் எல்லா நிலைகளிலும் சிறப்பு நிலைப் பயிற்சி தேவைப்படுகின்ற காலமாகும்.
அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் உலகம் முழுவதும் மிக விரைந்து பரவி வருகின்றன.
இம்முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஒவ்வொரு துறையிலும் மேன்மேலும் சிறப்பு நிலைப் பயிற்சி மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
உலக மருத்துவ அறிஞர்களோடு ஒப்பிட்டு நோக்கும் அளவிற்கும், ஒருங்கு வைத்து எண்ணத்தக்க அளவிற்கும், தமிழக மருத்துவப் பட்டதாரிகளும் முதுநிலைப் பட்டதாரிகளும் தகுதியும், சிறப்பான பயிற்சியும் பெற்றுள்ளனர் என்பது அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.
பல்லாண்டுக் காலமாகவே தமிழக அரசு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கும், குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு செய்யும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.
இதனால், மருத்துவப் பணிகளின் தரத்தில் எந்தவிதச் சீர்குலைவும் ஏற்படவில்லை .
அன்றியும், நம் மருத்துவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று எவரும் குறை காணும் நிலையில் எழுந்ததில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகள், செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் நம் நாட்டு மருத்துவப் பட்டதாரிகளை விரும்பி அழைக்கும் நிலையுள்ளது.
நாம் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல அறிவியல் ஆராய்ச்சிச் சாதனைகளில் மனநிறைவளிக்கத்தக்க
முன்னேற்றத்தை அடையவில்லை என்ற கருத்துப் பரவலாக உள்ளது.
ஆராய்ச்சி நெறிமுறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நிலை, பயிற்சியில்லாமை, அடிப்படை வசதியில்லாமை, நிதி நெருக்கடி ஆகிய காரணங்களால் நாம் இச்சாதனைகளை எய்த முடியவில்லை.
நூலகங்களை அமைத்தல், ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக நம்முடைய மருத்துவப் பல்கலைக் கழகம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் நம்முடைய அரசு இந்நிலையைப் போக்கப் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசின் நிதி ,தொழில் நுட்பவியல், சட்டம், அறிவியல், கலைகள், மொழிகள் ஆகிய கல்வித் துறைகள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி அமைச்சகங்களின் கீழ் வருகின்றன. இவை, மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் கலைக்கழக மானியக் குழுவின் மூலம் மத்திய நிதி உதவியை ஓரளவிற்குப் பெறுகின்றன.
ஆனால் மருத்துவக் கல்வித்துறை, நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு அளவில் நிதியுதவி அளிக்கிறது.
அது, இந்நாட்டின் ஒரு சிறு பகுதியின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கின்றது.
இந்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலானவை, அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன.
இவற்றிற்கு மாநில அரசுகளே முழு அளவில் நிதி உதவி அளிக்கின்றன.
தற்போது, பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு இணையாகக் கருதக்கூடிய அளவில் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் கீழ் எந்த அமைப்பும் இல்லை .
மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டுமென்ற எண்ணம் டாக்டர் ஏ.எல். முதலியார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோதே உருவான போதிலும், மத்திய அரசின் மானியங்கள் இல்லாத காரணமாக, இது செயல்வடிவம் பெறவில்லை .
டாக்டர் ஏ எல் முதலியார் அவர்கள் , சேப்பாக்கத்திலுள்ள கலை – அறிவியல் வளாகம் , கிண்டியிலுள்ள தொழில் நுட்பவியல் – அறிவியல் வளாகம் , தரமணியிலுள்ள மருத்துவ அறிவியல் வளாகம் ஆகிய மூன்று அமைப்புகளை உருவாக்கினார் .
இந்தத் தொழில் நுட்பவியல் வளாகம் பின்னர் தொழில் – நுட்பப் பல்கலைக்கழக வளாகமாக உருவாகியது .
இதற்கு மாநில அரசிடமிருந்தும் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்தும் ஒரு சேர நிதியுதவி பெற்று விரைவாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புள்ளது.
இப்போது தனியே மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக் கழகத்தையும், இதன் வளாகத்தையும், மேம்பாடடையச் செய்ய மாநில அரசு நிதி திரட்ட வேண்டியுள்ளது.
இப்பல்கலைக்கழகம், மருத்துவச் சிகிச்சை ஆய்வில் ஈடுபட்டு நோய் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிவதில் பெரு நாட்டம் கொண்டுள்ளது என்பதை நான் நன்கறிவேன்.
மக்கள் நல்வாழ்வுக்காக ஆய்வு செய்ய வேண்டிய துறைகள் இன்னும் பல உள்ளன.
தமிழ்நாட்டில் மருந்து தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற நமது விருப்பத்திற்கு, மருந்தாக்கியல் ஆராய்ச்சிப் பிரிவு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் தேவை அதிகமாகவும், ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறது.
இதற்கிடையேயுள்ள இடைவெளியை நிரப்பும் பொருட்டு மருத்துவத் துறைப் பணியாளர்களுக்குப் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிற்சிக்குரிய வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நம் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்குப் பொது மருத்துவத் துறையிலும், கொள்கை நோயியலிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
தொன்று தொட்டு வரும் பண்டைய மருத்துவ முறைகள் குறித்துக் குறிப்பாக இம்மாநிலத்தில் வழிவழியாக வரும் சித்த மருத்துவ முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு அம்மருத்துவ முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்பணிகளைச் செய்து முடிக்க அதிக அளவு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.
இந்நோக்கங்களை எய்துவதற்காக வென்றே இந்த மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தற்போது அரசு பயன்படுத்த எண்ணியுள்ளது.
இப்பல்கலைக்கழக வாயிலாகக்
கிடைக்கப்பெறும் வசதிகளைப் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் .
நமது நாட்டில் நவீன மருத்துவக் கல்வி குறித்து, வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் நோய் தீர்க்கும் முறைகளைப் பின்பற்றுகிறதேயன்றி, இந்தியக் கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டியங்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது.
இந்தியக் கிராம மக்களிடையே மருத்துவத் துறையினர் நெருங்கிய தொடர்பு கொள்ள, மருத்துவப் பணியின் நேரடி நடவடிக்கைகளுக்கும், பல்வேறு மருத்துவ அமைப்புகளுக்குமிடையே இப்பல்கலைக்கழகம் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்.
முதுநிலைப் பட்டதாரிகளான உங்களில் பெரும்பாலோர் அரசு பணியில் இருக்கின்றீர்கள்.
சிலர் தனியார் துறையில் பணிபுரிகின்றீர்கள்.
நீங்கள் எங்குப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள போதிலும், உங்களுடைய தலையாய நோக்கம் சமுதாயத்திற்குப் பணிபுரிவதாகவே இருக்க வேண்டும்.
இன்றைய உலகியல் வாழ்வு பணத்தின் மூலம் வரும் மதிப்பையும் செல்வாக்கையுமே முக்கியமானதாகக் கருதும் பண்பாட்டுச் சூழலைக் கொண்டுள்ளது.
மருத்துவர்கள் மட்டும் இத்தகைய பொதுவான போக்கிலிருந்து விலகித் தனித்து இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
ஆயினும் பணம் சம்பாதிப்பது என்பது தொண்டு புரிவதன் வாயிலாகப் பெயரையும் புகழையும் ஈட்டுவதற்கு எதிரானதல்ல.
அறிவை வளர்த்துக் கொள்வதில் நாட்டம், தொண்டாற்றுவதில் ஈடுபாடு, புகழடைய வேண்டும் என்ற குறிக்கோள், செல்வத்தைச் சேர்ப்பது ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து பிணைந்து செல்லத்தக்கவையாகும்.
தொண்டாற்றுவதன் மூலமாகவும், நேர்மையாக நடப்பதன் வாயிலாகவும் நல்ல பெயரையும் அதன் பயனாக அதிகமான வாடிக்கையாளர்களையும், வசதியான – நிலையான வாழ்க்கையையும் நாம் அடையலாம்.
மருத்துவர்க்கு எளிமை, இன்முகம் வேண்டும்
இன்று, நம் பல்கலைக்கழக வேந்தரின் பெருமைக்குரிய கைகளிலிருந்து முதுநிலைப் பட்டத்திற்குரிய சான்றிதழைப் பெறவிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களுடைய தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்துத் திறமையை நிலைநாட்ட வேண்டுமென்றும், வாழ்நாள் முழுவதிலும் மேன்மேலும் மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதில் நீங்கள் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நோயென்று வருகின்ற ஒருவருக்கு மருத்துவர் காட்டும் இன்முக வரவேற்பே நோய் தீர்க்கும் முதல் சிகிச்சையாகிறது.
மருத்துவரின் நம்பிக்கையூட்டும் பேச்சே அந்த நோயாளியின் இதயத்துக்கு வலிவூட்டுகிறது.
என்னதான் சகலகலா வல்லவரான மருத்துவராயிருந்தாலும் கடுமொழி கூறுபவராகவும், காசின் மேல் மட்டும் குறியானவராகவும், மறந்தும் புன்னகை புரியாதவராகவும் இருப்பாரேயானால், அரிது அரிது அவரிடம் சிக்கியவரின் நோய் தீர்வது அரிதேயாகும், என்பதை மருத்துவத்துறை நண்பர்கள் உணர்ந்து, மக்கள் பணியாற்றிட வேண்டுமென அழைக்கிறேன்.
மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து அளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இப் பல்கலைக்கழகம் செய்து கொடுக்க வேண்டும்.
அத்தகைய முயற்சிகள் அனைத்திற்கும் அரசு அதன் முழு ஆதரவையும் அளிக்கும்.
பல் மருத்துவம், செவிலியர் மருந்தாக்கியல் போன்ற தொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டங்களைப் பெறுபவர்களும் பன்னலமும் பெற முயன்று உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அனைத்து நற்பேறுகளையும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
நீங்கள் அனைவரும் அயராது உழைத்து, உங்களுக்குக் கிட்டும் அனைத்து வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்தி, நம்முடைய நாட்டின், நீங்கள் கல்வி பயின்ற பல்கலைக்கழகத்தின், உங்கள் கல்லூரியின், உங்கள் குடும்பத்தினரின் உயர்ந்த நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்.
உங்களுடைய நேர்மையான முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிட்ட வேண்டுமென்று நான் மனமார வாழ்த்துகிறேன்.
முரசொலி – 15.10.1990
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் …செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 19
மக்களைத்தேடி மருத்துவம்
மருத்துவத்துறையின் மணிமுடியாக மக்களைச் சென்றடையும் மருத்துவம் என்ற திட்டத்தின் பெருமையை அளவிட்டுரைக்க முடியாது .இங்கிலாந்தில் தான் மக்கள் உடல்நலம் அரசின் பொறுப்பில் அமைந்தது என்பர் .அந்தக்கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் இந்த ஒப்பற்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார் . .
கைநீட்டி அழைத்தால் கடவுள் வருவார் என்பது போல உயிர்காக்கும் மருத்துவம் மக்களைத் தேடி விரைந்து வந்திருக்கிறது .அமைச்சர் பெருந்தகை மா சுப்பிரமணியன் கடமை வீரர் , மக்கள் நலனைக் கருத்தாகக் கொண்டவர் என்பதை மாநகரத்தந்தையாக அவர் திகழ்ந்த போதே நிலைநிறுத்தியவர் .இராப்பகலெல்லாம் பாராது இருபத்து நான்கு மணிநேரமும் மக்கட்பணிக்குத் தம்மை ஒப்படைத்துள்ளார் .அமைச்சரின் உயர்வைத் தமிழக முதல்வரே நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் .
முத்தமிழறிஞர் கலைஞர் சிந்தனைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இத்தொடரில் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேருரையில் அவர் கூறிய மணியான கருத்துக்கள் இன்று நடைமுறையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைத்தவாறே நிறைவேறி வருவது நமக்குப் பெருமிதம் தருவதாகும் .
“ மருத்துவர்கள் திறமைசாலிகளாக இருப்பதுடன் மனித நேயமுடையவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும். நோயென்று வருகின்ற ஒருவருக்கு மருத்துவர் காட்டும் இன்முக வரவேற்பே நோய் தீர்க்கும் முதல் சிகிச்சையாகிறது. மருத்துவரின் நம்பிக்கையூட்டும் பேச்சே நோயாளியின் இதயத்துக்கு வலுவூட்டுகிறது.”
– கலைஞர்
பட்டமளிப்புப் பேருரையை இனிக் காணலாம் .
கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தலைவரை அழைத்து இம் மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்ததிலும் – இந்த ஆண்டு இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதிலும் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் நம் வேந்தராம் ஆளுநர் அவர்களும், துணைவேந்தரும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் எனக்கும் ஒரு பட்டம் வழங்குவது, என்று முடிவு செய்தார்கள் என்பது , என்னை அழைத்தபோது எனக்குத் தெரியாது. முடிவெடுத்த பிறகு அவர் தம் உணர்வுகளை மறுத்திட வழியின்றி, நண்பர் பெயரால் அமைந்த பல்கலைக்கழகமன்றோ, அதனை எண்ணிப் பூரிப்புக் கொண்டு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளுவரின் நான்கு வகை மருத்துவத் துறையைக் கருதினார் .
மருந்து என ஒரு தனி அதிகாரமே திருவள்ளுவப் பெருமான் எழுதினார் ,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் –
வாய்நாடி வாய்ப்பச் செயல். என்றும்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். என்றும் கூறியதோடு அல்லாமல் –
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து. என்ற குரள் மூலம் நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோய்க்கேற்ற மருந்து, அருகிருந்து மருந்தளிக்கும் செவிலியர் என நான்கு வகைப்பாடு உடையது மருத்துவத்துறை என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒரு வள்ளுவர் வரையறுத்துள்ளார்.
அகத்தியர், திருமூலர், தேரையர், புலிப்பாணி, போகர் எனப் பழம்பெரும் ஆன்றோர்கள், பல்லாண்டுகளுக்கு முன்பே அவர்கள் நடைமுறையிற் கொண்ட இன்று எளிமையாகப் புறக்கணிக்கப்படும் பச்சிலை மூலிகை மற்றும் பல்வேறு மருந்துகளைப் பற்றி விளக்கிச் சொல்லிப் புகழ்நாட்டும் மருத்துவத்தை பழம் போக்கில் வையத்திற்கு வழங்கிச் சென்றுள்ளார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியினூடே புதிய புதிய கண்டுபிடிப்புகள். ஆய்வுகள், நாளும் பெருகிவரும் இக்காலத்திலும் கூட நாட்டு வைத்தியத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் இணைப்புப் பாலம் ஒன்று இல்லாமற் போகவில்லை. எடுத்துக்காட்டாகக் , காமாலை நோய்க்குக் கீழா நெல்லி வேரை முன்பு அப்படியே அரைத்துக் கொடுத்தோம் !
இன்று அதனைப் பக்குவப்படுத்தி, அளவிற் சிறிதாக்கி – ஆனால் அதன் சக்தி குறையாமல், நவீனக் குப்பிகளில் அடைத்துப் பயன்படுத்துகிறோம் !
இப்படிப் பழைய வைத்தியம், இன்றைய பல நவீன முறைகள் எனும் மாடமாளிகை, கூட கோபுரங்கள் எழுந்திட அடித்தளமாய் முன்னர் விளங்குவதை நாம் மறந்திடலாகாது !
தமிழகத்தில் முறையான மருத்துவக் கல்வி தொடங்கி, இன்றைக்கு 155 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலாகச் சென்னை மருத்துவக் கல்லூரி, 1835 – ஆம் ஆண்டு உதயமாயிற்று. இரண்டாவதாக ஸ்டான்லி மருத்துவப் பள்ளி, 1938 – ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. மேலை நாடுகளின் மருத்துவக் கல்வி வளர்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சி போன்றவை இடைவிடாது நமது மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தப் பெருந்துணையாக அமைந்துள்ளன. ஒரு நாட்டின் செழிப்பும் அமைதியும் நிலைபெற, அந்த நாட்டின் வளம்பெற்ற மக்களே பெருங் காரணமென்பேன்.
தமிழக அரசு இன்று பத்து மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும், இரண்டு செயற்கை உறுப்புப் பொருத்தி மறுவாழ்வு தரும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது.
மருத்துவர்கள் திறமைசாலிகளாக, தேவைக்கேற்ற மருத்துவ மனைகள் மட்டுமிருப்பின் போதாது. அந்தத் திறமைசாலிகள் மனித நேயமுடையவர்களாகவும், மருத்துவமனைகள் மக்களின் உயிர்காக்கும் கடமையுணர்வுமிக்கதாகவும் இருந்திடும் புனித நிலையங்களாகவும் திகழ்ந்திடல் வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு ஏழைக்கும் போதிய மருத்துவ வசதி இன்மையால், சிகிச்சை பெற இயலவில்லை என்ற நிலை ஏற்படக் கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாயிருந்து வருகிறேன்.
இம் மாநிலத்தில், நவீன மருத்துவ வசதி கிடைக்கவில்லையென்று எவரும் வேதனை படக்கூடாது. எல்லா மருத்துவ வசதிகளும் இம்மாநிலத்தில் கிடைப்பதற்கான வழி செய்வதும், தொழில் நுட்பப் பணியாளர்கள் மருத்துவர்கள், மருத்துவத் துணைப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டியதும் மிகவும் இன்றியமையாதவையாகும்.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, மக்கள் நல்வாழ்வுப் பணிக்கெனப் பல்கலைக் கழகம் ஒன்றை ஏற்படுத்துவதால் ஏற்படக் கூடிய நன்மை தீமை குறித்து, மருத்துவத் துறையினர் கூடி விவாதம் நடத்தி வந்துள்ளனர். இந்த விவாதம், டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார் காலத்திலேயே தொடங்கி வைக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களில், துறை நிலையில் இருந்த வேளாண்மைக் கல்வி, தனித்தனித் துறைகளில் சிறப்பு நிலை பெறுவது என்ற கோட்பாடு உருவாகியதன் விளைவாக இந்நாட்டில் பல வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் மலர்ந்தன.
இந்த வளர்ச்சியானது பசுமைப் புரட்சிக்கும் பால் வளப் பெருக்கத்திற்கும் வித்திட்டது. கல்வியானது, இன்றைய நிலையில் விரிந்து, பரந்து, பல துறைகளாகப் பல்கியுள்ளது. அத்துறைகளின் தரமும் மேம்பாடு குறையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது கொள்கை வகுப்போரின் பொறுப்பாகும்.
இம்மாநிலம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவது குறித்து, அடுத்துக் கவனம் செலுத்தியது. இதனால் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி பெற்று, ஆராய்ச்சிக்கான வளவாயில்கள் பெருகி, தொழில் நுட்பக் கல்வியாளர்கள் தொழில் துறையில் அதிக நாட்டம் செலுத்தத்தக்க சூழ்நிலை உருவாகி,
மக்களின் கனவு நனவாகி வருகிறது. மருத்துவப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துவதால் மருத்துவக் கல்வியின் தரமும் மருத்துவ முறையும் பொது நலவாழ்வு நிலையும் மேம்பாடடைய வழி வகுக்கும்.
மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் ஏனைய பல்கலைக்கழகத்திற்குமிடையே கொள்கை அளவிலும், கல்வி அளவிலும் பல வேறுபாடுகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், நிருவாக நடைமுறைகளில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் இருப்பது பற்றி ஒரு சிலர் மட்டுமே அறிவர். இதில் எத்தகைய இடர்ப்பாடு இருந்தாலும், இம்மாநிலத்தில் மருத்துவப் பட்டதாரிகளுக்கு அளிக்கும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதன் அவசியத்திற்கு எதிரான மாற்றுக் கருத்து ஏதுமில்லை . இக்காலம் எல்லா நிலைகளிலும் சிறப்பு நிலைப் பயிற்சி தேவைப்படுகின்ற காலமாகும்.
அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் உலகம் முழுவதும் மிக விரைந்து பரவி வருகின்றன. இம்முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஒவ்வொரு துறையிலும் மேன்மேலும் சிறப்பு நிலைப் பயிற்சி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. உலக மருத்துவ அறிஞர்களோடு ஒப்பிட்டு நோக்கும் அளவிற்கும், ஒருங்கு வைத்து எண்ணத்தக்க அளவிற்கும், தமிழக மருத்துவப் பட்டதாரிகளும் முதுநிலைப் பட்டதாரிகளும் தகுதியும், சிறப்பான பயிற்சியும் பெற்றுள்ளனர் என்பது அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.
பல்லாண்டுக் காலமாகவே தமிழக அரசு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கும், குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு செய்யும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இதனால், மருத்துவப் பணிகளின் தரத்தில் எந்தவிதச் சீர்குலைவும் ஏற்படவில்லை . அன்றியும், நம் மருத்துவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று எவரும் குறை காணும் நிலையில் எழுந்ததில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள், செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் நம் நாட்டு மருத்துவப் பட்டதாரிகளை விரும்பி அழைக்கும் நிலையுள்ளது.
நாம் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல அறிவியல் ஆராய்ச்சிச் சாதனைகளில் மனநிறைவளிக்கத்தக்க
முன்னேற்றத்தை அடையவில்லை என்ற கருத்துப் பரவலாக உள்ளது. ஆராய்ச்சி நெறிமுறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நிலை, பயிற்சியில்லாமை, அடிப்படை வசதியில்லாமை, நிதி நெருக்கடி ஆகிய காரணங்களால் நாம் இச்சாதனைகளை எய்த முடியவில்லை. நூலகங்களை அமைத்தல், ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக நம்முடைய மருத்துவப் பல்கலைக் கழகம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் நம்முடைய அரசு இந்நிலையைப் போக்கப் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசின் நிதி ,தொழில் நுட்பவியல், சட்டம், அறிவியல், கலைகள், மொழிகள் ஆகிய கல்வித் துறைகள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி அமைச்சகங்களின் கீழ் வருகின்றன. இவை, மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் கலைக்கழக மானியக் குழுவின் மூலம் மத்திய நிதி உதவியை ஓரளவிற்குப் பெறுகின்றன. ஆனால் மருத்துவக் கல்வித்துறை, நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு அளவில் நிதியுதவி அளிக்கிறது. அது, இந்நாட்டின் ஒரு சிறு பகுதியின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கின்றது. இந்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலானவை, அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கு மாநில அரசுகளே முழு அளவில் நிதி உதவி அளிக்கின்றன. தற்போது, பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு இணையாகக் கருதக்கூடிய அளவில் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் கீழ் எந்த அமைப்பும் இல்லை .
மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டுமென்ற எண்ணம் டாக்டர் ஏ.எல். முதலியார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோதே உருவான போதிலும், மத்திய அரசின் மானியங்கள் இல்லாத காரணமாக, இது செயல்வடிவம் பெறவில்லை .
டாக்டர் ஏ எல் முதலியார் அவர்கள் , சேப்பாக்கத்திலுள்ள கலை – அறிவியல் வளாகம் , கிண்டியிலுள்ள தொழில் நுட்பவியல் – அறிவியல் வளாகம் , தரமணியிலுள்ள மருத்துவ அறிவியல் வளாகம் ஆகிய மூன்று அமைப்புகளை உருவாக்கினார் .இந்தத் தொழில் நுட்பவியல் வளாகம் பின்னர் தொழில் – நுட்பப் பல்கலைக்கழக வளாகமாக உருவாகியது .இதற்கு மாநில அரசிடமிருந்தும் பல்கலைக்கழங்க மானியக் குழுவிடமிருந்தும் ஒரு சேர நிதியுதவி பெற்று விரைவாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புள்ளது.
இப்போது தனியே மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தையும், இதன் வளாகத்தையும், மேம்பாடடையச் செய்ய மாநில அரசு நிதி திரட்ட வேண்டியுள்ளது. இப்பல்கலைக்கழகம், மருத்துவச் சிகிச்சை ஆய்வில் ஈடுபட்டு நோய் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிவதில் பெரு நாட்டம் கொண்டுள்ளது என்பதை நான் நன்கறிவேன். மக்கள் நல்வாழ்வுக்காக ஆய்வு செய்ய வேண்டிய துறைகள் இன்னும் பல உள்ளன.
தமிழ்நாட்டில் மருந்து தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற நமது விருப்பத்திற்கு, மருந்தாக்கியல் ஆராய்ச்சிப் பிரிவு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் தேவை அதிகமாகவும், ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறது. இதற்கிடையேயுள்ள இடைவெளியை நிரப்பும் பொருட்டு மருத்துவத் துறைப் பணியாளர்களுக்குப் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிற்சிக்குரிய வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நம் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்குப் பொது மருத்துவத் துறையிலும், கொள்கை நோயியலிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். தொன்று தொட்டு வரும் பண்டைய மருத்துவ முறைகள் குறித்துக் குறிப்பாக இம்மாநிலத்தில் வழிவழியாக வரும் சித்த மருத்துவ முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு அம்மருத்துவ முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பணிகளைச் செய்து முடிக்க அதிக அளவு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இந்நோக்கங்களை எய்துவதற்காக வென்றே இந்த மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தற்போது அரசு பயன்படுத்த எண்ணியுள்ளது. இப்பல்கலைக்கழக வாயிலாகக்
கிடைக்கப்பெறும் வசதிகளைப் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் .
நமது நாட்டில் நவீன மருத்துவக் கல்வி குறித்து, வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் நோய் தீர்க்கும் முறைகளைப் பின்பற்றுகிறதேயன்றி, இந்தியக் கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டியங்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. இந்தியக் கிராம மக்களிடையே மருத்துவத் துறையினர் நெருங்கிய தொடர்பு கொள்ள, மருத்துவப் பணியின் நேரடி நடவடிக்கைகளுக்கும், பல்வேறு மருத்துவ அமைப்புகளுக்குமிடையே இப்பல்கலைக்கழகம் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்.
முதுநிலைப் பட்டதாரிகளான உங்களில் பெரும்பாலோர் அரசு பணியில் இருக்கின்றீர்கள். சிலர் தனியார் துறையில் பணிபுரிகின்றீர்கள். நீங்கள் எங்குப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள போதிலும், உங்களுடைய தலையாய நோக்கம் சமுதாயத்திற்குப் பணிபுரிவதாகவே இருக்க வேண்டும்.
இன்றைய உலகியல் வாழ்வு பணத்தின் மூலம் வரும் மதிப்பையும் செல்வாக்கையுமே முக்கியமானதாகக் கருதும் பண்பாட்டுச் சூழலைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள் மட்டும் இத்தகைய பொதுவான போக்கிலிருந்து விலகித் தனித்து இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஆயினும் பணம் சம்பாதிப்பது என்பது தொண்டு புரிவதன் வாயிலாகப் பெயரையும் புகழையும் ஈட்டுவதற்கு எதிரானதல்ல.
அறிவை வளர்த்துக் கொள்வதில் நாட்டம், தொண்டாற்றுவதில் ஈடுபாடு, புகழடைய வேண்டும் என்ற குறிக்கோள், செல்வத்தைச் சேர்ப்பது ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து பிணைந்து செல்லத்தக்கவையாகும். தொண்டாற்று வதன் மூலமாகவும், நேர்மையாக நடப்பதன் வாயிலாகவும் நல்ல பெயரையும் அதன் பயனாக அதிகமான வாடிக்கையாளர்களையும், வசதியான – நிலையான வாழ்க்கையையும் நாம் அடையலாம்.
மருத்துவர்க்கு எளிமை, இன்முகம் வேண்டும்
இன்று, நம் பல்கலைக்கழக வேந்தரின் பெருமைக்குரிய கைகளிலிருந்து முதுநிலைப் பட்டத்திற்குரிய சான்றிதழைப் பெறவிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களுடைய தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்துத் திறமையை நிலைநாட்ட வேண்டுமென்றும், வாழ்நாள் முழுவதிலும் மேன்மேலும் மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதில் நீங்கள் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். நோயென்று வருகின்ற ஒருவருக்கு மருத்துவர் காட்டும் இன்முக வரவேற்பே நோய் தீர்க்கும் முதல் சிகிச்சையாகிறது. மருத்துவரின் நம்பிக்கையூட்டும் பேச்சே அந்த நோயாளியின் இதயத்துக்கு வலிவூட்டுகிறது. என்னதான் சகலகலா வல்லவரான மருத்துவராயிருந்தாலும் கடுமொழி கூறுபவராகவும், காசின் மேல் மட்டும் குறியானவராகவும், மறந்தும் புன்னகை புரியாதவராகவும் இருப்பாரேயானால், அரிது அரிது அவரிடம் சிக்கியவரின் நோய் தீர்வது அரிதேயாகும், என்பதை மருத்துவத்துறை நண்பர்கள் உணர்ந்து, மக்கள் பணியாற்றிட வேண்டுமென அழைக்கிறேன்.
மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து அளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இப் பல்கலைக்கழகம் செய்து கொடுக்க வேண்டும். அத்தகைய முயற்சிகள் அனைத்திற்கும் அரசு அதன் முழு ஆதரவையும் அளிக்கும்.
பல் மருத்துவம், செவிலியர் மருந்தாக்கியல் போன்ற தொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டங்களைப் பெறுபவர்களும் பன்னலமும் பெற முயன்று உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அனைத்து நற்பேறுகளையும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
நீங்கள் அனைவரும் அயராது உழைத்து, உங்களுக்குக் கிட்டும் அனைத்து வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்தி, நம்முடைய நாட்டின், நீங்கள் கல்வி பயின்ற பல்கலைக்கழகத்தின், உங்கள் கல்லூரியின், உங்கள் குடும்பத்தினரின் உயர்ந்த நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன். உங்களுடைய நேர்மையான முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிட்ட வேண்டுமென்று நான் மனமார வாழ்த்துகிறேன்.
முரசொலி – 15.10.1990
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் …

Add a Comment