ஆறுமுகம் பெற்ற அண்ணல் !
அண்ணாநகரில் காலையில் தன் வீட்டில் வளர்ந்த பசுவையும் கன்றையும் தன் மூத்த பிள்ளையுடன் நடத்திச்சென்ற பெருந்தகை சுப்பிரமணியம் தம்பதியருக்கு ஆறு மக்கட் செல்வங்கள் – ஆறு முகங்களில் வேறு முகம் என்று எவரையும் பிரிக்க முடியாது .
தன்லப்(Dunlop) கார் சக்கர நிறுவனத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார் .
என்னிடத்தில் பேசும் போதெல்லாம் எனக்குப் பலம் அறிவு தான் வேறு பின்புலம் எங்களுக்கு இல்லை என்று இயல்பாகக் கூறுவார் .
ஆறு பிள்ளைகளும் ( இரு மகளையும் சேர்த்து )
இராமசாமி,ஸ்ரீராம்,இராமனாதன், சித்திரா,சங்கர்,சுதா அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்துள்ளனர் .
கண்ணன் – அருள் – பரதன் , மூவரிடத்திலும் மாறாத அன்புடையவர்கள் .
ஆறு பேரும் ஐ ஐ டி யில் தான் சேர்வேன் என்றனர் .
அப்படியே சேர்ந்தனர் – வென்றனர் .
அவ்வளவு பேரும் அமெரிக்காவில் சிகரத்தைத் தொட்டவர்களாகச் சிறப்புடன் உள்ளனர் .
மூத்த மகன் இராமசாமி அவ்வப்போது இந்தியா வரும் போது என்னைப்பார்க்க வருவார் .
அதே பரிவு ,பாசம் !
கண்ணனுக்கு நெருங்கிய நட்பு ! அவ்வப்போது பேசுவார்கள் .
சென்னைக்கு வந்தால் அருளிடம் பேசுவதைக் கண்டிருக்கிறேன் .
இன்முகத்திலகம் இராமசாமியின் திருமணச் செய்தி (4.7.2021)கேட்டு அருள் உடனே வாழ்த்திட வேண்டும் என்றார் .
வாழ்த்துகிறேன் .பல்லாண்டு !
அப்பாவின் பெருமைக்குப் புகழ் சேர்க்கிறார்கள் அருமைச் செல்வங்கள் வாழ்க !
ஒளவை நடராசன்

Add a Comment