POST: 2021-10-11T09:41:15+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !
பகுதி – 22

கிரேக்கமும் – தமிழியலும்

கடலுக்குள் நாலாயிரம் ஆண்டுகள் என்ற தம்முடைய நூலில் அறிஞர் பிலிப் டியோல் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறேன் :

மத்திய தரைப் பகுதியில் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதை நினைவிற் கொண்டு அம்மரபுகளைப் போற்றிவரும் தமிழர்கள் திராவிடர்களாவர்-

ஆரியர்களுக்கு முற்பட்டவர்கள்.

சிறப்புக் குன்றாத தொன்மையான இலக்கியத்தைக் கொண்டவர்கள்.

1600 பாடல்கள் கொண்ட தொகுதி தமிழிலக்கியத்துக்கு அடித்தளம்.

மேற்கிலிருந்து கடல் வழியாக வந்த மனிதர்களுக்கு இத் தமிழர்கள் சூட்டிய பெயர் அயோனியர் – யோனர், யோனகர், யவனர் என்பதாகும்.

கி.மு. நாலாவது – ஒருவேளை கி.மு. ஆறாவது நூற்றாண்டிலிருந்து கூட அவர்கள் இச்ச்சொற்களைக் கையாண்டிருக்கலாம்.

தமிழ் நாகரிகம் அராபிய நாகரிகத்தைக் காட்டினும் தொன்மையானதில்லை என்றாலும், அதை ஒத்த தொன்மையுடையது.

இவ்விருமக்களில் எவருடைய கொடை மிகுதி என்று ஒப்பீடு செய்தால் தமிழர் மிக உயர்ந்து நிற்பர்.

தமிழ் மக்களுள் வேந்தரான பாண்டியர் அகஸ்டஸ் அரச சபைக்கு ஒரு தூது அனுப்பினார் .

கடல் வழிகளைக் கலக்கித் துருவி அறிந்தவர்களாதலால் ஒரே காலத்தில் மேலை நாட்டு நாகரிகமும் சீன நாகரிகமும் பற்றிய அறிவு படைத்தவர்களாயிருந்தனர்.

இந்தக்குறிப்பை நான் பல்லாண்டுகளுக்கு முன் படித்தேன்

.அறிஞர் க சி கமலையா ஆனந்த மாநடம் என்ற நூலில் ஒரு கட்டுரையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார் .

இந்நிலையில் தான் பாண்டியன் ரோமாபுரிக்குத் தூதனுப்பிய செய்தியைக் கொண்டு நம் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ரோமாபுரிப்பாண்டியன் என்னும் வரலாற்றுக்காப்பியம் என் நினைவில் நின்றது .

கதையின் காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று முன் நிறுத்தினார் .

கிமு.30 லிருந்து கி.மு.20 வரை ஆகும்.

கி.மு.20 இல் பாண்டியப்பேரரசன் தம் அரசனை தூது ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினை வைத்துக் கொண்டு அதனைச் சுற்றி இந்தக்கதை புனைந்தார் .

பூம்புகார் நாடகத்திலும் ஒரு கிரேக்கக் கிழவனை படைத்துக்காட்டினார் .

நம் தலைவர் கிரேக்க ரோமானியத் தொடர்பை அடிக்கடி கூறிப் பெருமிதம் அடைவார் .

பூம்புகாருக்குக் கோவலனோடு கிரேக்கக்கிழவன் வரும் காட்சியும் அவன் இசை கற்க வந்தான் என்றும் மாதவி ஆடலில் மயங்கினான் என்பதையும் முன்னரே கண்டுள்ளோம் .

இதில் வரும் வரலாற்று மாந்தர்கள்

, சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான்,

பாண்டியப்பேரரசன் பெருவழுதி,

வேளிர்குடி அரசன் இருங்கோவேள்,

ரோமப்பேரரசர் அகஸ்டஸ் சீசர்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகியோரும் கற்பனை மாந்தர்களாகத் தாமரை, முத்துநகை, களிக்கண்ணனார் செழியன், நெடுமாறன் ஆகியோரும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த எழுத்தோவியத்தில் அந்தக்கால நாகரிகம், ஆடை
அணி கலன்கள் ,சமுதாயப் பொருளியல் நிலை என்று என்று பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

கரிகால் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார் எவ்வளவு சீரும் சிறப்புமாக செழித்திருந்தது என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்ட நம் கலைஞர் பூம்புகாரில் எழுப்பிய மண்டபங்கள் இலக்கியப் பெருமிதம் கொண்டவை .

மதுரை மற்றும் துறைமுகம் கோநகர் கொற்கையும் விளக்கப்பட்டிருக்கிறது.

கொற்கையின் முத்துக்களின் உலகளாவிய புகழ் மற்றும் முத்து அணிகலன்களாக
முத்துக்கடுக்கண்,
முத்துக்கண்டி,
முத்துச்சல்லி
ஆகியவற்றை குறிப்பிடுவதோடு முத்துக்களால் செய்யப்பட்ட மருந்துகளான,
முத்துக்கற்கம்,
முத்துச் சுண்ணம், மணப்பந்தலில் தூவக்கூடிய முத்து மணலையும்
நம் கலைஞர் உருகிக் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அங்குக் கிடைக்கும் சிப்பிகளான இடம்புரி, வலம்புரி, சலஞ்சலங்சங்கு, பாஞ்சன்யம் ஆகியவற்றையும் விளக்குகிறார்.

கொற்கையின் அங்காடியில் பலவித மொழிகள் பேசும் வணிகர்கள் வந்து சென்றதையும் கடைகள் அமைத்து வணிகம் புரிந்ததையும் எழுதியுள்ளார் .

பாண்டியனின் இன்னொரு பெயர் ‘பஞ்சவர்’ என்றும் பாண்டிய நாட்டிலே, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலப்பகுதிகளையும் ஆண்டவர் என்பதால் அந்தப் பெயர் அமைந்திருக்கலாம் என்ற புதிய சிந்தனைகளையும் வழங்கியுள்ளார் .

கரிகாலன் இமயத்தில் புலிச்சின்னம் பொறித்துத் தன் பெயரைச் சூட்டியதைச் சொல்லும் போது சிலைகள் வைப்பது எதிர்காலத்திற்கு வரலாற்றைச் சொல்வதற்குத்தான் என்று நாளை நடப்பதை அன்றே கண்டார் .

பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம்,
நட்டுவாக்கலி மீசை,
களிற்றின் வயிறு போல் நிலைக்கதவுகள்,
கொன்றைக்காய் விரல்கள்,
வற்றிய பீர்க்கங்காய்
போன்ற உடல் போன்றவை கலைஞரின் கற்பனைத்திறனைக் காட்டும் சிறு சான்றுகளாகும் .

ரோம் நகரின் அழகு, வரலாறு, அகஸ்டஸ் கால அறிஞர்கள் ஆகியவற்றைச் சொல்லும் போது நம் கலைஞர் தாம் சென்று கண்ட அனுபவம் வெளிப்படுகிறது.

கிளேடியட்டர் சதுக்கத்தில் நம் பாண்டியன் காண்டாமிருகத்தை அடக்குவது வீரப்புதுமை .

கடந்த வாரம் பேராசிரியர் இராம குருநாதன் வழங்கிய கவிதை மரபும் தொல்காப்பியமும் என்ற நூலைக் கண்டேன்

.பல்லாண்டுகள் பேராசிரியராகவும் – நாடறிந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் மிளிரும் நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் பெரும் பாராட்டுக்குரியது .

தமிழ் ,ஆங்கிலம் இரு மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர் எழுதிய கட்டுரை கிரேக்கத் தொடர்புடையதாய் விளங்கியது .

எனவே அக்கட்டுரையின் சில பகுதியினை இங்கே இணைத்துக் காணலாம் .

கிரேக்கத்தில் தமிழ்ச்சுவடுகள் என்று எவற்றையாவது காணமுடியுமா என்பது இன்றும் தொல்லியல் ஆய்வுக்குரியதாக உள்ளது .

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களில் யவனப் பிடி கொண்ட கலன்கள் உள்ளன என்பது போற்றுதற்குரியதாகும் .

தொன்மை மொழிகளுள் ஒன்றான தமிழுக்கும், கிரேக்கத்திற்கும் அமைந்த தொடர்பினை வரலாறு, கவிதை, கவிதையியல் ஆகிய படைப்புக்களில் மேனாட்டறிஞர்களும், தமிழறிஞர்களும் , நூல்களாகவும் கருத்துக்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

சங்க காலத்தில் வணிகத் தொடர்பு இருந்துள்ளதை வரலாற்றறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இலக்கிய வகையில், சங்க இலக்கியத்தைக் கிரேக்க வீரயுகப் பாடல்களோடு முதன் முறையாக ஒப்பிட்டு உரைத்தவர் ஜி யு. போப். பின்னர் இம்முயற்சியில் சிலர் இரண்டுக்குமான கருத்தாக்கங்களை வைத்தனர்.

தொல்காப்பிய அழகியலைப் பொறுத்தவரை சில அடிப்படை ஒற்றுமைகள் இவ்விரு மொழிக் கவிதையியலிலும் காணப்படுகின்றன.

ஜான் மார் யாப்பு அடிப்படையில் பழங்காலக் கிரேக்க இலத்தீன் கவிதையியலோடு தமிழ் யாப்பியலை ஒப்பிட்டுள்ளார்.

கலாநிதி கைலாசபதி தம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் கிரேக்க – தமிழ் மரபுகளைப் புறத்திணை அடிப்படையில் ஆராய்ந்திருப்பது இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

மிச்சிகன் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் ஏ.எல் பெக்கர் என்பார் தொல்காப்பியரை பிளாட்டோவோடும், அரிஸ்டாடிலோடும் இணைத்துப் பேசியிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

“பிரித்தானிய மொழியியல் வல்லுநரான டேனியல் ஜோன்ஸ் என்பார் தொல்காப்பியரின் மொழியியல் திறத்தை வியந்து புகழ்ந்து பாராட்டுகிறார்.

ஒலியியல் பற்றிய கோட்பாடு உருவாகாத காலத்தே தொல்காப்பியர் ஒலியன்களின் தனித்தனி ஒலியமைப்பு முறையைக் குறித்துத் தம் நூலில் சிந்தனை செய்திருப்பதைப் போற்றியுரைக்கிறார்.

தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் மேனாட்டார்: அறிமுகப்படுத்திய அறிஞர்களில் கமில் சுவலபில், ஏ.கே.இராமானுசன் ,வாசெக், ஜார்ஜ் ஹார்ட் முதலியோரின் பங்கையும் நினைவு கூரவேண்டும்.

தொல்காப்பியர் கவிதையியல் கோட்பாடுகளில் சில அரிஸ்டாட்டிலின் கவிதைக் கோட்பாட்டோடு ஒத்தும் உறழ்ந்தும் செல்வன.

தமிழில் நோக்கு என்பதே அழகியலை அடியொற்றிய தெனலாம்.

கிரேக்கச் சொல்லான astikos என்பதிலிருந்து aesthetic என்னும் சொல் உருவானது.

அதன் பொருள் ஒன்றைக் கூர்ந்தறிதல், உற்று நோக்கி உணர்தல் என்பதைக் குறிக்கும்

ஆங்கிலச் சொல்லான to perceive என்பதோடு தொடர்பு உடையது.

மேலைநாட்டுக் கலை, இலக்கிய வடிவங்களில் அது தனித்ததோர் இயக்கமாக உருவானது.

இயற்கை யோடும் மனித மன உணர்வோடும் இணைத்துப் புலனின்பக் காட்சியில் திளைத்த நிலையில் அவ்வியக்கம் இலக்கிய உலகில் பேசப்பட்டது.

பொருண்மை அடிப்படையில் ஹோமர் காதலையும் ,வீரத்தையும் இலக்கியத்தில் முதன்மைப்படுத்துவது போல, தொல்காப்பியரும் அவ்விரண்டு பொருண்மைகளையும் இலக்கியத்தின் பொருண்மைகளாக விரித்துரைப்பர்.

இதனை அகம், புறம் என்ற கோட்பாட்டில் அடக்கிக்கூறுவர்.

தொல்காப்பியர் இயற்கைக்கு மாறான எதையும் தம் கருத்தாக அவர் பதிவு செய்யவில்லை .

தம் கருத்து இது என்று எந்தக் கடவுளோடும் மதத்தோடும் தொடர்புப்படுத்தாமலேயே தம் கவிதையியலை அமைத்துக்கொண்டவர் எனத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் காதல் கைவரப்பெற்ற நிலையைப் பாலதாணை என்று மட்டும் சுட்டிச்செல்கிறாரே ஒழிய, பின்வந்த உரையாசிரியர்கள் தெய்வத்தோடு அதனைச் சார்த்திக் கூறினர்.

கிரேக்கக் கவிதையியலில் சில அடிப்படைகள், கடவுள் சார்ந்து குறிக்கப்படுவதைக் காணலாம்.

கிரேக்க இலக்கியப் படைப்புகளில் கடவுள் பற்றிய சிந்தனைகள் அழுத்தம் பெற்றிருக்கின்றன.

தொல்காப்பியக் கவிதையியலுக்கும், கிரேக்கக் கவிதை இயலுக்கும் இடையே நிலவும் உறழ்வாக இதனைக் கருதலாம்.

கடவுளை முன்னிறுத்திப் படைப்புக்குக் கடவுள் துணையாக இருப்பதனை அறியலாம்.

கவிஞன் கடவுளால் படைக்கப்படுகிறான் என்ற கருத்தும் அங்கு உண்டு.

கடவுளின் பார்வையே அவன் படைப்புக்குக்
காரணமாகின்றது என்ற சிந்தனையை முன் வைப்பர்.

இது போன்ற ஒரு நிலையைத் தொல்காப்பியத்தில் காணுதற்கு இல்லை.

அரிஸ்டாட்டில் எழுதியுள்ள கவிதையியலைக் கடவுளோடு சார்த்திக் கூறும் மரபு கிரேக்கத்தில் உண்டு.

கிரேக்க அவல நாடகத்திலும், காப்பியங்களிலும் இடம்பெறும் சில சூழல்களைத் தொல்காப்பியத்தோடு இணைவுப்படுத்த இடம் இருக்கிறது எனலாம்.

காப்பியம், அவல நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களை அரிஸ்டாட்டில் கவிதை என்றே சுட்டுகிறார்.

அழகு என்பது கருத்து நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஆன்மிக உயர்நிலைப்பட்ட உள்ளுணர்வின் விழுமிய நிலையினால் உருவானது என்று அரிஸ்டாடில் காவியம் என்ற சொல்லாடலில், கவிதையைச் சுட்டிச் செல்வதை சமற்கிருதக் கவிதையியலிலும் காணலாம்.

அரிஸ்டாட்டில் அழகு என்பதற்குரிய விளக்கத்தை நாடகத்தின் கதைப்பின்னலில் எடுத்துரைப்பர்.

நாடக உருவ அமைதியைக்கொண்டே அழகு என்று அவர் குறிப்பிட்டிருப்பதை அறிஞர் சுட்டிக்காட்டுவர்.

“அழகு என்பது ஒரு பொருளின் தக்க அளவிலும் ஒழுங்கான அமைப்பிலும்தான் வெளிப்படும். அளவும் அமைப்புமே அழகின் அடிப்படை என அறிக.

பல உறுப்புகளால் ஆகிய ஒரு பொருளோ, உயிருள்ள ஒரு வடிவமோ பார்த்த உடனே அதன் அழகு புலப்படத்தக்க வகையில் வடிவ அளவும் அமைப்புமுறையும் அமைந்திருக்கவேண்டும்”

என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தினைத் தெரிவிப்பர்.

அடிக்குறிப்பில் அரிஸ்டாட்டில் காலத்தில் முருகியல் இன்பத்தைக் குறிக்கத் தனியாக ஒரு சொல் கிரேக்க மொழி ஆட்சியில் இருந்ததில்லை என்று சொல்லும் டி. டபுள்யூ. லூகாஸ் கருத்தை எடுத்துரைத்து, உருவ அமைதியால் விளையும் புலனின்பமே அழகு என்பதை அரிஸ்டாட்டில் உறுதிப்படுத்துவர் என்ற கருத்தைப் பேராசிரியர் அ.அ.மணவாளன் முன் வைத்தார்.

பிளாட்டோவும், அரிஸ்டாடிலும் வடிவமே அழகு என்று உணர்த்துவது எண்ணத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டில் வடிவவியலார் தம் புதிய திறனாய்வுக் கொள்கையை இவர்களின் சாயலிலேயே
காணத்தொடங்கினர்.

அரிஸ்டாட்டிலின் கலை பற்றிய கண்ணோட்டம் நாடக ஆக்கத்தைக் கொண்டது.

மெய்ப்பாட்டுணர்ச்சிகளுள் அச்சம், அவலம், இரக்கம் என்பதை அரிஸ்டாட்டில் விளக்குவது தொல்காப்பியரோடு இணைத்துக் காணுவதற்கு ஏதுவாக உள்ளது.

துன்பவியல் நாடகங்கள் மனத்தைத் தூய்மைப்படுத்துவதாக அரிஸ்டாட்டில் விளக்குவர்.

அவையோர் உள்ளத்தே இரக்கம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் தோன்றுகின்றன என்னுமிடத்து அரிஸ்டாடில் catharsis” என்ற கலைச்சொல்லைக் கையாளுகிறார்.

தூய்மைப்படுத்துதல் என்ற பொருளில் வரும் அச்சொல், காண்போரிடம் ஏற்படுத்தும் விளைவை உள்ளிட்டதாகும் என்று அரிஸ்டாடில் கருத்துரைத்துள்ளார்.

உலகியல் வழக்கு, புலனெறி வழக்கு ஆகிய இரண்டனுக்குமான இணைவு நிலையை நாடக உருவாக்கத்திற்கும், இலக்கிய ஆக்கத்திற்குமான கூறுகளாகக்கொண்டு அழகியலை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன.

வாய்மொழி மரபு வெகுவாகக் கிரேக்க இலக்கியத்தில் பேணப்பட்டுவந்திருப்பதனை அறியலாம்.

தொல்காப்பியமும் உலகியல் வழக்கில் உள்ளவற்றை இலக்கியத்திற்குரிய ஆக்கங்களில் ஒன்றாக இணைத்துக் காண்பதோடு வாய்மொழி வழக்கினையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதே சமயம், உலகியல் வழக்கினைச் சான்றோரின் ஒழுகலாற்றோடு முரண்படாது இருத்தல் வேண்டும் என்பதனைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறது .

அரிஸ்டாட்டில், உலக வழக்கினைப் புலனெறி வழக்கோடு இணைத்துக்காணலாம் “என்பதைக் கிரேக்கக் காப்பியப் பண்புகளில் ஒன்றாகக் காட்டுவர்.

கவிதைப்பயன் பற்றிய சிந்தனை அறம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் அமைய வேண்டும் என்பகைக் தொல்காப்பியம் கருதியிருப்பது போல. அரிஸ்டாட்டிலின் கவிதையியலும் உளப்படுத்தி இருக்கிறது.

“அச்சம், வெகுளி, போன்ற உணர்ச்சிகளைத் தக்க இடத்தே, தக்க அளவுக்கும், தக்க முறையில் அறிந்து உணர்ச்சிகளை ஆளக்கற்றுக்கொள்வதுதான் ஒருவனுடைய கல்வியின் சிறப்பு” என்று அரிஸ்டாடில் கருதினார் .

உணர்ச்சிகளைச் செப்பம் அடையச் செய்தலே அவலப் பயனாக அரிஸ்டாடில் குறிப்பிடுவர்.

கவிதை உலகப் பொதுமைப்பண்பாக இருப்பதற்கான சூழலை அரிஸ்டாடில் விளக்குவார்.

உலகின் எப்பகுதியில் வாழ்வோர்க்கும் அமையக்கூடிய பொதுநிலைப் பண்பினை உலகப் பொதுமை என்பர்.

“படைப்பில் காட்டப்பெறும் நிகழ்வுகள், காலமும் களமும் கடந்து எல்லோர்க்கும், எப்போதும் எல்லா வகையாலும் இயைவனவாக அமைதல்” ‘எனக்குறிப்பிட்டு, அகத்துறைப் பாடலில் காணப்பெறும் திணை, கூற்று ஆகிய நிகழ்வுகளோடு அரிஸ்டாட்டிலின் கருத்தைப் பொருத்திக் காண்பது நோக்குதற்குரியதாகும்.

உலகப் பொதுமையைத் தழுவியது என்பது, குறிப்பிட்ட பாத்திரம், குறிப்பிட்ட சூழ்நிலையில் இன்னவாறு தான் பேசுவான் இவ்வாறுதான் நடந்துகொள்வான் என்று கருதுமாறு படைத்துக் காட்டுவதாகும்.

இவ்வாறு படைத்துக்காட்டுதலே கவிதையின் நோக்கம் என்ற கருதிய கிரேக்கக் கவிதையிலோடு தமிழ்க்கவிதை பொருந்தி வருகிறது.

புனைவியல் கவிஞர்கள் கவிதையில் அழகியலை இந்த வகையில் வெளிப் படுத்தலானார்கள்.

கலைக்காகவே இலக்கியம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துக் கவிதை புனைந்தனர்.

அவ்வியக்கம் தோன்றிய தொடக்க காலத்தே காலரிட்ஜ், லீ ஹண்ட், கார்ல் பெர்க்சன், ஆர்தர் கான்ஜ் முதலானோரும், காண்ட், ஹெகல், குரோஸ், ஆகியோரும் தத்தமக்குரிய வகையில் கலைக்கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தனர்.

எட்கர் ஆலன் போ தம் கட்டுரை ஒன்றில், கவிதைக்காவே கவிதை எழுதப்படுகிறது என்ற வாதத்தை முன்னிறுத்தினார்.

அழகியல் குறித்து மேலை நாட்டுத் திறனாய்வாளர்களான ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், சி.எம் பௌரா, பால் வெலேரி, ஏர்னெஸ்ட் காசிஸிஸர் முதலானோர் தத்தம் கண்ணோட்டங்களைத் தெரிவித்துள்ளனர்.

தொல்காப்பியரின் அகத்திணை மரபு நார்த்ரோப்பிரை விளக்கும் இன்ப, துன்ப உணர்ச்சிச் சூழல்கள் தொல்காப்பியர் பகுத்துள்ள இயற்கை சார்ந்த உரிப்பொருளொடு ஒத்துவிளங்குவன என்பதை அறிஞர் கா.செல்லப்பன் தம் கட்டுரை ஒன்றில் ஒப்பிட்டுரைத்தார்

நார்த்ரோப் பிரை, மனிதர்களின் உணர்ச்சிகளைப் பருவ நிலைக்குத்தக்கவாறு இயற்கை அமைத்திருப்பதை எடுத்துரைப்பர்.

அதனைக் குறியீடாக்கியும் விளக்குவர்.

இளவேனில் , கோடை இலையுதிர் காலம் ஆகிய பருவங்கள் மனித வாழ்விற்குரிய குறியீடாக விளங்குவதாக அறிஞர் பிரை குறித்திருப்பதை எடுத்துக்காட்டுவது தமிழ் அகத்திணைச் செய்திகளோடு ஒப்ப விளங்குவதாகும்.

தொல்காப்பியம் உணர்த்தியிருப்பது போல, மனித மன உணர்ச்சியையும், நிலஅமைப்பினையும் இணைத்து ஹென்ரி ஏரியல் என்பர் .

இவ்வாறு பலவேறு நிலைகளில் வணிகம் போல வாழ்வியல் போல கவிதை அமைவியலும் -கிரேக்கத் தொடர்பை ஆராய்கின்றனர் .

இந்தவகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தீட்டிய எழுத்தோவியம் என்றும் நம் கண் முன் நிற்பதாகும்

ஒளவை நடராசன்

செங்க
ந்திய செம்மொழிச் சிகரம் !
பகுதி – 22

கிரேக்கமும் – தமிழியலும்

கடலுக்குள் நாலாயிரம் ஆண்டுகள் என்ற தம்முடைய நூலில் அறிஞர் பிலிப் டியோல் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறேன் : மத்திய தரைப் பகுதியில் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதை நினைவிற் கொண்டு அம்மரபுகளைப் போற்றிவரும் தமிழர்கள் திராவிடர்களாவர்-ஆரியர்களுக்கு முற்பட்டவர்கள். சிறப்புக் குன்றாத தொன்மையான இலக்கியத்தைக் கொண்டவர்கள். 1600 பாடல்கள் கொண்ட தொகுதி தமிழிலக்கியத்துக்கு அடித்தளம்.

மேற்கிலிருந்து கடல் வழியாக வந்த மனிதர்களுக்கு இத் தமிழர்கள் சூட்டிய பெயர் அயோனியர் – யோனர், யோனகர், யவனர் என்பதாகும். கி.மு. நாலாவது – ஒருவேளை கி.மு. ஆறாவது நூற்றாண்டிலிருந்து கூட அவர்கள் இச்ச்சொற்களைக் கையாண்டிருக்கலாம். தமிழ் நாகரிகம் அராபிய நாகரிகத்தைக் காட்டினும் தொன்மையானதில்லை என்றாலும், அதை ஒத்த தொன்மையுடையது. இவ்விருமக்களில் எவருடைய கொடை மிகுதி என்று ஒப்பீடு செய்தால் தமிழர் மிக உயர்ந்து நிற்பர்.

தமிழ் மக்களுள் வேந்தரான பாண்டியர் அகஸ்டஸ் அரச சபைக்கு ஒரு தூது அனுப்பினார் . கடல் வழிகளைக் கலக்கித் துருவி அறிந்தவர்களாதலால் ஒரே காலத்தில் மேலை நாட்டு நாகரிகமும் சீன நாகரிகமும் பற்றிய அறிவு படைத்தவர்களாயிருந்தனர்.

இந்தக்குறிப்பை நான் பல்லாண்டுகளுக்கு முன் படித்தேன் .அறிஞர் க சி கமலையா ஆனந்த மாநடம் என்ற நூலில் ஒரு கட்டுரையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார் .இந்நிலையில் தான் பாண்டியன் ரோமாபுரிக்குத் தூதனுப்பிய செய்தியைக் கொண்டு நம் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ரோமாபுரிப்பாண்டியன் என்னும் வரலாற்றுக்காப்பியம் என் நினைவில் நின்றது . கதையின் காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று முன் நிறுத்தினார் .

கிமு.30 லிருந்து கி.மு.20 வரை ஆகும். கி.மு.20 இல் பாண்டியப்பேரரசன் தம் அரசனை தூது ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினை வைத்துக் கொண்டு அதனைச் சுற்றி இந்தக்கதை புனைந்தார் .
பூம்புகார் நாடகத்திலும் ஒரு கிரேக்கக் கிழவனை படைத்துக்காட்டினார் . நம் தலைவர் கிரேக்க ரோமானியத் தொடர்பை அடிக்கடி கூறிப் பெருமிதம் அடைவார் .பூம்புகாருக்குக் கோவலனோடு கிரேக்கக்கிழவன் வரும் காட்சியும் அவன் இசை கற்க வந்தான் என்றும் மாதவி ஆடலில் மயங்கினான் என்பதையும் முன்னரே கண்டுள்ளோம் .

இதில் வரும் வரலாற்று மாந்தர்கள் , சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான், பாண்டியப்பேரரசன் பெருவழுதி, வேளிர்குடி அரசன் இருங்கோவேள், ரோமப்பேரரசர் அகஸ்டஸ் சீசர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகியோரும் கற்பனை மாந்தர்களாகத் தாமரை, முத்துநகை, களிக்கண்ணனார் செழியன், நெடுமாறன் ஆகியோரும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த எழுத்தோவியத்தில் அந்தக்கால நாகரிகம், ஆடை அணி கலன்கள் சமுதாயப் பொருளியல் நிலை என்று என்று பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.கரிகால் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார் எவ்வளவு சீரும் சிறப்புமாக செழித்திருந்தது என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்ட நம் கலைஞர் பூம்புகாரில் எழுப்பிய மண்டபங்கள் இலக்கியப் பெருமிதம் கொண்டவை . மதுரை மற்றும் துறைமுகம் கோநகர் கொற்கையும் விளக்கப்பட்டிருக்கிறது. கொற்கையின் முத்துக்களின் உலகளாவிய புகழ் மற்றும் முத்து அணிகலன்களாக, முத்துக்கடுக்கண், முத்துக்கண்டி, முத்துச்சல்லி ஆகியவற்றை குறிப்பிடுவதோடு முத்துக்களால் செய்யப்பட்ட மருந்துகளான, முத்துக்கற்கம், முத்துச் சுண்ணம், மணப்பந்தலில் தூவக்கூடிய முத்து மணலையும் நம் கலைஞர் உருகிக் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அங்குக் கிடைக்கும் சிப்பிகளான இடம்புரி, வலம்புரி, சலஞ்சலங்சங்கு, பாஞ்சன்யம் ஆகியவற்றையும் விளக்குகிறார். கொற்கையின் அங்காடியில் பலவித மொழிகள் பேசும் வணிகர்கள் வந்து சென்றதையும் கடைகள் அமைத்து வணிகம் புரிந்ததையும் எழுதியுள்ளார் .

பாண்டியனின் இன்னொரு பெயர் ‘பஞ்சவர்’ என்றும் பாண்டிய நாட்டிலே, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலப்பகுதிகளையும் ஆண்டவர் என்பதால் அந்தப் பெயர் அமைந்திருக்கலாம் என்ற புதிய சிந்தனைகளையும் வழங்கியுள்ளார் .

கரிகாலன் இமயத்தில் புலிச்சின்னம் பொறித்துத் தன் பெயரைச் சூட்டியதைச் சொல்லும் போது சிலைகள் வைப்பது எதிர்காலத்திற்கு வரலாற்றைச் சொல்வதற்குத்தான் என்று நாளை நடப்பதை அன்றே கண்டார் .பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம், நட்டுவாக்கலி மீசை, களிற்றின் வயிறு போல் நிலைக்கதவுகள், கொன்றைக்காய் விரல்கள், வற்றிய பீர்க்கங்காய் போன்ற உடல் போன்றவை கலைஞரின் கற்பனைத்திறனைக் காட்டும் சிறு சான்றுகளாகும் .

ரோம் நகரின் அழகு, வரலாறு, அகஸ்டஸ் கால அறிஞர்கள் ஆகியவற்றைச் சொல்லும் போது நம் கலைஞர் தாம் சென்று கண்ட அனுபவம் வெளிப்படுகிறது. கிளேடியட்டர் சதுக்கத்தில் நம் பாண்டியன் காண்டாமிருகத்தை அடக்குவது வீரப்புதுமை .

கடந்த வாரம் பேராசிரியர் இராம குருநாதன் வழங்கிய கவிதை மரபும் தொல்காப்பியமும் என்ற நூலைக் கண்டேன் .பல்லாண்டுகள் பேராசிரியராகவும் – நாடறிந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் மிளிரும் நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் பெரும் பாராட்டுக்குரியது .

தமிழ் ,ஆங்கிலம் இரு மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர் எழுதிய கட்டுரை கிரேக்கத் தொடர்புடையதாய் விளங்கியது .எனவே அக்கட்டுரையின் சில பகுதியினை இங்கே இணைத்துக் காணலாம் .

கிரேக்கத்தில் தமிழ்ச்சுவடுகள் என்று எவற்றையாவது காணமுடியுமா என்பது இன்றும் தொல்லியல் ஆய்வுக்குரியதாக உள்ளது .

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களில் யவனப் பிடி கொண்ட கலன்கள் உள்ளன என்பது போற்றுதற்குரியதாகும் .

தொன்மை மொழிகளுள் ஒன்றான தமிழுக்கும் கிரேக்கத்திற்கும் அமைந்த தொடர்பினை வரலாறு, கவிதை, கவிதையியல் ஆகிய படைப்புக்களில் மேனாட்டறிஞர்களும், தமிழறிஞர்களும் , நூல்களாகவும் கருத்துக்களாகவும் வெளியிட்டுள்ளனர். சங்க காலத்தில் வணிகத் தொடர்பு இருந்துள்ளதை வரலாற்றறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர்.இலக்கிய வகையில், சங்க இலக்கியத்தைக் கிரேக்க வீரயுகப் பாடல்களோடு முதன் முறையாக ஒப்பிட்டு உரைத்தவர் ஜி யு. போப். பின்னர் இம்முயற்சியில் சிலர் இரண்டுக்குமான கருத்தாக்கங்களை வைத்தனர். தொல்காப்பிய அழகியலைப் பொறுத்தவரை சில அடிப்படை ஒற்றுமைகள் இவ்விரு மொழிக் கவிதையியலிலும் காணப்படுகின்றன.

ஜான் மார் யாப்பு அடிப்படையில் பழங்காலக் கிரேக்க இலத்தீன் கவிதையியலோடு தமிழ் யாப்பியலை ஒப்பிட்டுள்ளார். கலாநிதி கைலாசபதி தம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் கிரேக்க – தமிழ் மரபுகளைப் புறத்திணை அடிப்படையில் ஆராய்ந்திருப்பது இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. மிச்சிகன் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் ஏ.எல் பெக்கர் என்பார் தொல்காப்பியரை பிளாட்டோவோடும், அரிஸ்டாடிலோடும் இணைத்துப் பேசியிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. “பிரித்தானிய மொழியியல் வல்லுநரான டேனியல் ஜோன்ஸ் என்பார் தொல்காப்பியரின் மொழியியல் திறத்தை வியந்து புகழ்ந்து பாராட்டுகிறார்.

ஒலியியல் பற்றிய கோட்பாடு உருவாகாத காலத்தே தொல்காப்பியர் ஒலியன்களின் தனித்தனி ஒலியமைப்பு முறையைக் குறித்துத் தம் நூலில் சிந்தனை செய்திருப்பதைப் போற்றியுரைக்கிறார்.

தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் மேனாட்டா: அறிமுகப்படுத்திய அறிஞர்களில் கமில் சுவலபில், ஏ.கே.இராமானுசன் ,வாசெக், ஜார்ஜ் ஹார்ட் முதலியோரின் பங்கையும் நினைவு கூரவேண்டும்
தொல்காப்பியர் கவிதையியல் கோட்பாடுகளில் சில அரிஸ்டாட்டிலின் கவிதைக் கோட்பாட்டோடு ஒத்தும் உறழ்ந்தும் செல்வன.

தமிழில் நோக்கு என்பதே அழகியலை அடியொற்றிய தெனலாம். கிரேக்கச் சொல்லான astikos என்பதிலிருந்து aesthetic என்னும் சொல் உருவானது. அதன் பொருள் ஒன்றைக் கூர்ந்தறிதல், உற்று நோக்கி உணர்தல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான to perceive என்பதோடு தொடர்பு உடையது. மேலைநாட்டுக் கலை, இலக்கிய வடிவங்களில் அது தனித்ததோர் இயக்கமாக உருவானது. இயற்கை யோடும் மனித மன உணர்வோடும் இணைத்துப் புலனின்பக் காட்சியில் திளைத்த நிலையில் அவ்வியக்கம் இலக்கிய உலகில் பேசப்பட்டது.

பொருண்மை அடிப்படையில் ஹோமர் காதலையும் வீரத்தையும் இலக்கியத்தில் முதன்மைப்படுத்துவது போல, தொல்காப்பியரும் அவ்விரண்டு பொருண்மைகளையும் இலக்கியத்தின் பொருண்மைகளாக விரித்துரைப்பர். இதனை அகம், புறம் என்ற கோட்பாட்டில் அடக்கிக்கூறுவர்.தொல்காப்பியர் இயற்கைக்கு மாறான எதையும் தம் கருத்தாக அவர் பதிவு செய்யவில்லை .

தம் கருத்து இது என்று எந்தக் கடவுளோடும் மதத் தோடும் தொடர்புபடுத்தாமலேயே தம் கவிதையியலை அமைத்துக்கொண்டவர் எனத் தெரிகிறது. தொல்காப்பியத்தில் காதல் கைவரப்பெற்ற நிலையைப் பாலதாணை என்று மட்டும் சுட்டிச்செல்கிறாரே ஒழிய, பின்வந்த உரையாசிரியர்கள் தெய்வத்தோடு அதனைச் சார்த்திக் கூறினர்.

கிரேக்கக் கவிதையியலில் சில அடிப்படைகள், கடவுள் சார்ந்து குறிக்கப்படுவதைக் காணலாம். கிரேக்க இலக்கியப் படைப்புகளில் கடவுள் பற்றிய சிந்தனைகள் அழுத்தம் பெற்றிருக்கின்றன. தொல்காப்பியக் கவிதையியலுக்கும், கிரேக்கக் கவிதை இயலுக்கும் இடையே நிலவும் உறழ்வாக இதனைக் கருதலாம். கடவுளை முன்னிறுத்திப் படைப்புக்குக் கடவுள் துணையாக இருப்பதனை அறியலாம். கவிஞன் கடவுளால் படைக்கப்படுகிறான் என்ற கருத்தும் அங்கு உண்டு. கடவுளின் பார்வையே அவன் படைப்புக்குக்
காரணமாகின்றது என்ற சிந்தனையை முன் வைப்பர். இது போன்ற ஒரு நிலையைத் தொல்காப்பியத்தில் காணுதற்கு இல்லை. அரிஸ்டாட்டில் எழுதியுள்ள கவிதையியலைக் கடவுளோடு சார்த்திக் கூறும் மரபு கிரேக்கத்தில் உண்டு.

கிரேக்க அவல நாடகத்திலும், காப்பியங்களிலும் இடம்பெறும் சில சூழல்களைத் தொல்காப்பியத்தோடு இணைவு படுத்த இடம் இருக்கிறது எனலாம். காப்பியம், அவலநாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களை அரிஸ்டாட்டில் கவிதை என்றே சுட்டுகிறார். அழகு என்பது கருத்து நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஆன்மிக உயர்நிலைப்பட்ட உள்ளுணர்வின் விழுமிய நிலையினால் உருவானது என்று அரிஸ்டாடில் காவியம் என்ற சொல்லாடலில், கவிதையைச் சுட்டிச் செல்வதை சமற்கிருதக் கவிதையியலிலும் காணலாம்.

அரிஸ்டாட்டில் அழகு என்பதற்குரிய விளக்கத்தை நாடகத்தின் கதைப்பின்னலில் எடுத்துரைப்பர். நாடக உருவ அமைதியைக்கொண்டே அழகு என்று அவர் குறிப்பிட்டிருப்பதை அறிஞர் சுட்டிக்காட்டுவர். “அழகு என்பது ஒரு பொருளின் தக்க அளவிலும் ஒழுங்கான அமைப்பிலும்தான் வெளிப்படும். அளவும் அமைப்புமே அழகின் அடிப்படை என அறிக. பல உறுப்புகளால் ஆகிய ஒரு பொருளோ, உயிருள்ள ஒரு வடிவமோ பார்த்த உடனே அதன் அழகு புலப்படத்தக்க வகையில் வடிவ அளவும் அமைப்புமுறையும் அமைந்திருக்கவேண்டும்” என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தினைத் தெரிவிப்பர்.

அடிக்குறிப்பில் அரிஸ்டாட்டில் காலத்தில் முருகியல் இன்பத்தைக் குறிக்கத் தனியாக ஒரு சொல் கிரேக்க மொழி ஆட்சியில் இருந்ததில்லை என்று சொல்லும் டி. டபுள்யூ. லூகாஸ் கருத்தை எடுத்துரைத்து, உருவ அமைதியால் விளையும் புலனின்பமே அழகு என்பதை அரிஸ்டாட்டில் உறுதிப்படுத்துவர் என்ற கருத்தைப் பேராசிரியர் மணவாளன் முன்வைத்தார்.

பிளாட்டோவும், அரிஸ்டாடிலும் வடிவமே அழகு என்று உணர்த்துவது எண்ணத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் வடிவவியலார் தம் புதிய திறனாய்வுக் கொள்கையை இவர்களின் சாயலிலேயே
காணத்தொடங்கினர். அரிஸ்டாட்டிலின் கலை பற்றிய கண்ணோட்டம் நாடக ஆக்கத்தைக் கொண்டது.

மெய்ப்பாட்டுணர்ச்சிகளுள் அச்சம், அவலம், இரக்கம் என்பதை அரிஸ்டாட்டில் விளக்குவது தொல்காப்பியரோடு இணைத்துக் காணுவதற்கு ஏதுவாக உள்ளது. துன்பவியல் நாடகங்கள் மனத்தைத் தூய்மைப்படுத்துவதாக அரிஸ்டாட்டில் விளக்குவர்.

அவையோர் உள்ளத்தே இரக்கம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் தோன்றுகின்றன என்னுமிடத்து அரிஸ்டாடில் catharsis” என்ற கலைச்சொல்லைக் கையாளுகிறார். தூய்மைப்படுத்துதல் என்ற பொருளில் வரும் அச்சொல், காண்போரிடம் ஏற்படுத்தும் விளைவை உள்ளிட்டதாகும் என்று அரிஸ்டாடில் கருத்துரைத்துள்ளார். உலகியல் வழக்கு, புலனெறி வழக்கு ஆகிய இரண்டனுக்குமான இணைவு நிலையை நாடக உருவாக்கத்திற்கும், இலக்கிய ஆக்கத்திற்குமான கூறுகளாகக்கொண்டு அழகியலை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன.

வாய்மொழி மரபு வெகுவாகக் கிரேக்க இலக்கியத்தில் பேணப்பட்டுவந்திருப்பதனை அறியலாம்.
தொல்காப்பியமும் உலகியல் வழக்கில் உள்ளவற்றை இலக்கியத்திற்குரிய ஆக்கங்களில் ஒன்றாக இணைத்துக் காண்பதோடு வாய்மொழி வழக்கினையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம், உலகியல் வழக்கினைச் சான்றோரின் ஒழுகலாற்றோடு முரண்படாது இருத்தல் வேண்டும் என்பதனைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறது .

அரிஸ்டாட்டில், உலக வழக்கினைப் புலனெறி வழக்கோடு இணைத்துக்காணலாம் “என்பதைக் கிரேக்கக் காப்பியப் பண்புகளில் ஒன்றாகக் காட்டுவர்.

கவிதைப்பயன் பற்றிய சிந்தனை அறம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் அமைய வேண்டும் என்பகைக் தொல்காப்பியம் கருதியிருப்பது போல. அரிஸ்டாட்டிலின் கவிதையியலும் உளப்படுத்தி இருக்கிறது.

“அச்சம், வெகுளி, போன்ற உணர்ச்சிகளைத் தக்க இடத்தே, தக்க அளவுக்கும், தக்க முறையில் அறிந்து உணர்ச்சிகளை ஆளக்கற்றுக்கொள்வதுதான் ஒருவனுடைய கல்வியின் சிறப்பு” என்று அரிஸ்டாடில் கருதினார் .

உணர்ச்சிகளைச் செப்பம் அடையச் செய்தலே அவலப் பயனாக அரிஸ்டாடில் குறிப்பிடுவர். கவிதை உலகப் பொதுமைப்பண்பாக இருப்பதற்கான சூழலை அரிஸ்டாடில் விளக்குவார். உலகின் எப்பகுதியில் வாழ்வோர்க்கும் அமையக்கூடிய பொதுநிலைப் பண்பினை உலகப் பொதுமை என்பர். “படைப்பில் காட்டப்பெறும் நிகழ்வுகள், காலமும் களமும் கடந்து எல்லோர்க்கும், எப்போதும் எல்லா வகையாலும் இயைவனவாக அமைதல்” ‘எனக்குறிப்பிட்டு, அகத்துறைப் பாடலில் காணப்பெறும் திணை, கூற்று ஆகிய நிகழ்வுகளோடு அரிஸ்டாட்டிலின் கருத்தைப் பொருத்திக் காண்பது நோக்குதற்குரியதாகும்.

உலகப் பொதுமையைத் தழுவியது என்பது, குறிப்பிட்ட பாத்திரம், குறிப்பிட்ட சூழ்நிலையில் இன்னவாறு தான் பேசுவான் இவ்வாறுதான் நடந்துகொள்வான் என்று கருதுமாறு படைத்துக் காட்டுவதாகும். இவ்வாறு படைத்துக்காட்டுதலே கவிதையின் நோக்கம் என்ற கருதிய கிரேக்கக் கவிதையிலோடு தமிழ்க்கவிதை பொருந்தி வருகிறது.

புனைவியல் கவிஞர்கள் கவிதையில் அழகியலை இந்த வகையில் வெளிப் படுத்தலானார்கள். கலைக்காகவே இலக்கியம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துக் கவிதை புனைந்தனர். அவ்வியக்கம் தோன்றிய தொடக்க காலத்தே காலரிட்ஜ், லீ ஹண்ட், கார்ல் பெர்க்சன், ஆர்தர் கான்ஜ் முதலானோரும், காண்ட், ஹெகல், குரோஸ், ஆகியோரும் தத்தமக்குரிய வகையில் கலைக்கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தனர். எட்கர் ஆலன் போ தம் கட்டுரை ஒன்றில், கவிதைக்காவே கவிதை எழுதப்படுகிறது என்ற வாதத்தை முன்னிறுத்தினார். அழகியல் குறித்து மேலை நாட்டுத் திறனாய்வாளர்களான ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், சி.எம் பௌரா, பால் வெலேரி, ஏர்னெஸ்ட் காசிஸிஸர் முதலானோர் தத்தம் கண்ணோட்டங்களைத் தெரிவித்துள்ளனர்.

தொல்காப்பியரின் அகத்திணை மரபு நார்த்ரோப்பிரை விளக்கும் இன்ப, துன்ப உணர்ச்சிச் சூழல்கள் தொல்காப்பியர் பகுத்துள்ள இயற்கை சார்ந்த உரிப்பொருளொடு ஒத்துவிளங்குவன என்பதை அறிஞர் கா.செல்லப்பன் தம் கட்டுரை ஒன்றில் ஒப்பிட்டுரைத்தார் நார்த்ரோப் பிரை, மனிதர்களின் உணர்ச்சிகளைப் பருவ நிலைக்குத்தக்கவாறு இயற்கை அமைத்திருப்பதை எடுத்துரைப்பர்.

அதனைக் குறியீடாக்கியும் விளக்குவர். இளவேனில் , கோடை இலையுதிர் காலம் ஆகிய பருவங்கள் மனித வாழ்விற்குரிய குறியீடாக விளங்குவதாக அறிஞர் பிரை குறித்திருப்பதை எடுத்துக்காட்டுவது தமிழ் அகத்திணைச் செய்திகளோடு ஒப்ப விளங்குவதாகும்.

தொல்காப்பியம் உணர்த்தியிருப்பது போல, மனித மன உணர்ச்சியையும், நிலஅமைப்பினையும் இணைத்து ஹென்ரி ஏரியல் என்பர் .

இவ்வாறு பலவேறு நிலைகளில் வணிகம் போல வாழ்வியல் போல கவிதை அமைவியலும் -கிரேக்கத் தொடர்பை ஆராய்கின்றனர் .இந்தவகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தீட்டிய எழுத்தோவியம் என்றும் நம் கண் முன் நிற்பதாகும் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *