தலைமைச் செயலகத்தில் கலைமகள் வழிபாடு
வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம்.
இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் ,
அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் ,
இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது.
இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது.
திருநாளை முன்னிட்டு 13.10.2021,புதன்கிழமை மாலை உயர்திரு அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில்,செய்தித் துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் துணைச்செயலர் முன்னிலையில் துணை இயக்குநர்கள் (மொழிபெயர்ப்பு),சார்புச்செயலர்கள், பிரிவு மற்றும் உதவிப்பிரிவு அலுவலர்கள், உதவியாளர்கள் புடை சூழ சிறப்பு வழிப்பாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது .
அண்ணாநகர் இல்லத்தில் 14 10 2021 ஆம் நாள் காலை 11 மணியளவில்,மருத்துவமாமணி தாரா அம்மா நினைவாக அப்பா தன்னுடன் பணியாற்றும் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

Add a Comment