POST: 2021-10-16T11:44:00+05:30

முதுமை எனும் பூங்காற்று

அக்டோபர் மாத இதழ் –
பக்கம் எண் : 32

முதுமை நல மருத்துவ முடிமணிக்கு வாழ்த்து மாலை !

அக்டோபர் 6 – நம் மருத்துவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

முதியோர் நலத்துறையைத் தோற்றுவித்த முடிமணியாகத் திகழ்பவர் மருத்துவ மாமணி தாமரைத்திரு டாக்டர் வி.எஸ் நடராசன் அவர்கள்.

முதியோர் நலத்தில் முழுமூச்சுடன் ஆர்வம் காட்டி அடுக்கடுக்கான நலங்களை மருந்தகமாக, காப்பகமாக, துணை மாடமாக, நலவாழ்வு நிலையங்களாக பல்வேறு நிலைகளில் அமைத்துள்ளார்.

தமிழக அரசும், ஒன்றிய அரசும் மருத்துவமாமணி வகுத்த திட்டங்களுக்கு நல் வரவேற்பை வழங்க வேண்டும்.

முதுமை என்பது சோர்வின் புகலிடமாக இருந்த நிலையை மாற்றி ” முதுமை எனும் பூங்காற்று ” என்றழைத்த பெருமை டாக்டரையே சாரும்.

” இளமையில் கல் ”
என்ற தொடரோடு
” முதுமையில் வெல் ”
என்ற புதுமையைச் செய்த புகழாளருக்கு என்றும் மக்களின் வாழ்த்து மாலைகளுண்டு.

டாக்டருடைய தகுதிக்கு இன்னும் எத்தனையோ பாராட்டுகளை நாடு வழங்க வேண்டும்.

அவர் சொல்லும் குறிப்புகள் எல்லாம் ‘ மகன் தந்தைக்குச் சொல்வது போல

‘ தன்னுடைய தோழர் உயிர்த் தோழருக்குச் சொல்வது போல

உடனிருப்பவர்கள் நண்பர்கட்குச் சொல்வது போல

எளிமையான தமிழில் இனிமையான
நடையில் அருமையாக வரைந்து காட்டுவது டாக்டருக்கே எழுத வந்த கலை !

ஔவை நடராசன்
வேந்தர்,
பாரத் பல்கலைக்கழகம் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *