அருங்கலைச்செம்மல் ,
கவிஞர் ,உரையாளர், கருத்தாளர், இதழாசிரியர்,அருளுரை வழங்கும் அறிஞர்,இளைஞர்க்கு ஏணி ,
கற்பூரச் சொற்கோ
மரபின் மைந்தன் முத்தையா என்னைக் குறித்து எழுதியதை நினைத்து நெகிழ்கிறேன் .
சிகரத்தை எட்டிய சிந்தனைச் சிற்பி .
இலக்கிய ஐயங்களுக்கு எப்போதும் அண்ணலைத்தான் அணுகுவேன் .
நமது நம்பிக்கை மாத இதழ் – அக்டோபர் – 2021
பக்கம் எண் : 18.
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
மரபின் மைந்தன் முத்தையா
எல்லாத் திசைகளிலும் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தாலும் போக்குவரத்து விதிகளுக்கு பங்கமில்லாத பொறுப்புணர்வுடன் வாகன ஓட்டிகள் கொல்கத்தா வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர்.
அந்த கார்களில் ஒன்றில் இருந்தபடியே நண்பர்
அருள் நடராசனை அலைபேசியில் அழைத்தேன்.!
” மாதவி பாடிய கானல் பாணி
கனக விசயர் முடித்தலை நெரித்தது ”
என்று இளங்கோவடிகள் சொன்னதைப்போல
” அருள் செய்த திருவிளையாடல் என்னை கொல்கத்தாவில் கொண்டு சேர்த்தது ”
என்றேன்.
அவருக்கு சிலப்பதிகாரம் நன்றாகப் புரியும்.
அடுத்து நான் சொன்னது புரியவில்லை.
குழப்பமாக, ”
என்ன அண்ணே ! ” என்றார்.
இஸ்கான் எனப்படும் ஸ்ரீ கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் தமிழில் ஒரு புத்தகம் எழுத ஆன்மீக ஈடுபாடு உடைய ஓர் எழுத்தாளரை தேடியபோது அருள் என் பெயரை குறிப்பிட்டிருக்கிறார். –
அவர்கள் என்னுடன் பேசி, ஒருவருக்கு ஒருவர் நீண்ட நேரம் பேசி நிபந்தனைகள் பேசி இரு தேசங்களுக்கு இடையிலானதைப் போல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதன் தொடர்பாகவும் தொடர்ச்சியாகவும் அவர்களுடனான என் வடநாட்டு யாத்திரை ஜூலை 24,2021 காலை கொல்கத்தாவில் தொடங்கியது.
அந்தத் தேநீர் தந்த உற்சாகத்தில் தான் அருள் நடராஜனை அழைத்திருந்தேன் .

Add a Comment