POST: 2021-11-05T11:00:06+05:30

ஒளவை நடராசன் உரைப்பதிவு.
36 ஆண்டுகளுக்கு முன் பேசிய
1985 உரை:-

நண்பர் வியட்நாம் சுந்தரம், திரையுலகப் படைப்புகளின் மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து, அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையெல்லாம் திரைப்படத்தில் காட்டி நம்மை உருக வைத்ததை நாம் எப்போதுமே மறக்க முடியாது.

அதுமட்டுமில்லாமல், என்னுடைய நீண்டநாள் நண்பர் ஈரோடு ஆற்றலரசு அவர்களும் வேறு ஒரு நண்பரும் என்னிடம் யாகவா முனிவரைப் பற்றிச் சொன்ன போது மிகுந்த வியப்பாக இருந்தது.

“எனக்கு நேரம் இருக்கும்போது வந்து பார்க்கிறேன்” என்று தான் சொன்னேன்.

அவ்வடிப்படையிலேயே தான், சங்க இலக்கியங்களுக்குச் சிறப்பான உரைகளை எழுதியவரும், மாபெரும் இலக்கியங்களை மலிவுப் பதிப்பாக வெளியிட்டு சிறப்பான இலக்கியப் பணி செய்தவருமான அறிஞர் புலியூர் கேசிகனும் வலியுறுத்தியதனால், இன்று இங்கு வந்துள்ளேன்.

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிற போது, “நான் அவ்வளவு எளிதில் எதையும் உடனே நம்புவதில்லை” என்றார்.

பொதுவாகத் தமிழில் ‘யா’ என்ற எழுத்தில் எப்பெயரும் தொடங்காது.

‘யவனர்கள்’ என்று ஒரு சொல் வந்தது.

அது கூடத் தமிழ்ச் சொல் இல்லை.

‘அயோன்யர்கள்’ என்று சொல்லுகிற ‘கிரிக்’ நாட்டினரை தமிழில் ‘யவனர்கள்’ என்று எழுதி விட்டார்கள்.

ஆனால், ‘யாகவா’ என்ற பெயர் எப்படி வந்தது? எனக்கு தெரிந்து, வேதங்களில் கூட அப்படி ஒரு முனிவர் பெயரைக் கூட நாம் கேள்விப்பட்டதில்லை.

அந்தப் புத்தகத்தைப் படிக்கிற போது விஞ்ஞானம், இன்னாசம், திவ்யத்துவம் போன்ற சொற்கள் எல்லாம் வருகிறது.

அதற்கு நாம் எப்படிப் பொருள் கொள்வது? அப்புறம் சாமி சொல்கிறார்கள். ‘சாமி’ என்று சொல்வது நம்முடைய ஒரு வழிபாட்டுக்காகச் சொல்வது.

111 கண்டங்கள் மேலே இருக்குது என்று சொல்கிறார்கள்.

அதற்கப்புறம் அரக்கர்களும், அசுரர்களும் நடக்கும் யுத்தம் இன்னும் ஓயவில்லை என்று எழுதியுள்ளார்கள்.

நாம் என்ன நினைத்தோம் என்றால், அரக்கர்கள் என்பது கூட நாம் தான்.

நமக்குக் கோபம் வந்தால் நாம்தான் அரக்கன் ஆகிவிடுகிறோம்.

வீட்டில் இப்போது கூடச் சொல்வார்கள், ‘என்ன மாதிரிப் பிடிவாதமாக இருக்கிறாயே’ என்று சொல்வார்கள்.

எனவே ராட்சசன் நாம்தான்; தேவர்களும் நாம்தான்.

இதை விட்டுவிட்டு வேறு சிலர் இருக்கிறார்களா? என்று தெரியவில்லையே.

இதையெல்லாம் நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் உங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.”

தனிப்பதிவாக மாற்றிய அமெரிக்க வாழ் செம்மல் திருமதி தேமொழி வாழ்க

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *