POST: 2021-11-06T09:20:15+05:30

அன்னை வசந்தா சீனிவாசன்
80 ஆம் பிறந்த நாள் வாழ்த்து காணொளிப்பதிவு (2.7.2021)

ஆற்றல் வாய்ந்த அன்புச் செல்வம் சதீஷின் அன்னையாரும்

, ‘பாரதி வாழ்வே தன் வாழ்வாக’க் கொண்டு, சுடர்மிகும் அறிவுடன் திகழ்ந்த சுராஜ் அவர்களின் தங்கை என்ற வகையில், இயல்பான பெருமைகளோடும், திறமைகளோடும் திகழும் அம்மையார் வசந்தா சீனிவாசன் அவர்களின் புகழுக்கு மணிமுடியாக அமைகின்றது.

வசந்தா சீனிவாசன், தன் வாழ்வு முழுவதும் எளிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிறந்த கல்விக் கூடத்தை நிறுவி நடத்தியதைக் கண்டு, நான் பலமுறை நெகிழ்ந்து பாராட்டியுள்ளேன்.

தன் பிள்ளைகளைப் போலவே ஊரார் பிள்ளைகளையும் அரவணைத்து கல்வி புகட்டிய தாய் மனத்தை நான் வாழ்த்தாத நாளில்லை.

சதீசை வளர்த்தது மட்டுமில்லாமல் சதீசுக்கு உயர்ந்த பண்பும் சிறந்த பாங்கும் பெருகி இருப்பதற்கு வசந்தா அன்னையாருடைய அரவணைப்பு பேரூக்கமாக அமைந்ததை சதீஷும் என்னிடம் பலமுறை சொல்லி நெகிழ்ந்துள்ளார்.

வசந்தா சீனிவாசனுக்கு எண்பதாண்டுகள் நிறைகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி காதில் தேனாகப் பாய்கிறது.

அம்மையாருக்குப் ‘பல்லாண்டு பல்லாண்டு’ கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

என்னுடைய துணைவியார் தாரா இன்று இருந்திருந்தால், எண்பதாம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு என்னையும் அழைத்துக் கொண்டு பங்கு கொண்டிருப்பார்.

வசந்தா சீனிவாசன் அவர்களின் கையால் உணவு உண்ட நன்றி என் உள்ளத்தில் பெருகுகிறது.

பண்பார்ந்த தாய், பரிவு காட்டும் தாய், பண்பாடு கொண்ட அன்னை என்றெல்லாம் பாராட்டி மகிழ்வதற்கு சொற்களே இல்லை!

அன்னை வசந்தா சீனிவாசன் ‘பல்லாண்டு வாழ்க! பல்வளம் பெருகுக!’ என்று பாராட்டத்தக்க வகையில் அவரது பெருமித வாழ்வைக் கண்டு, எளியவர்களும், பெரியவர்களும் தாமும் வசந்தா அம்மையாரைப் போல வாழ வேண்டும் என்ற மனத்திண்மை பெற வேண்டும் என்பதுதான் என் மனங்கனிந்த வாழ்த்தாகும்….

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *