நாவற்பழம் உதிர்ந்தது !(2.5.1927-18.11.2021)
கனிந்து முதிர்ந்த
நாவற்கனி உதிர்ந்தது ,
நான் அவரோடு நாற்பது ஆண்டுகள்
பழகியிருக்கிறேன் .
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில்
இசைக்கலைப் பயின்றவர்
இசைப்புலமை உடையவர் .
என் மகன் அருள் தன்
கல்லூரிக் காலங்களில்
எழுத்து வேந்தர் எழுதிய
ஆயிரம் பக்க புதினம்
யாகசாலை மறக்கவியலாது என்பான்.
என் குடும்ப நண்பர்
சாந்தகுமார் வாயிலாக
1990 இல்
அவரின் இல்லத்தில்
சந்தித்ததை
பசுமையாக உள்ளது என்றும் சொல்வவான்
..தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாமன்னன் இராசராசன் விருதுப் பெற்றவர் அண்ணல் கோவி மணிசேகரன் ஆவார்
ஒளவை நடராசன்

Add a Comment