POST: 2021-11-22T09:11:45+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 28

ஒளவை நடராசன்

அறிவுப்பேரொளி அம்பேத்கர் !

அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் சட்டக்கல்லூரி நிறுவ வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை என்னிடம் தெரிவித்தனர்.

படிப்படியாக எப்படி வெற்றிகரமாக இக்கல்லூரி நிறைவேறியிருக்கிறது என்கிற சிறப்பை நம்முடைய கல்வியமைச்சர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும், நண்பர்களும் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கல்லூரிக் கட்டடத்தினுடைய திறப்பு விழா அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் நடைபெறுகிறது.

அதன் தனிப்பெருமையை அனைவரும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

இந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நாளும் இந்திய நாட்டுச் சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாள்

மத்திய அமைச்சர் அன்புக்குரிய ஜகஜீவன்ராம் அவர்களும், நானும் விழாவில் கலந்து கொண்டோம்.

இதே இடத்தில் அந்தக் கல்நாட்டு விழாவினைச் செய்த நாள் எந்த நாள் என்றால் இந்திய நாட்டினுடைய சுதந்திரம் பெற்ற வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடுகின்ற ஆகஸ்டு 15ஆம் நாள் தான்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அம்பேத்கரோடு எந்த அளவுக்கு இணைந்து இந்திய நாட்டுக்குத் தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது .

என்பதனையும் ஒருகணம் எண்ணிப் பார்க்கிறேன்.

இந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப் பெற்ற நாளும் கட்டடம் ஓரளவுக்கு முடிவுற்று, அதைத் திறக்கப்படுகின்ற நாளும் இந்திய நாட்டு மக்களால் பொன்னெனப் போற்றப்படுகிற நாளாக அமைந்திருப்பதை எண்ணியெண்ணி மகிழலாம்.

இந்தியாவின் அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை டாக்டர் அம்பேத்கர்; ஆனால் அந்த அரசியல் சட்டத்தால் இந்தியா எதிர்பார்த்த நல்ல விளைவுகளைப் பெறவில்லை. எந்த அடித்தளத்து மக்கள் தளை உடைத்துத் தலைநிமிர்ந்து எழுந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் சட்டத்தை அம்பேத்கர் முன் நின்று எழுதினாரோ, எந்த மதமாச்சாரியங்கள் மக்களின் துயரங்கள் அகன்று விடுமாறு கருதினாரோ எந்தச் சாதிப் பேய் தொலைய வேன்டுமென்று முழு மூச்சாக முனைந்தாரோ எந்த உரிமைகள் செழித்த மாநிலம் காப்பாற்றப்பட்டாக வேண்டுமென்று அவர் தந்தாரோ, அந்த விருப்பம், அந்தக் கருத்து. அந்த விளைவு,அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேறாத தினால் இறுதி நாளிலே “நான் எழுதியதாக இருந்தாலும் அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும்” என்று அம்பேத்கர் சொன்னார்.

அந்த அளவுக்கு இந்த நாட்டினுடைய மக்கள் துயரப்படுவதற்கு எவ்வளவு இடர் என்றும் அவர் உணர்ந்தார்.

இந்தியா எந்த அடிப்படையிலே சுதந்திரம் பெற்றதோ அந்தச் சுதந்திரத்தினுடைய பயனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் அடித்தளத்து மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் – இவர்களால் எழுந்து நிமிர்ந்து மானத்தோடு, மரியாதையோடு, மதிப்போடு உலவிட முடியவில்லையே என்ற மனப்புழுக்கம் அம்பேத்கருடைய உள்ளத்திலே இருந்த காரணத்தினால்தான் அவ்வளவு வேகமான தொடரை அம்பேத்கார் வெளியிட்டார்.

அரசியல் சட்டத்தைப் பற்றி அப்படிப்பட்ட புரட்சி எண்ணங் கொண்ட அம்பேத்கார்-தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட அம்பேத்கார் – இந்திய நாட்டுத் தேசியத் தலைவர்களிலே ஒருவர் என எண்ணத்தக்க அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்ட அம்பேத்கர், அவருடைய பெயரால், அவருடைய நினைவாக எங்கே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, எந்தப் பகுதி மக்களுக்காக அதிகமாக உழைத்தாரோ, அந்த வடபகுதி மக்களால், – தென் பகுதி மக்களால் பாராட்டப்படுகிற அளவுக்குப் பாராட்டப்படவில்லை .

அவருக்கு நினைவாலயத்தை எழுப்பவில்லை என்ற செய்தியை சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் உருக்கமாக எடுத்துச் சொன்னதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்.

அமைச்சர் இராமன் இங்கே பேசும்போது எந்த மாநிலத்திலும் அரசு அம்பேத்கருடைய பெயராலே கல்லூரி அமைத்ததில்லை என்று கூறினார்.

நான் கூறுவேன், இந்த மாநிலங்களிலே சுதந்திரம் பெற்ற இந்த 25,26 ஆண்டுகளில் அம்மையார் குறிப்பிட்டதைப்போல், காந்தியடிகள் எந்தக் கொள்கையைச் சொன்னாரோ, எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கிறேன் என்று அவர் தன்னுடைய இலட்சியப் பயணத்தைத் தொடங்கினாரோ அந்த இலட்சியப் பயணத்தை நிறைவேற்றுகிற அளவுக்குக் கூடுமான வரையில் முழுவதும் என்று சொல்ல நான் தயாராக இல்லை –

இன்றைக்கு மற்ற எல்லா மாநிலங்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பணி செய்கின்ற, சாதனை புரிகின்ற அரசு ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநில அரசும் இல்லை தாழ்த்தப்பட்டோருக்காகக் கழக அரசின் சாதனை .

உங்களுக்குச் சில விவரங்களைத் தர விரும்புகிறேன் .

1965 – 66 ஆம் ஆண்டில் அரிசன நலத்துறைக்காகப் பிற நலத் துறையையும் சேர்த்துக் காங்கிரசு அரசு செலவிட்டது 5 கோடியே 38 இலட்சம் ரூபாய்தான்.

ஆனால், இன்றை நலக் துறைக்காக மாத்திரம் திராவிட முன்னேற்றக்கழகம் – 1974 – 75ஆம் ஆண்டு செலவழிக்க ஒதுக்கியிருக்கிற தொகை 16 கோடியே 16 இலட்சம் ரூபாய் என்பதை நான் தெரிய கொள்ளுவேன்.

இது மாத்திரமன்று, நண்பர்களே, 1966 – 67இல் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை 10.411 73 இல் தாழ்த்தப்பட்ட மாணவாகளுடைய எண்ணிக்கை 14,786. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக இந்த அரசு, சத்தியவானைணி முத்து அம்மையார் அவர்களைத் தலைவராகக் கொண்டிருக்கிற துறையின் சார்பாகச் செய்திருக்கின்ற பெரும் சாதனையாகும்.

1966 – 67 இல் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 1967ஆம் ஆண்டு இருந்த மொத்த விடுதிகள் 388.

இந்த ஐந்தாறு ஆண்டுக் காலத்தில் கழக அரசின் சார்பில், அம்மையார் அவர்களுடைய தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், இன்றைக்கு இருக்கிற விடுதிகளின் எண்ணிக்கை 529

. உதவித்தொகை பெறுகின்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை 1966-67இல் 2 இலட்சத்து 70 ஆயிரம்.

1972 – 73ல் 4 இலட்சத்து 82 ஆயிரம்.

கேரளத்தில் அரிசன மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைக்கு மாநில அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா ?

நான் தருகிற கணக்கல்ல நாவலர் தருகிற கணக்கல்ல, அம்மையார் தருகிற கணக்கல்ல, இந்தக் கணக்கைத் தருபவர்கள் யார் தெரியுமா ?

கமிஷனர் ஆஃப் ஷெட்யூல் கேஸ்டஸ் அண்ட் ட்ரைப்ஸ் என்கின்ற மத்திய சர்க்கார்!

உயர் அதிகாரி வெளியிட்டிருக்கின்ற ஒரு புத்தகம் கூறுகிறது.

இதுவரையில் 20 அறிக்கைகளை அவர்கள் வெளியிட் டிருக்கிறார்கள்.

இது 71 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை.

அடுத்த அறிக்கை விரைவிலே வரத் தயாராக இருக்கிறது

. நமக்கு கிடைத்திருக்கிற அறிக்கையிலிருந்து எடுத்த தகவலின்படி கேரளத்தில் 1969-70ஆம் ஆண்டு அரிசன மக்களும் வழங்கப்பட்ட வீட்டு மனைக்கு மாநில அரசுக்கு ஏற்பட 74 ஆயிரம், 1970-71இல் 55 ஆயிரம்.

மைசூரில் ரூ.3 இலட்சம்
1969-70இல் ; 1970-71இல் 2 இலட்சத்து 32 ஆயிரம். வில் 1969-70இல் 30 ஆயிரம்; 1970-71இல் 25 ஆயிரம். டிச்சேரியில் 1969-70இல் 46 ஆயிரம். 1970-71இல் 2 சத்து 29ஆயிரம். – நன்றாக நன்றி காட்டினார்கள்

நண்பர்களே, நாட்டில் 1969-70இல் 17 இலட்சத்து 72 ஆயிரம்; 1970இல் 31 இலட்சத்து 8 ஆயிரம் ! ஆன்றே அவர் புகழ் பரப்பினோம் .

ஆனால், டாக்டர் அம்பேத்காருடைய பெயரை மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிற சிலர் இருக்கிறார்கள் அதைத்தான் அம்மையார் அழகாக இங்கே குறிப்பிட்டார்.

காலமெல்லாம் போன பிறகு இன்று அம்பேத்கர் பெயரைச் சிலர் பிடித்துக் கொண்டிருக்கக் காரணம்: அம்பேத்கர் பெயரால் அரிசன மக்களை ஏமாற்றலாம் என்பதற்காகத்தானே தவிர வேறல்ல.

தி.மு.கழகம் அம்பேத்கருடைய அறிவாற்றலை இன்று. நேற்றல்ல, நீண்ட நெடுநாள்களுக்கு முன்னால் பெரியார் அவர்களால், அண்ணா அவர்களால், கழகத்திலே இருக்கிற தலைவர்கள் அத்தனை பேராலும் இந்த நாட்டிலே இருக்கிற சந்து பொந்துகளில், பட்டி தொட்டிகளில், பட்டணக் கரைகளில் படிந்த புல்வெளிகளில் நடைபெற்ற கூட்டங்களில் மாநாடுகளில் அம்பேத்கருடைய புகழைப் பாடியிருக்கிறார்கள்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த அந்தக் காலத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

ஆனால், அவர் பெயர் நிழலில் நின்று விளம்பரம் தேட அல்ல .

அவர் பெயருக்கு உள்ள சக்தியை அறிவாற்றலை – புரட்சி எண்ணத்தை நாங்கள் எங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு வந்த காரணத்தால்தான் அவருடைய அறிவாற்றலைத் தமிழகத்தில் எடுத்துச் சொன்னோம்.

சுயாட்சியானாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானாலும், மதமாச்சரியம் சம தரும சமுதாயம் ஏற்பட வேண்டுமென்றாலும், அரசிடம் ஆதாரமிருக்குமா என்று தேடினால் கேட்டாலும் தருகின்ற கற்பகத் தரு போல் அவருடைய கருத்துக்கள் தான் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தன.

ஆகவே தான் இந்தச் சிறப்பை இங்கே செய்திருக்கிறோம்.

இதற்கு அம்மையார் அவர்கள் தலைமையேற்று. .. இந்தப் பகுதியில் நற்பணியாற்றி, என்னிடமும் நாவலரிடமும் இரண்டரை இலட்சம் ரூபாய்தான் இருக்கிறது என்று சொன்ன நேரத்தில் எப்படியும் ஐந்து இலட்சத்தைத் தந்துவிடுவேன் என்று சொன்னபோது, இதைக் கேட்டு இன்றைக்கு 16 இலட்சம் ரூபாய் சர்க்கார் செலவில் இந்தப் பெரிய கல்லூரியை அமை குழுவில் இடம் பெற்றுத் தலைமை வகித்த அன்றைய சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் குழுவில் பிரதான இடத்தைப் பெற்றுப் பணியாற்றிய ஏ.எல்.எஸ். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“ நான் அரசியல் சாசனசபைக்கு வந்தது, தாழ்த்தப்பட்டோரின் ( Scheduled Castes ) நலனைப் பாதுகாப்பதைத் தவிர வேறெந்த ஆசையுடனுமல்ல.

நான் இவ்வளவு முக்கியமான பொறுப்பு வகிப்பேன் என சற்றும் எதிர் பார்க்கவில்லை.

சாசனச்சபை என்னை வரைவுக் குழுவிற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததும் நான் வியப்படைந்தேன்.

என்னை வரைவுக் குழுவின் தலைவராக நியமித்தது மேலும் வியப்பூட்டுகிறது.

( Dr. Baba Saheb Ambedkar – Writings and Speeches – Vol. 13, Pages 24 to 26 ).

இனமுழக்கம் – இனத்தின் உயர்வே இலட்சியம் ,நூற்கடலில் ஆழங்காணும் அளவுக்கு அறிவுப்பேரொளியாக இருந்தார் .

சட்ட அமைச்சராக பதவியேற்றபோது அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதியை அறிஞர் அமைச்சர்
மாமருத்துவர் எச் வி அண்டே குறித்துள்ளார் .

நன்றி : முரசொலி , 14.4.1974

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *