எட்டாம் உலகத் தமிழர்
பொருளாதார மாநாடு –
செய்தித்தாள்களில்
நேற்றும் (29.12.2021)- இன்று காலை மற்றும் மாலை (30.12.2021) வெளிவந்த செய்திப்பரல்கள்
தினசெய்தி – பக்கம் எண் : 4
பொருள் வளமும் – தமிழ் நலனும்
எட்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு –
திசம்பர் 28 சென்னையில் லீ மெரிடியன் விருந்தகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் பேசும் பொழுது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைக்க வேண்டும் என்றார் .
அது மட்டுமின்றி தத்தம் நிறுவங்களின் பற்றுச்சீட்டுக்கள் கையேடுகள் ,தகவல் குறிப்புக்கள் தமிழில் அச்சிட்டு பயன்படுத்தவேண்டும் என்றார் .
அன்மையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்
அரசின் அனைத்து வலைதளங்களிலும்
ஆங்கிலத்தோடு – தமிழிலும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியதை நினைவுப்படுத்தினார் .
1992 ஆம் ஆண்டிலேயே வடநாட்டைச் சார்ந்த மிகப்பெரிய நிறுவனம் சென்னையை அடுத்த மணலியில் நிறுவப்பெற்ற பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் அனைத்துத் தகவல் பொருண்மைகளும் , தொழிலாளர்கள் நலன் கையேடுகளையும் தமிழில் அமைத்ததை நினைவு கூர்ந்தார் .
உலகத்தமிழர்கள் சங்க இலக்கிய பாடல்களைப் படிப்பதோடு அதனை எழிலார்ந்த முறையில் சங்க இலக்கியக் காட்சிக் கூடமாக தமிழ்நாடு அரசின் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணம் அமைத்திருப்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார் .
எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இம்மாநாட்டினை நடத்தி வருவதோடு எளிய மக்களுக்கு நீதி மன்ற
தீர்ப்புக்களைத் தமிழில் வெளியிட்டு வரும் சட்டக்கதிர் மாத இதழின் ஆசிரியர் முனைவர் வி ஆர் சம்பத் தமிழகத்தின்
நன்னம்பிக்கைத்தூதர்
என்று பாராட்டினார் .
கருத்தரங்கில் முனைவர் இராஜாராம் இ ஆ ப ( ஓய்வு ) , பேராசிரியர் சு முத்துவேலு ,
பேராசிரியர் உலகநாயகி பழநி ஆகியோர் பேசினர் .
மூன்று நாள்கள் நடக்கும் இம்மாநாட்டில் அமைச்சர்கள், பல்துறைச்செயலர்கள், புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், உலகின் பல நாடுகளில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.
TRINITY MIRROR – PAGE NUMBER : 6
TAMIL’S ECONOMICAL GROWTH – TOWARDS WORLD PROSPERITY
Dr Arul Natarajan, Director of Translations, Government of Tamilnadu
,stated in his special address at the Chennai Global Economic Summit 2021 & Eighth World Tamils Economic Conference on ‘Business Communications & Professional Ethics through # Tamil language & Classical literature’
candidly that Commercial establishments and Industries in and around Tamilnadu to prominently display their name boards in Tamil and issue receipts,bills and phamplets in Tamil .
He also reminded way back in 1992 Goenkas cetex petrochemicals Ltd while setting up their manufacturing facility in Manali made sure from the main gate and the entire office had displayed all their products and literature about their facility and guidelines in Tamil .
Dr Arul further said recently
Chief Secretary of Tamilnadu has instructed all the Websites of Government of Tamilnadu to be hosted in Tamil and English.
Director of Translations stressed Tamil language apart its antiquity is highly flexible and there are easy and simple tamil equivalent words to English terms and
mentioned about an exclusive Tamil sangam literature Art Gallery at International Institute of Tamil studies, Taramani,chennai with elegant artefacts and splendid paintings and its free for all visitors .
Dr Avvai Arul appreciated Dr V R Sampath’s herculean efforts of conducting this seminar and lauded his contributions towards tamil law journal sattakadir during his address on 28th December 2021,at
le Meridian hotel .
மக்கள் குரல்-30.12.2021
பக்கம் 7
சட்டக் கதிர் மாத இதழ் ஆசிரியர் வி.ஆர். சம்பத் ஏற்பாட்டில் 8வது உலக தமிழர் பொருளாதார மாநாடு
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும்:
மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள்
நடராசன் வலியுறுத்தல்
சென்னை, டிச.30
8வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு –
சென்னையில் லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் நடராஜன் பேசும் பொழுது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அது மட்டுமின்றி தங்கள் நிறுவனங்களின் பற்றுச்சீட்டுக்கள் கையேடுகள், தகவல் குறிப்புக்கள் தமிழில் அச்சிட்டு பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அரசின் அனைத்து வலைதளங்களிலும் ஆங்கிலத்தோடு – தமிழிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியதை நினைவுப்படுத்தினார்.
1992ஆம் ஆண்டிலேயே வட நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் சென்னையை அடுத்த மணலியில் நிறுவப்பட்ட பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அனைத்து தகவல் பொருண்மைகளும்,
தொழிலாளர்கள் நலன் கையேடுகளையும் தமிழில் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார்.
உலகத் தமிழர்கள் சங்க இலக்கிய பாடல்களை படிப்பதோடு அதனை எழிலார்ந்த முறையில் சங்க இலக்கியக் காட்சிக் கூடமாக தமிழ்நாடு அரசின் – உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம் அமைத்திருப்பதையும் குறிப்பிட்டார்.
8 ஆண்டுகளாக தொடர்ந்து இம்மாட்டை நடத்தி வருவதோடு எளிய மக்களுக்கு நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழில் வெளியிட்டு வரும் சட்டக் கதிர் மாத இதழின் ஆசிரியர் வி.ஆர். சம்பத் தமிழகத்தின் நன்னம்பிக்கைத் தூதர் என்று பாராட்டினார்.
கருத்தரங்கில் முனைவர் ராஜாராம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, பேராசிரியர் சு. முத்துவேலு, பேராசிரியர் உலகநாயகி பழநி ஆகியோர் பேசினர்.
3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் அமைச்சர்கள், பல்துறை செயலர்கள், புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், உலகின் பல நாடுகளில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர்.
Day 2: At the Chennai Global Economic Summit 2021 & Eighth World Tamils Economic Conference Dr Arul Natarajan presenting paper on ‘Business Communications & Professional Ethics through #Tamil language & Classical literature’ #CGES2021

Add a Comment