பொங்கும் திருமணமும் –
புதுமனை மகிழ்ச்சியும்
13.12.2021 (திங்கட்கிழமை):
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடியில் ‘கே.வி.என்.’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற நரசிம்மன் மாமா – திலகவதி அத்தையின் மகள் உமா – சிவசுப்பிரமணி இணையரின் திருமகன் ஸ்ரீராம் பிரசாந்த் – மணமகள் இலாவண்யா திருமணப் பெருவிழாவில் வாணி, ஆதிரையுடன் சென்று வாழ்த்தினேன்.
அசோக்நகரில் புதிதாகக் கட்டப்பட்ட நடராஜன் அத்தான் – சங்கரி அக்காவின் வளமனைப் புகுவிழாவில் வாணி – ஆதிரையுடன் சென்று வாழ்த்தினேன்.
ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மகாராஷ்ட்டிரா நிவாஸ் மண்டபத்தில் நடைபெற்ற, பதிப்பாளர் இராமசுப்பிரமணிய ராஜா – திருமதி புவனேஸ்வரி இணையரின் திருமகள் பவானி – மணமகன் வேல் விக்னேஷ், திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பேராலயத்தில் நடைபெற்ற, அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறைப் பொறிஞர் தேசராஜ் – மேரி தேசராஜ் இணையரின் திருமகன் பிரவீண் பீட்டர் – மணமகள் பவானி என்கிற ரூத் கெசியா, திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
தியாகராயநகரிலுள்ள ‘அக்கார்டு’ நான்மீன் மாளிகையில் நடைபெற்ற, கலைஞன் பதிப்பக உரிமையாளர் நந்தன் மாசிலாமணி இணையரின் திருமகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

Add a Comment