POST: 2022-01-18T11:17:48+05:30

தைப்பூசம் தவறாதீர் !
1871 முதல் வடலூரில் நடைபெற்று வருகிறது

இந்தோனேஷியாவில் தைப்பூசம் !!

குகப்பெருமான் துணை

மைடான் தண்டாயுதபாணி கோவில்
தைப்பூச மகோத்ஸவப் பத்திரிகை ( 1918 )

விக்கினேஸ்பரர் துதி

திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவுங்
கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நம துள்ளம் பழுக்கவும்
பெருகு மாழத்துப் பிள்ளையை பேணுவாம்.

குகப் பெருமான் துதி

ஞால மைடானில் நற்குமரன் காட்சி
சாலப் புகன்றழைக்கச் சாருமிந்த பத்திரிகை
தென்பரவு பூசத் திருவிழா கண்டுதொழற்
கன்பர்தமைக் கூவி யழைக்கவரும் பத்திரிகை.

ஸ்ரீ மத் அகண்டா கார சச்சிதா நந்தரூபராய் அருளே உருவாகக் கொண்டு இம்மையுடன் புளோணியாவின் கண் வீற்றிருக்கும் நம் வழிபடு கடவுளாகிய எம்பெருமான் க்ஷேத்திரத்திற்கு நிகழும் பிங்கள – தை மீ 12 தேதி சுக்கிரவாரம் புனர்பூச நக்ஷத்திரத்தில் அன்று காலை 9 மணிக்கி இந்து ஸ்ட்ரீட் 25 நிம்பர் கிரகத்தில் நின்றும் மெய்யன்பர்கள் புடை சூழ விசேஷ வாத்தியக் கருவிகளின் கோஷ்ட்டத்துடன் சர்வாபரண அலங்கிருதராயும், வெள்ளிமயில் வாகனரூடராயும் இந்திர விமானத்தமர்ந்து அடியார்களின் சர்க்கரைக் காவடிகளோடு பத்தி
சாமார்க்கமாக தமதாலயம் சென்றமர்ந்தருளியும், 13 தேதி மந்தவாரம் பூச நக்ஷத்திரத்தில் தமதடியார்களால்

– ஆங்கு நடாத்தும் மயேஸ்வர பூசையையும் பால்க் காவடிகளின் அபிஷேகத்தையும் ஏற்று பன்னிரு கண் களாலும் அருளுடன் கடாக்ஷித்து 14 ந்தேதி ஆதித்த வார தினம் அதி அற்புத சர்க்கரைக் காவடிகளின்
அபிஷேகத்தைப் பெற்றருளி அன்று மாலை 6 மணிக்கி ஆங்கு நின்றும் சர்வாபரண பூசிதறாயும் புகர் வாறண ரூடறாயும் சங்கீத கானத்துடன் இந்திர விமானத்தாரோ கணிந்து திரு வீதியில் திருவுலாக் கொண்டு இரவு 9 மணிக்கி தானாலாப்பானில் நடக்கும் வானக் காக்ஷியைக் கண்ணுற்று மீண்டும் மிகு ஆடம்பரத்துடன் தமதிருக் கையில் சேர்ந்தருளுவார்.

இம்மகோற்சவ மாகாத்மியத்தை தாங்கள் இஷ்ட மித்திரருடன் இங்கு விஜயமாகி வழிபடும் நம் யெம் பெருமானை திரிகரணங்களோடு இறைஞ்சிலோகர அனு பவகர்ம பந்தங்களை நீக்கி இப்பூவின் கண் உள்ள கால முழுதும் அஸ்ட ஐஸ்வரியலொடு பெருவாழ்வையும் கைப் பற்றி பிர்மானந்தமுரக் கோருகின்றோம்.

இங்ஙனம்
நாட்டுக்கோட்டை நகரத்தார் டில்லீ சுமத்ரா

மெர்க்கண்டைல் பிரஸ் No.25 பீச் ஸ்டிரீட்
பினாங்கு ( 2176 – 12 – 1917 )

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *