POST: 2022-01-27T09:49:36+05:30

காமாட்சிநாதன் கலங்க வைத்தாரே !

பேராசிரியர் காமாட்சிநாதன் என்னோடு பயின்றவர் .

தியாகராசர் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து திருவனந்தபுரம் மொழியியல் முதுகலை பயிலச் சென்றனர் .

மொழியியல் ஆர்வம் தலைக்கேறியிருந்த காலம் .

அப்போதே எவரோடும் முரண்படுவார் – யாருக்கும் பணிந்ததில்லை .

ஒருமையில் தான் என்னை அழைத்து என்னோடு பெரிதும் உரிமை கொண்டாடினார் .

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இல்லம் தேடிச் சென்று தில்லையில் மாடியில் அவர் அடுக்கி வைத்திருந்த நூல்களைக்கண்டு வியந்தேன் .
எழுத்துக்குறிப்புக்கள் ஏராளம் .

அப்போது அப்பாவின் நற்றிணை உரை பற்றிக் குறிப்புக்களை மட்டும் 5000 பக்கம் எழுதி வைத்திருக்கிறேன் என்றார் .

தலைமைச்செயலகத்தில் என்னைத் தேடி வந்து என்னோடு ஓரிருமுறை உண்டு சென்றார் .

எதிலும் நிறைவு காணாத நெஞ்சம் – அதே நிலையில் நீடிய நினைவு கொண்ட புலமை .

காமாட்சிநாதன் மறைவு நம் கையறு நிலையைத் தொடுகிறது .

அவர் எழுதிய குறிப்புக்கள் எவருக்குப் பயன்படுமோ ?

வருத்தத்துடன்

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *