தடுப்பூட்டி தவறாதீர் !
கடல் கடந்து பல்லாயிரம் மைல் தாண்டி இருந்தாலும் என் மகன் – மருமகள் – பெயர்த்தி எப்போதும் எங்கள் கண்ணில் நிற்கின்றனர் .
என்ன செய்வதென்றாலும் கண்ணனைக் கேட்டுத்தான் அருள் செய்கிறார் .
கண்ணன் வலியுறுத்தியதால் மருத்துவச் செவிலியர் திருமதி பொன்னரசி அவர்கள் 22.1.2022 ,சனிக்கிழமை எங்கள் அண்ணாநகர் இல்லத்துக்கு வந்து எனக்கும் அருளுக்கும் தடுப்பூட்டி (Booster) இட்டனர் .
தடுப்பூசி .விசை ஊசி , தடையரண் , தடைஊக்கி ,தடைப்பூட்டி ,
தடைக்காப்பு ,என்று பல சொற்கள் தாமாக வந்தன .
காவல் ஊசி ,காப்பு ஊசி என்றும் நண்பர்கள் கூறினர் .
அனைத்தும் என் மகன் கண்ணனால் நடந்தது .
என்ன தான் ஆயிரம் வேலியிட்ட போதும் , என் அருமைத் துணைவியார் தாராவை மீட்க முடியாது போயிற்றே !
அவலத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
.தடுப்பூசிக்கு ஊக்கமூட்டித் தமிழக அரசு மிகச் சீரிய பணியாற்றுகிறது .
மூத்தோர் முன்னேயிருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் .
இப்படிப்பட்ட காலக்கொடுமை
என் நினைவு தெரிந்து அறுபதாண்டுகளில் நிகழ்ந்ததில்லை.
என் உயிர் காத்த செவிலியச் சகோதர – சகோதரிகளுக்கு அனைவருக்கும் நன்றி .
ஒளவை நடராசன்

Add a Comment