இனிய இருபதாண்டுகள்
முதுகலைத் தமிழிலக்கியம் முடித்து நான் முதுநிலை ஆய்வு (எம்.பில்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன்.
பேராசிரியர் வ.ஜெயதேவன் ‘அருந்தமிழில் அயற்சொற்கள்’ என்ற தலைப்பிட்டு ஆய்வேட்டை எழுத ஆர்வமூட்டினார்.
அவ்வாய்வு முடிந்து, அழகிய நூலாக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இதே தேதியில் (01.02.2003) வெளியிட்டேன்.
பேராசிரியர் வ. ஜெயதேவன் முன்னுரையையும்,
மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், கு.வ. எழிலரசு எழுதிய அணிந்துரையையும்,
என் தோளோடு தோளாத் தோழமை கொண்டு வாழும் புகழ் வாய்ந்த ‘திரைக் கவிஞர்’ கபிலன் எழுதிய முகப்புக் கவிதையையும் தாங்கி,
இளங்கலை வகுப்புத் தோழர், வெ. கருணாநிதி தன் பதிப்பகமான பார்க்கர் வாயிலாக (ரூ.75/- நூல் விலையுடன், 192 பக்கங்கள் கொண்ட நூலாக) அச்சிட்டதையும்,
1200 படிகள் அச்சிடப்பட்ட இந்நூலைத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களும் கொள்முதல் செய்ய வழிவகுத்த, பரிவார்ந்த நினைவில் வாழும் பதிப்புச் செம்மல் மூவேந்தர் முத்துவையும் இத்தருணத்தில் எண்ணி மகிழ்கிறேன்.
‘பத்தொன்பதாண்டு இலக்கிய அறுவடை
’ என்று எழுதுவதில் எனக்குப் பெருமிதமாகவுள்ளது.

Add a Comment