POST: 2022-02-14T10:51:07+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 40
ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

அரசியல் மரபும் மாட்சியும் !

சென்னை மாநகரில் மயிலையில் உள்ள பாரதிய வித்தியா பவன் சிறந்த கலைக்கூடமாகும் .

அன்றாடம் அறிவு நலம் பரப்பும் கருத்தரங்கம் ,ஆடல் ,பாடல் நிகழ்வுகள் – மாணவர்கள் கற்பதற்க்கேற்ற பல்வேறு கல்விச் செழுமை கொண்ட வகுப்பு நடைபெறுகின்றன .

மேலும் மாடியில் ஒரு சிற்றரங்கமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது .

நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பாரதிய வித்தியா பவன் இயக்குநராகத் திகழும்
திரு கே என் இராமசாமி அவர்களை அறியாதவர்கள் இல்லை .

மக்கள் தொடர்பிலும் – கலை ஆர்வத்திலும் , நிகழ்வுகளைப் பொலிவாக நடத்தும் ஆட்சித்திறனும் அவருடைய சிறந்த செயல்களாகும் .

கலைமாமணி ,கலைவித்தகர் எனப் பல்வேறு விருதுகள் அவரைத்தேடி வந்துள்ளன

விளம்பரம் விரும்பாத பெருந்தன்மை அவரை எப்போதும் அணி செய்கிறது .

இந்திய நாடறிந்த மிகப்பெரிய வழக்கறிஞராகவும் ,மத்திய அரசின் அமைச்சராகவும் ,அறிவுக் கடலாகவும் அமைந்த திரு கே எம் முன்ஷி தொடங்கிய இந்நிறுவனம் ஒரு பல்கலைக்கழகமாகவும் ஒளிர்கிறது .

மும்பையில் அலுவலகத் தலைமையகம் உள்ளது .

உலகெங்கும் பாரதிய வித்தியா பவனுக்குக் கிளைகள் சிறப்பாக நடந்து வருகின்றன .

பாரதிய வித்தியா பவன் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் உலகப்புகழ் வாய்ந்தவை .

இக்கட்டிடத் திறப்பு விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய உரை உலகக் கண்ணோட்டத்தையும் அரசியல் பண்பாட்டையும் வலியுறுத்துகிறேன் .

சென்னை பாரதிய வித்தியா பவன் கட்டடத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

சி.சுப்பிரமணியம் அவர்கள் இங்கே வரவேற்புரையாற்றிய போது பாரதிய வித்தியா பவனுடைய கட்டடம் 1967 – ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்கள்.

பிறகு அவர்களே வந்து அமர்ந்து 1972 இல் நடந்த விழாவை 67 என்று தவறுதலாகச் சொல்லிவிட்டேன்; திருத்துகின்ற பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு 1972 அக்டோபர்த் திங்கள் சென்னையிலே பாரதிய வித்தியா பவனுடைய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த விழாவிற்கு நான் தலைமை வகித்தேன்.

கட்டடத்தை அன்றைய குடியரசு தலைவர், மறைந்த – ஆனால், என்றும் மறையாத வி.வி.கிரி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்தப் பாரதிய வித்தியா பவனுடைய நிறுவனர் பெருமைக்குரிய அறிஞர் திரு .முன்ஷி அவர்களுடைய திருவுருவப் படத்தை அந்நாள் தமிழகத்தினுடைய ஆளுநர் கே.கே.ஷா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

புத்தகங்களை வெளியிட்டு உரை நிகழ்த்தியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள்.

இறைவணக்கம் பாடியவர் திருமதி வசந்தகுமாரி அவர்கள்.

அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டவர்களில் இன்றைக்குப் பாக்கியிருக்கின்றவர்கள் நானும். சி.எஸ் அவர்களும்தான்.

மற்றவர்கள் எல்லாம் இந்த இருபத்தைந்தாண்டுக் காலத்தில் மறைந்துவிட்டார்கள்.

யார் மறைந்தாலும் பாரதிய வித்தியா பவனின் முயற்சிகள் அதனுடைய மதிப்பு பெருமை மறையாதவை என்பதற்கு அடையாளமாக எங்களுக்குப் பிறகும் நமக்கும் பிறகும் பாரதிய வித்தியா பவனுடைய பணிகள் தொடரவேண்டும்.

அந்த விருப்பத்தோடுதான் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர் அவர்களை அழைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. –

இந்த நிறுவனத்தோடு நாற்பதாண்டுக் காலத்திற்கு மேலாகத் தொடர்பு கொண்டு அதிலே தலைமைப் பொறுப்பை ஏற்று வருபவர் நம்முடைய அன்பிற்குரிய சி.எஸ். அவர்கள்.

நான் குறிப்பிட்ட 72 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியிலே சி.எஸ் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார்கள். ”

இந்திய நாட்டினுடைய வரலாறு பதினொரு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது.

அது பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பல மாநிலங்களிலும் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழிலும் அந்தப் பதினொரு பாகங்களைக் கொண்டு வர வேண்டிய முயற்சியைத் தொடங்க இருக்கிறோம் ” என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால், அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை என்பதையும், அதை விரைவிலே தொடங்குவதற்கான – முனைப்பான ஏற்பாடுகளை சி.எஸ். அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும், அதற்குத் தேவைப்படுகின்ற எல்லா விதமான உதவிகளையும் செய்யத் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்பதையும் நான் அவருக்கு இந்த விழாவிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாச்சாரத்தை – பண்பாட்டைக் கருவியாகக் கொண்டு ஆசிரியர்கள் அதற்குப் பணியாற்ற வேண்டும் என்கின்ற தூண்டுதல் உணர்ச்சியோடு தொடங்கப்பட்டது தான் இந்தப் பாரதிய வித்தியா பவனாகும் .

இந்தக் கலாச்சாரம் என்பது, நல்ல தமிழிலே சொல்ல வேண்டுமானால் ‘ பண்பாடு ‘ என்று சொல்லவேண்டும்.

கலாச்சாரம், பண்பாடு மிக்க ஒருவர் தாம் இந்த நிறுவனத்தின் தலைவராக 40 ஆண்டுக் காலமாக இருந்துவருகின்றார்.

அவருடைய பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமேயானால் அவர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே நிதியமைச்சராக , கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, நான் சட்டமன்றத்திலே உறுப்பினர் – எதிர்க்கட்சி உறுப்பினர். அவரை எதிர்த்து வாதாடுகின்ற உறுப்பினர் கடுமையாக வாதாடுகின்ற உறுப்பினர்.

அந்த நேரத்திலும், அவரானாலும் சரி, அல்லது பக்கத்தில் அமைச்சராக இருந்த ஆர்.வி. அவர்களானாலும் சரி, பதில்கள் கனிவாகத்தான் வரும். கடுமையான விமர்சனங்களுக்குக்கூடக் கனிவான பதிலைத் தரக்கூடியவர்களாக அன்றைக்கு சி.எஸ். அவர்களும், ஆர்.வி. அவர்களும் திகழ்ந்தார்கள்.

பிறகு கால மாற்றத்தில் என்னென்னவோ நடைபெற்றிருக்கலாம்.

ஆனால், அன்றைய தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகின்றேன்.

சட்டப்பேரவை ஒரு நாள் தொடர்ந்து மாலையிலும் நடைபெற்றது.

அப்படி நடைபெற்றபொழுது, சில அமைச்சர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்று தங்களுடைய பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சில அமைச்சர்கள் தாம் பேரவையிலே இருந்தார்கள்.

திரு.சி.எஸ். அவர்களும் அப்பொழுது அவையிலே இல்லை .

அவருடைய அலுவலக அறையிலே இருந்தார்கள்.

ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர்- நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை .

அது அவர்களுக்குத் தெரியும்.

மிகக் கடுமையாக அறிஞர் அண்ணா அவர்களைத் தாக்கிக் கடுஞ்சொல்லால் பேசினார்கள்.

எனக்குக் கொதிப்பே ஏற்பட்டுவிட்டது.

ஆனால், எழுந்து பதில் சொல்லத் திராணி சக்தியற்ற நிலையில் நான் உட்கார்ந்திருந்தேன்,

அவ்வளவு கடுமையான மொழி ஆளுங்கட்சி உறுப்பினரால் அன்றைக்குச் சொல்லப்பட்டது.

வேறு வழி இல்லாமல் பக்கத்திலே இருந்த அருமை நண்பர் ப.உ.சண்முகம் அவர்களிடம், ” சி.எஸ், அவர்கள் மாடியிலே அறையிலே இருப்பார்கள். போய்ச் சொல்லிவிட்டு வாருங்கள் ” என்று சொன்னேன்,

ப.உ.சண்முகம் உடனடியாக மாடிக்குச் சென்று சி.எஸ் அவர்களை அறையிலே சந்தித்து, நடந்ததைச் சொன்னவுடன் அடுத்த கணம் சி.எஸ். அவர்கள் அவைக்குள்ளே வந்துவிட்டார்கள் வந்தவுடன் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை .

சி.எஸ் அவர்கள் எழுந்து, ” ஓர் உறுப்பினர் இங்கே அண்ணா அவர்களைப் பற்றிப் பேசியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் அந்த உறுப்பினர் உடனடியாக எழுந்து, அவர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் ” என்று சொன்னது மாத்திரமல்ல ; மிகக் கடுமையாக அவரைக் கண்டித்து அவர், ” நான் என்ன தப்பு செய்துவிட்டேன் ” என்று சொல்லச் சொல்ல ” இதைவிடப் பெரிய தப்பு செய்ய வேண்டியதில்லை ” என்கின்ற அளவிற்கு மிகுந்த கடுங் கோபத்தோடு அவரைக் கண்டித்த அந்த நிகழ்ச்சி இன்றைக்கும் என்னுடைய மனக்கண்முன்னால் நிழலாடிக் கொண்டிருக்கிறது .

அப்படிப்பட்ட அரசியல், நாகரிகத்திற்குச் சொந்தக்காரர் சி.எஸ். அவர்கள் ஆவார்கள்.

இன்றுகூட, இந்த மேடையிலேகூட, இங்கே நிகழ்ச்சி நிரல் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலேதான் நிருணயிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 5 நிமிடம், 10 நிமிடம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், நாம் எப்போதுமே கட்டுப்பாட்டுக்குள் சில நேரங்களில் நிற்பதில்லை.

அதை உணர்ந்த சி.எஸ். அவர்கள் சொன்னார்கள்; ” வெளியிலே போக்குவரத்தை கருதி இந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று கருதி நிறுத்திவிடப் போகிறார்கள். நீண்ட நேரம் அங்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும்.

எனவே அதிகாரிகளிடத்தில் நீங்கள் தயவு செய்து சொல்லி அனுப்பி, இந்த நிகழ்ச்சி முடிகிற நேரத்திலே போக்குவரத்தை நிறுத்தினால் போதும் என்று சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

போக்குவரத்துத் தொல்லையால் கடந்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் சி.எஸ். அவர்களும் ஒருவர் என்பதினால் அதை அவர் இங்கே பாதிக்கப்பட்டவர் காரணத்தினால் சொன்னார்கள்.

இவை எல்லாம் பண்பாட்டிலே ஒரு கூறு என்ன ? நின்றுவிட்டுப் போகட்டுமே ! என்கின்ற அதிகாரத் தோரணை அவரிடத்திலே அன்றைக்கும் இல்லை.

இன்றைக்கும் இல்லை இத்தகைய அரசியல் பண்பாடு எல்லோருக்கும் வந்தாக வேண்டும் என்பதை இந்த நல்ல விழாவிலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமார் 58 அல்லது 59 ஆண்டுக் காலமாக இந்தப் பாரதிய வித்தியா பவன் மனித இனத்தினுடைய முழுமையான மேம்பாட்டிற்குத் தேவையான கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் கலந்த மனிதநேயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

இந்தியாவிலே மாத்திரமல்லாமல், பல அயல்நாடுகளில் – குறிப்பாக இலண்டன், மான்செஸ்டர், நியூயார்க்கு, பாஸ்டுன், டொரண்டோ , லிஸ்பன் ஆகிய இடங்களிலும் இதனுடைய மையங்கள் அமைந்து உலக அளவில் இந்நிறுவனத்தின் இலட்சியங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பண்டித நேரு அவர்கள், இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களைப் பாராட்டிச் சொல்லும்போது;- ” இந்த நிறுவனத்தின் நவீன சமூகத்திலே ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பெரும் பணியாற்றி வருகின்றது.

அதனுடைய செயற்பாடுகள் தொட்டில் முதல் சுடுகாடுவரை உள்ள மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பரிணாமங்களையும் அவற்றிற்கு மேலும் தழுவி நிற்பது சிறப்பானதாகும்.” – என்று விளக்கியிருக்கிறார்.

பொருளாதாரத்தில் வெற்றிகரமான கலாச்சார மேன்மைகளை உணர்ந்த முழுமையான மனிதனை மிக உயர்ந்த கல்வியின் மூலம் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்கு இந்தியா முழுவதும் இந்த நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்த நிறுவனங்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பது:

” The World is one Family ! ”

இதைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்

இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் ;

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற இருவரித் தமிழ்ப் பாடல் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இதனை அன்றைய பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள் இரஷ்ய நாட்டிற்குச் சென்றபோதுகூட ” எங்களுடைய இந்திய நாட்டில், தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கவிஞர் இப்படிப் பாடியிருக்கிறார் ” என்று இந்த ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற வரிகளை இரஷ்யாவிலேயே இந்திரா காந்தி அவர்கள் எடுத்துச் சொல்லி அது ஏடுகளிலே வெளிவந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

” The Whole world is my native. All People are my Kith and Kin ” கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல். ” யாதும் ஊரே, யாவரும் கேளிர் ” என்ற இந்தப் பாடல்.

இந்த நிலையை உருவாக்குவதற்கு இங்கே பேசும்போது சி.எஸ். அவர்களும், ஆர்.வி. அவர்களும், நம்முடைய மேதகு ஆளுநர் அவர்களும் எடுத்துக் குறிப்பிட்டதைப் போல, 5000 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால், அவர்களில் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

இங்கே ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வழங்க, குடியரசு தலைவர் அவர்கள் வெளியிட்ட இந்தப் புத்தகத்தை நான் புரட்டினேன்.

அதிலே சுவாமி இரங்கநாதனந்தா அவர்கள் இயற்றிய நூல் இது. அதிலே ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்டுவது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.

” Now we have achieved our political freedom and established a sovereign democratic republic.

Post – freedom India is faced with the question; Freedom : What next ?

In our Constitution we have made very big promises to our people and proclaimed that, through freedom, we shall solve the problems and reshape the destiny of India no to our own ideas, ideals and needs.

The first great problem posed by that freedom is the dismal wand backwardness of nearly half of our 700 million popular The second problem is the illiteracy of millions of them. The third problem is posed by the divisive caste and communal loyalties, weakening our infant democratic state. All these problems have to be solved our people, by ourselves. No foreign power is going to help us, nor is it desirable to ask them to solve them for us.

This national responsibility has descended upon us as soon as e became free, and this sense of national responsibility should be experienced by every citizen of free India. And this situation proclaims the role and responsibility of our teachers all over India and provides the dynamic context to discuss the theme we have chosen today. ”

இதன் தமிழாக்கம் :

தற்போது நாம் அரசியல் விடுதலை அடைந்து இறையாண்மையுள்ள மக்களாட்சிக் குடியரசை அமைத்துள்ளோம்.

பெற்ற விடுதலைக்கு அடுத்து என்ன ? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி நம் இந்தியாவின் முன் உள்ளது.

விடுதலையின் மூலம் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு நமது சொந்த விருப்பம், குறிக்கோள் மற்றும் தேவைகளுக்கிணங்க இந்தியாவை மாற்றியமைக்கலாம் என்று பறைசாற்றி மக்களுக்கு ஒரு மிகப் பெரிய உறுதியை நாம் அளித்துள்ளோம்.

700 மில்லியன் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 விழுக்காடு மக்கள் வறுமைப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போக்க முயல்வதே விடுதலை பெற்ற இந்தியாவின் முதன்மை பிரச்சனையாகும்.

கோடிக்கணக்கான மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சனையாகும்.

பிளவுபடுத்தக்கூடிய சாதி மற்றும் மதவாத நம்பிக்கை முன்வைக்கப்படுவதால், நம் புதிய மக்களாட்சியின் மாட்சியை சோதனை விளைவது பிரச்சினையாகும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

வேறு எந்த நாடும் நமக்கு உதவப்போவதுமில்லை, அவர்களிடம் உதவி கேட்பதும் விரும்பத்தக்கதல்ல.

விடுதலை பெற்றவுடன் இந்தக் கடமைகள் நம் நம் அனைவரின் பொறுப்பாக மாறியுள்ளது.

மேலும் விடுதலை அடைந்த இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த பொறுப்பு இருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலை, இந்தியா முழுவதும் உள்ள நமது ஆசிரியர்களின் பங்கையும், பொறுப்பையும் பறைசாற்றுவதுடன், இன்று விவாதத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த தலைப்புக்களை குறித்து கலந்தாலோசிப்பதற்கான குறிப்புகளையும் நமக்கு அளிக்கிறது.

– நன்றி : முரசொலி கட்டுரை
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்
ஒளவை நடராசன்

மேனாள் தும் !

மயிலையில் உள்ள பாரதிய வித்தியா பவன் சிறந்த கலைக்கூடமாகும் .அன்றாடம் அறிவு நலம் பரப்பும் கருத்தரங்கம் ,ஆடல் ,பாடல் நிகழ்வுகள் – மாணவர்கள் கற்பதற்க்கேற்ற பல்வேறு கல்விச் செழுமை கொண்ட வகுப்பு நடைபெறுகின்றன .

மேலும் மாடியில் ஒரு சிற்றரங்கமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது .நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பாரதிய வித்தியா பவன் இயக்குநராகத் திகழும் திரு கே என் இராமசாமி அவர்களை அறியாதவர்கள் இல்லை .

மக்கள் தொடர்பிலும் – கலை ஆர்வத்திலும் , நிகழ்வுகளைப் பொலிவாக நடத்தும் ஆட்சித்திறனும் அவருடைய சிறந்த செயல்களாகும் .

கலைமாமணி ,கலைவித்தகர் எனப் பல்வேறு விருதுகள் அவரைத்தேடி வந்துள்ளன .விளம்பரம் விரும்பாத பெருந்தன்மை அவரை எப்போதும் அணி செய்கிறது .

இந்திய நாடறிந்த மிகப்பெரிய வழக்கறிஞராகவும் ,மத்திய அரசின் அமைச்சராகவும் ,அறிவுக் கடலாகவும் அமைந்த திரு கே எம் முன்ஷி தொடங்கிய இந்நிறுவனம் ஒரு பல்கலைக்கழகமாகவும் ஒளிர்கிறது .மும்பையில் அலுவலகத் தலைமையகம் உள்ளது .

உலகெங்கும் பாரதிய வித்தியா பவனுக்குக் கிளைகள் சிறப்பாக நடந்து வருகின்றன .பாரதிய வித்தியா பவன் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் உலகப்புகழ் வாய்ந்தவை .

இக்கட்டிடத் திறப்பு விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய உரை உலகக் கண்ணோட்டத்தையும் அரசியல் பண்பாட்டையும் வலியுறுத்துகிறேன் .

சென்னை பாரதிய வித்தியா பவன் கட்டடத் திறப்புவிழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

சி.சுப்பிரமணியம் அவர்கள் இங்கே வரவேற்புரையாற்றிய போது பாரதிய வித்தியா பவனுடைய கட்டடம் 1967 – ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். பிறகு அவர்களே வந்து அமர்ந்து 1972 இல் நடந்த விழாவை 67 என்று தவறுதலாகச் சொல்லிவிட்டேன்; திருத்துகின்ற பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு 1972 அக்டோபர்த் திங்கள் சென்னையிலே பாரதிய வித்தியா பவனுடைய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த விழாவிற்கு நான் தலைமை வகித்தேன். கட்டடத்தை அன்றைய குடியரசு தலைவர், மறைந்த – ஆனால், என்றும் மறையாத வி.வி.கிரி அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்தப் பாரதிய வித்தியா பவனுடைய நிறுவனர் பெருமைக்குரிய அறிஞர் திரு .முன்ஷி அவர்களுடைய திருவுருவப் படத்தை அந்நாள் தமிழகத்தினுடைய ஆளுநர் கே.கே.ஷா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

புத்தகங்களை வெளியிட்டு உரை நிகழ்த்தியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள். இறைவணக்கம் பாடியவர் திருமதி வசந்தகுமாரி அவர்கள். அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டவர்களில் இன்றைக்குப் பாக்கியிருக்கின்றவர்கள் நானும். சி.எஸ் அவர்களும்தான். மற்றவர்கள் எல்லாம் இந்த இருபத்தைந்தாண்டுக் காலத்தில் மறைந்துவிட்டார்கள்.

யார் மறைந்தாலும் பாரதிய வித்தியா பவனின் முயற்சிகள் அதனுடைய மதிப்பு பெருமை மறையாதவை என்பதற்கு அடையாளமாக எங்களுக்குப் பிறகும் நமக்கும் பிறகும் பாரதிய வித்தியா பவனுடைய பணிகள் தொடரவேண்டும். அந்த விருப்பத்தோடுதான் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர் அவர்களை அழைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. – இந்த நிறுவனத்தோடு நாற்பதாண்டுக் காலத்திற்கு மேலாகத் தொடர்பு கொண்டு அதிலே தலைமைப் பொறுப்பை ஏற்று வருபவர் நம்முடைய அன்பிற்குரிய சி.எஸ். அவர்கள்.

நான் குறிப்பிட்ட 72 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியிலே சி.எஸ் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார்கள். ” இந்திய நாட்டினுடைய வரலாறு பதினொரு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. அது பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பல மாநிலங்களிலும் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழிலும் அந்தப் பதினொரு பாகங்களைக் கொண்டு வர வேண்டிய முயற்சியைத் தொடங்க இருக்கிறோம் ” என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால், அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை என்பதையும், அதை விரைவிலே தொடங்குவதற்கான – முனைப்பான ஏற்பாடுகளை சி.எஸ். அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும், அதற்குத் தேவைப்படுகின்ற எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்பதையும் நான் அவருக்கு இந்த விழாவிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாச்சாரத்தை – பண்பாட்டைக் கருவியாகக் கொண்டு ஆசிரியர்கள் அதற்குப் பணியாற்ற வேண்டும் என்கின்ற தூண்டுதல் உணர்ச்சியோடு தொடங்கப்பட்டது தான் இந்தப் பாரதிய வித்தியா பவனாகும் .

இந்தக் கலாச்சாரம் என்பது, நல்ல தமிழிலே சொல்ல வேண்டுமானால் ‘ பண்பாடு ‘ என்று சொல்லவேண்டும்.

கலாச்சாரம் பண்பாடு மிக்க ஒருவர் தாம் இந்த நிறுவனத்தின் தலைவராக 40 ஆண்டுக் காலமாக இருந்துவருகின்றார். அவருடைய பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமேயானால் அவர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே நிதியமைச்சராக , கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, நான் சட்டமன்றத்திலே உறுப்பினர் – எதிர்க்கட்சி உறுப்பினர். அவரை எதிர்த்து வாதாடுகின்ற உறுப்பினர் கடுமையாக வாதாடுகின்ற உறுப்பினர்.

அந்த நேரத்திலும், அவரானாலும் சரி, அல்லது பக்கத்தில் அமைச்சராக இருந்த ஆர்.வி. அவர்களானாலும் சரி, பதில்கள் கனிவாகத்தான் வரும். கடுமையான விமர்சனங்களுக்குக்கூடக் கனிவான பதிலைத் தரக்கூடியவர்களாக அன்றைக்கு சி.எஸ். அவர்களும், ஆர்.வி. அவர்களும் திகழ்ந்தார்கள்.

பிறகு காலமாற்றத்தில் என்னென்னவோ நடைபெற்றிருக்கலாம். ஆனால், அன்றைய தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகின்றேன்.

சட்டப்பேரவை ஒரு நாள் தொடர்ந்து மாலையிலும் நடைபெற்றது. அப்படி நடைபெற்றபொழுது, சில அமைச்சர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்று தங்களுடைய பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு சில அமைச்சர்கள் தாம் பேரவையிலே இருந்தார்கள்.

திரு.சி.எஸ். அவர்களும் அப்பொழுது அவையிலே இல்லை . அவருடைய அலுவலக அறையிலே இருந்தார்கள். ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர்- நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை . அது அவர்களுக்குத் தெரியும். மிகக் கடுமையாக அறிஞர் அண்ணா அவர்களைத் தாக்கிக் கடுஞ்சொல்லால் பேசினார்கள். எனக்குக் கொதிப்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால், எழுந்து பதில் சொல்லத் திராணி சக்தியற்ற நிலையில் நான் உட்கார்ந்திருந்தேன்,அவ்வளவு கடுமையான மொழி ஆளுங்கட்சி உறுப்பினரால் அன்றைக்குச் சொல்லப்பட்டது. வேறு வழி இல்லாமல் பக்கத்திலே இருந்த அருமை நண்பர் ப.உ.சண்முகம் எம். அவர்களிடம், ” சி.எஸ், அவர்கள் மாடியிலே அறையிலே இருப்பார்கள். போய்ச் சொல்லிவிட்டு வாருங்கள் ” என்று சொன்னேன்,

ப.உ.சண்முகம் உடனடியாக மாடிக்குச் சென்று சி.எஸ் அவர்களை அறையிலே சந்தித்து, நடந்ததைச் சொன்னவுடன் அடுத்த கணம் சி.எஸ். அவர்கள் அவைக்குள்ளே வந்துவிட்டார்கள் வந்தவுடன் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை . சி.எஸ் அவர்கள் எழுந்து, ” ஓர் உறுப்பினர் இங்கே அண்ணா அவர்களைப் பற்றிப் பேசியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் அந்த உறுப்பினர் உடனடியாக எழுந்து, அவர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் ” என்று சொன்னது மாத்திரமல்ல ; மிகக் கடுமையாக அவரைக் கண்டித்து அவர், ” நான் என்ன தப்பு செய்துவிட்டேன் ” என்று சொல்லச் சொல்ல ” இதைவிடப் பெரிய தப்பு செய்ய வேண்டியதில்லை ” என்கின்ற அளவிற்கு மிகுந்த கடுங் கோபத்தோடு அவரைக் கண்டித்த அந்த நிகழ்ச்சி இன்றைக்கும் என்னுடைய மனக்கண்முன்னால் நிழலாடிக் கொண்டிருக்கிறது .

அப்படிப்பட்ட அரசியல், நாகரிகத்திற்குச் சொந்தக்காரர் சி.எஸ். அவர்கள் ஆவார்கள்.இன்றுகூட, இந்த மேடையிலேகூட, இங்கே நிகழ்ச்சி நிரல் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலேதான் நிருணயிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 5 நிமிடம், 10 நிமிடம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நாம் எப்போதுமே கட்டுப்பாட்டுக்குள் சில நேரங்களில் நிற்பதில்லை. அதை உணர்ந்த சி.எஸ். அவர்கள் சொன்னார்கள்; ” வெளியிலே போக்குவரத்தை கருதி இந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று கருதி நிறுத்திவிடப் போகிறார்கள். நீண்ட நேரம் அங்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும்.

எனவே அதிகாரிகளிடத்தில் நீங்கள் தயவு செய்து சொல்லி அனுப்பி, இந்த நிகழ்ச்சி முடிகிற நேரத்திலே போக்குவரத்தை நிறுத்தினால் போதும் என்று சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

போக்குவரத்துத் தொல்லையால் கடந்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் சி.எஸ். அவர்களும் ஒருவர் என்பதினால் அதை அவர் இங்கே பாதிக்கப்பட்டவர் காரணத்தினால் சொன்னார்கள்.இவை எல்லாம் பண்பாட்டிலே ஒரு கூறு என்ன ? நின்றுவிட்டுப் போகட்டுமே ! என்கின்ற அதிகாரத் தோரணை அவரிடத்திலே அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை இத்தகைய அரசியல் பண்பாடு எல்லோருக்கும் வந்தாக வேண்டும் என்பதை இந்த நல்ல விழாவிலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமார் 58 அல்லது 59 ஆண்டுக் காலமாக இந்தப் பாரதிய வித்தியா பவன் மனித இனத்தினுடைய முழுமையான மேம்பாட்டிற்குத் தேவையான கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் கலந்த மனிதநேயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

இந்தியாவிலே மாத்திரமல்லாமல், பல அயல்நாடுகளில் – குறிப்பாக இலண்டன், மான்செஸ்டர், நியூயார்க்கு, பாஸ்டுன், டொரண்டோ , லிஸ்பன் ஆகிய இடங்களிலும் இதனுடைய மையங்கள் அமைந்து உலக அளவில் இந்நிறுவனத்தின் இலட்சியங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பண்டித நேரு அவர்கள், இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களைப் பாராட்டிச் சொல்லும்போது;- ” இந்த நிறுவனத்தின் நவீன சமூகத்திலே ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பெரும் பணியாற்றி வருகின்றது. அதனுடைய செயற்பாடுகள் தொட்டில் முதல் சுடுகாடுவரை உள்ள மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பரிணாமங்களையும் அவற்றிற்கு மேலும் தழுவி நிற்பது சிறப்பானதாகும்.” – என்று விளக்கியிருக்கிறார்.

பொருளாதாரத்தில் வெற்றிகரமான கலாச்சார மேன்மைகளை உணர்ந்த முழுமையான மனிதனை மிக உயர்ந்த கல்வியின் மூலம் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்கு இந்தியா முழுவதும் இந்த நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இந்த நிறுவனங்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பது:

” The World is one Family ! ”

இதைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்

இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் ;

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற இருவரித் தமிழ்ப் பாடல் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இதனை அன்றைய பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள் இரஷ்ய நாட்டிற்குச் சென்றபோதுகூட ” எங்களுடைய இந்திய நாட்டில், தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கவிஞர் இப்படிப் பாடியிருக்கிறார் ” என்று இந்த ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற வரிகளை இரஷ்யாவிலேயே இந்திராகாந்தி அவர்கள் எடுத்துச் சொல்லி அது ஏடுகளிலே வெளிவந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

” The Whole world is my native. All People are my Kith and Kin ” கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல். ” யாதும் ஊரே, யாவரும் கேளிர் ” என்ற இந்தப் பாடல்.

இந்த நிலையை உருவாக்குவதற்கு இங்கே பேசும்போது சி.எஸ். அவர்களும், ஆர்.வி. அவர்களும், நம்முடைய மேதகு ஆளுநர் அவர்களும் எடுத்துக் குறிப்பிட்டதைப் போல, 5000 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால், அவர்களில் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

இங்கே ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வழங்க, குடியரசு தலைவர் அவர்கள் வெளியிட்ட இந்தப் புத்தகத்தை நான் புரட்டினேன். அதிலே சுவாமி இரங்கநாதனந்தா அவர்கள் இயற்றிய நூல் இது. அதிலே ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்டுவது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.

” Now we have achieved our political freedom and established a sovereign democratic republic. Post – freedom India is faced with the question; Freedom : What next ? In our Constitution we have made very big promises to our people and proclaimed that, through freedom, we shall solve the problems and reshape the destiny of India no to our own ideas, ideals and needs. The first great problem posed by that freedom is the dismal wand backwardness of nearly half of our 700 million popular The second problem is the illiteracy of millions of them. The third problem is posed by the divisive caste and communal loyalties, weakening our infant democratic state. All these problems have to be solved our people, by ourselves. No foreign power is going to help us, nor is it desirable to ask them to solve them for us.

This national responsibility has descended upon us as soon as e became free, and this sense of national responsibility should be experienced by every citizen of free India. And this situation proclaims the role and responsibility of our teachers all over India and provides the dynamic context to discuss the theme we have chosen today. ”

இதன் தமிழாக்கம் :

தற்போது நாம் அரசியல் விடுதலை அடைந்து இறையாண்மையுள்ள மக்களாட்சிக் குடியரசை அமைத்துள்ளோம். பெற்ற விடுதலைக்கு அடுத்து என்ன ? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி நம் இந்தியாவின் முன் உள்ளது.

விடுதலையின் மூலம் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு நமது சொந்த விருப்பம், குறிக்கோள் மற்றும் தேவைகளுக்கிணங்க இந்தியாவை மாற்றியமைக்கலாம் என்று பறைசாற்றி மக்களுக்கு ஒரு மிகப் பெரிய உறுதியை நாம் அளித்துள்ளோம். 700 மில்லியன் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 விழுக்காடு மக்கள் வறுமைப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போக்க முயல்வதே விடுதலை பெற்ற இந்தியாவின் முதன்மை பிரச்சனையாகும்.

கோடிக்கணக்கான மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சனையாகும். பிளவுபடுத்தக்கூடிய சாதி மற்றும் மதவாத நம்பிக்கை முன்வைக்கப்படுவதால், நம் புதிய மக்களாட்சியின் மாட்சியை சோதனை விளைவது பிரச்சினையாகும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். வேறு எந்த நாடும் நமக்கு உதவப்போவதுமில்லை, அவர்களிடம் உதவி கேட்பதும் விரும்பத்தக்கதல்ல.

விடுதலை பெற்றவுடன் இந்தக் கடமைகள் நம் நம் அனைவரின் பொறுப்பாக மாறியுள்ளது. மேலும் விடுதலை அடைந்த இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த பொறுப்பு இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை, இந்தியா முழுவதும் உள்ள நமது ஆசிரியர்களின் பங்கையும், பொறுப்பையும் பறைசாற்றுவதுடன், இன்று விவாதத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த தலைப்புக்களை குறித்து கலந்தாலோசிப்பதற்கான குறிப்புகளையும் நமக்கு அளிக்கிறது.

– நன்றி : முரசொலி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *