POST: 2022-02-17T10:04:38+05:30

அன்னையும் – அண்ணலும் பல்லாண்டு வாழ்க !

அன்னை வசுந்தரா – அண்ணல் தியாகராசன்
இருவரையும் எங்கள் நெஞ்சம்
எப்போதும் மறப்பதில்லை.

அன்னை வசுந்தராவின் பொன்னொளி வீசும் முகமும்
புன்னகை தவழும் பொலிவும் என் கண்ணை மூடினால்
அவர்களின் வடிவம் எனக்கு எப்போதும் முன் தோன்றும்.

அன்பு – அறிவு – ஆற்றல் – கனிவு,
பெருந்தன்மை – கலைச்சிந்தனை
பிறர்க்குதவும் ஈகை – இரக்கப்பண்பு என்று
இருவரின் குணங்களை எண்ணிக்கொண்டே போகலாம்.

நங்கநல்லூர் மக்கள் நற்பேறு பெற்றவர்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விணையர்
எங்கள் பெற்றோர்களின் மக்கட்செல்வங்களாகவே பழகி வருபவர்கள்.

எழுபது வயதுக்குரிய இளைப்போ – களைப்போ
அயர்வோ – சோர்வோ இருவரிடத்திலும்
எள்ளளவும் படரவில்லை.

இது அவர்கள் மனத்தின் வளமையைக் காட்டுகிறது.

இப்படியே இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து
சிறப்பெய்த வேண்டுமென்று என் ஆருயிர் அன்னையின்
படத்தின் முன்னின்று நான் வேண்டுகிறேன்.

வாழ்க! அன்னை வசுந்தரா!
வெல்க!! அண்ணல் தியாகராசன் மனம் .

பல்லாண்டு வாழ்க!
பலநலங்களும் சூழ்க!!

வாஞ்சையோடு

ஒளவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *