அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 98
நாவிற் பிறந்த சொல்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
தரிசு நிலமாக இருந்த என் மனத்தைச் செழிப்பான பூங்காவாக, சிறந்த விளைச்சல் நிலமாக மாற்றிய பெருமை நான் படித்த சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளி என்றால் மிகையாகாது.
தரைத்தளத்தையும்,முதல் தளத்தையும் மட்டுமே கொண்டு நீள வாக்கில் வனப்புற கட்டப்பட்ட கட்டடம், பரந்த வகுப்பறை, பெரிய கரும்பலகை, நுட்பமான ஆய்வுக்கூடங்கள், நிறைந்த நூல்களுடைய நூலகம், மாபெரும் விளையாட்டுத் திடல், உணவுக்கூடம் கொண்ட மகிழ்ச்சியின் உறைவிடமாகும்.
ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற பள்ளியில் தலைசிறந்த தமிழாசிரியர்களான, திரு. ஜெயராமன், திரு. சதாசிவம், திரு. மோசஸ், திரு. சுந்தரக் கிருஷ்ணன் ஆகியோர், ஆற்றல் வாய்ந்த சிந்தனைகளை என் நெஞ்சில் பதியச் செய்த பெருமக்கள் ஆவார்கள்.
எட்டாம் வகுப்பில் பயிலும்போதே திருக்குறளை மனப்பாடமாக உரையாகப் பேசியபோது, ‘திருக்குறள் செல்வன்’ என்ற பட்டச் சான்றிதழ் பெற்றபோது கிடைத்த கரவொலி, என் செவிகளில் இன்றும் பேரொலியாகவுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்து மேனிலைப்பள்ளியில் இணைந்தபோது, அளப்பரிய மகிழ்ச்சியில் திளைத்தேன்.
முருங்கையாக அதுவரை இருந்த நான், பூசணியாகப் பூரிப்பில் மாறத் தொடங்கினேன்.
தமிழாசிரியர் திரு.ஜெயராமன், முதல் நாளன்று தமிழ் வகுப்பின்போது, எல்லா மாணவர்களையும் நோக்கி மகிழ்ச்சியான செய்தியொன்று, ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் என்று வினவியபோது நான் சொன்னேன், ‘
எந்தையாருக்கு, மலேசிய நாட்டு அமைச்சர் ‘நாவேந்தர்’ என்ற விருது தந்துள்ளார்’ என்று சொன்னபோது கரவொலி பெற்றேன்.
1983-இல் எந்தையார் மலேசியாவில் பேசிய உரை, 20.06.1983- (திங்கட்கிழமை) அன்று மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளியிடப்பட்ட உரை பின்வருமாறு:-
“தமிழ் மக்களுக்கு இலக்கிய உணர்வு தோன்றுவதற்கு அடிப்படையானது இலக்கியமாகும்.
இலக்கியம் என்பது ஒருவருடைய நெஞ்சத்திலிருந்து வெளிவந்து மற்றொருவருடைய நெஞ்சத்தில் பதிவதினால் தான் அது சிறப்பு பெறுகிறது.
ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவர் புரிந்து கொள்வது என்பது, மேலும் சிறப்புடையதாகும்.
இதன் உணர்வில் அமைந்த இலக்கியக் காட்சியைப் பற்றி இங்குக் காண்போம்.
தலைவன் பொருள் தேடச் செல்கின்றான்.
காலம் கடந்தும் அவன் தலைவியைக் காண்பதற்கு வரவில்லை.
கார்காலம் வந்தவுடன் அவன் வந்து விடுவான் என்று தலைவி நினைக்கிறாள்.
ஆனால், தலைவனோ வரவில்லை.
தலைவன் வருகின்றான் என்றால் அவனது தேர் வரும் என்று தலைவி சொல்கின்றாள்.
கார்காலம் வந்து விட்டது. ஆனால் தேர் வரவில்லையே என்றார்.
தலைவி சொல்கின்றாள், தலைவன் என்னைப் பார்க்க வரவில்லையென்றாலும் பரவாயில்லை.
ஆனால், என்னைவிட என்னுடைய அன்பைவிட அவரைக் கவரக்கூடிய பொருள் ஒன்று உண்டு என்று சொல்கின்றாள்.
இந்தக் கூடல் மாநகரில் வாழ்கின்றேன் என்பதற்காக அவர் இங்கு வராவிட்டாலும் இந்த நகரில்தான் புலவர்கள் சங்கம் வைத்திருக்கின்றார்கள்.
அவர்கள் வழங்கும் தமிழின் இனிமையையும், அருமையையும் இங்கே தான் காணமுடியும்.
கலைகளையும், கலைகளை வடிவமமைக்கும் ஓவியங்களையும் இங்கே காணலாம்.
ஆகவே, இந்த இலக்கிய இன்பத்தைப் பருகுவதற்குக் கண்டிப்பாக வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போனார் என்று தலைவி சொல்கின்றாள்.
இந்த மங்கையை மறந்தாலும் பொறுத்துக் கொள்வேன்.
ஆனால், மதுரத் தமிழோசையைக் கேட்பதற்கு இன்னும் வரவில்லையே என்றுதான் வேதனை படுகிறேன் என்று சொல்லித் தலைவி புலம்பினாள் என்று ஒரு பாடல் உண்டு.
“நிலன் நாவில் திரிதரூஉம் நீண் மாடக் கூடலார்
புலன் நாவிற் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ”
(கலித்தொகை 35)
இது இலக்கியக் களமாயிற்றே, இனிய இலக்கியங்களைச் சுவைத்துப் பருகும் இனிய தலைவன் இன்னும் வரவில்லையே என்று தோழி வருந்துகின்றாள்.
இது தமிழகத்தில் நடந்த அல்லது சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ் மொழியின் இனிமையும், இதன் இலக்கியச் சுவையையும் கேட்டு இன்புறுவது என்பது தமிழர்களிடையே தொன்றுதொட்டு வரும் ஒரு மரபாகும்.
உட்புறம், வெளிப்புறம் அல்லது அகம், புறம் உடலின் உள்ளே, வெளியே என்பது போல, உலகத்தின் வெளியே ஒரு பொருள் கலந்திருக்க வேண்டும், உலகத்தின் உள்ளேயும் ஒரு பொருள் இருக்க வேண்டும்.
உள்ளேயிருக்கும் பொருள் வெளியே இருக்க முடியாது.
வெளியே இருக்கும் பொருள் உள்ளே இருக்க முடியாது என்று மக்கள் கருதினால், உள்ளும் புறமும் கலந்தது தான் பரம்பொருள் என்பதாகும்.
உணர்வு தருகின்ற அன்னையை நமக்கு ஊக்கம் தரும் தெய்வத்தை மரபாக வந்த தமிழர்கள் மலேசியாவில் மாரியம்மன் திருக்கோயில் அமைத்து இருப்பது வாழ்க்கையின் சிறப்பையும், மரபையும் காட்டுவதாகும்.
அவளால் வந்த ஆக்கம், இவ்வாழ்க்கை என்று சொல்வார்கள்.
அம்பிகையால் வரும் ஆக்கம் தான் சிறந்த வாழ்வை வழங்க முடியும்.
தமிழக அரசின் சின்னமும் திருக்கோயில்தான்.
கோயில் கோபுரமும் அதில் இடம் பெற்றிருக்கிறது.
நாம் சொல்கின்ற சொற்கள், பயன்படுத்தும் கருத்துகள், வழிபடும்போது நம்மிடமிருந்து பிறக்கும் சொற்களெல்லாம் பொருள்படும்படியான சொற்களாகவே இருப்பது தமிழின் அடிப்படையாகும்.
ஒவ்வொரு சொல்லும், பொருளுடையது.
சொல்லினுள் நுழைந்தால் அங்கு அறிவு ஆற்றல் தான் பயன்படும்.
கடவுள் என்ற சொல்லின் பொருளை ஆழ்ந்து நோக்கினால், மண்டபத்தினுள்ளே இருக்க வேண்டும். அல்லது வெளியே இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் வாழ்க்கையில், பிளவு கொள்ளாமல் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறது என்கிற தொடக்கத்தோடு இணைந்துள்ளதுதான் திருக்கோயில்கள்.
உலகத்தின் எந்த மூலையில் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும், அவர்கள் தமிழ் மொழியையும், தமிழின் சுவையையும் என்றும் மறப்பதில்லை.
தமிழின் மீது அவர்களுக்குத் தனிப்பற்று என்றும் உண்டு.
தமிழர்கள் உடலிலும், அவர்களின் உதிரத்திலும் ஊறியதுதான் தமிழ் உணர்வு”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (22)
ஔவையின் புறநானூற்று பதிப்பினால் எய்தப்பெறும் விளக்கங்கள்:
சங்கப்புலவர்கள் / ஊர்களின் பெயர்கள் உய்த்துணர்ந்தும் பாடவேறுபாடு கண்டும், ஒப்புநோக்கியும் திருத்தப்பெற்றுள்ளன.
அவற்றுள் சில வருமாறு:-
தொ. எண். பாடல் எண் உ.வே.சா ஔவை
1 283 அடைநெடுங்கல்வியார் அண்டர் நடுங்கல்லினார்
2 227 ஆடுதுறை மாசாத்தனார் ஆவடுதுறை மாசாத்தனார்
3 298 ஆளியார் ஆவியார்
4 7 கருங்குழலாதனார் கருங்குழலாதனார் / கருங்குளவாதனார்
5 253 குளம்பாதாயனார் குளம்பந் தாயனார்
6 249 தும்பிசொகினனார் தும்பை சொகினனார்
7 291 நெடுங்கழுத்துப் பரணர் நெடுங்களத்துப் பரணர்
8 25 மாற்பித்தியார் மாரிபித்தியார்
9 296 வெள்ளைமாளர் வெள்ளைமாறனார்
10 271 வெறியாடிய காமக்கண்யிர் வெறிபாடிய காமக்காணியார்
பாடல் சிதைவும் நிறைவும்
1) உவேசா பதிப்பில் 340-ஆம் பாடல் பாடியவர் அ………. என உள்ளது.
உவேசா பதிப்பில் 340-ஆம் பாடல் பாடியவர் அ………. என உள்ளது;
ஔவை பதிப்பில் அள்ளூர் நன்முல்லையார் என்று பெயர் முழுமை பெற்றுள்ளது.
2) உவேசா பதிப்பில் 337, 346, 357, 363, 370, 377, 379, 384, 387, 393 செய்யுள்களில் சில சொற்களும் தொடர்களும் சிதைந்துள்ளன; ஔவை பதிப்பில் அவை நிறைவுடன் அமைகின்றன;
(தடித்த எழுத்துக்கள் ஔவை பதிப்பில் உள்ளவை;
அவை உ.வே.சா. பதிப்பில் இல்லை.)
தொ. எண் பாட்டு எண் அடி பாட்டு
1 337 4 ‘வரறோ கமலர பாடிச் சென்றார்’
2 346 6 ‘பிறங்கிலை யினியு ளபால்லென மடுத்தலின்’
3 340 4 யார் மகள் கொள் லென வினவுதி
4 352 11-12 கொடுப்பவுங் கொளாஅ னெடுத்தகையிவளே விரிசினைத் துணர்(த)ந்த நாகிள வேங்கையிற்
5 353 14 செருவா யுழக்கிக் குருதியோட்டிக் /
6 357 5-6 வைத்தன்றே வெறுக்கை வி த்தும் அறவினை யன்றே விழுத்துணை யத்து ணைப்
7 361 9 உருணடைப் பஃறே ரொன்னார்க் கொ ன்றதன்
14 பொறையொ டுமலிந்த கற்பின் மானோக்கின்
18 கலங் கலங் தேறல் பொலங்கலத் தேந்தி
20 நில்லா யுலகத்து நிலையா மைநீ
21 சொல்ல வேண்டாத் தோன்றன் முந்தறிந்த
22 முழுதுணர் கேள்விய னாகதலின் …….
23 ……….. விரகினானே
8 362 4 பொழிலகம் பரந்த பெருஞ்செய் யாடவர்
5 செருப்புகன்றெடுக் கும் விசய வெண்கொடி
9 நான்மறைக் குறி த்ததன் றருளா காமை யின்
15 வீறுசா ன ன்கலம்வீசி நன்றும்
9 370 1 வள்ளியோர்க் காணாதுய்திற னுள்ளி
10 377 23 புகர்நுத லவிர் பொற்கோட்டி யானையர்
26 கொடிமிசை நற்றேர்க் குழுவினர்
11 379 14 நசைத ரவந்தனென் யானே (தா) வசை (யில்)
12 384 5 அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின்
10 கரும்ப னூரன்கி (து)ணை யேம் பெரும
13 மனை ம (யெ) ன்னாவவை பலவும்
18 புரந்தோ னெந்தை யாமென் றொலை வதை
19 அன்னோனை யுடையே மென்ப வினி
13 387 16 பலபிற வாழ்த்தவிருந்தோர் (ரென்கோ) தங்கோன்
17 மருவவி ன் னகரகன் கடைத்தலைத்
32 விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
14 388 4 சிறுகுடி கிழான் பண்ணற் பொருந்தித்
8 நுண்ணூற் றடக்கையி நா மருப்பாக
10 பெயர்க்கும் பண்ணற் (கெட்டீரோமக்கிரென) கேட்டிரவன்
15 390 4 விழவணி வியன்கள மன்ன முற்ற
26 வானறியல வென்பாடுபசி பேர ஒக்கல்
16 391 10 நன ந்தலை மூதூர் வினவலின்
14 காண்கு வந்திசிற் பெரும மாண்டக
15 இருநீர்ப் பெருங்கழி நுழைமீ னருந்தும்
19 இ(டி)ன்றுபால் பெறுகதில் நீயே வளஞ்சா (சொ)ல்
17 393 8 உலக (…கவக) மெல்லாம் ஒருபாற் பட்டென
22 கோடை யாயினுங் கோ(டி) டாவொழுக்கத்துக்குக்
18 395 7 அரி பறையாற் புள்ளோப்பி…..
8 அவிழ் நெல்லின (அ) ரியலா ருந்து கதிர்நனிசெ ன்றகணையிருண் மாலை
19 398 7 பரிசிலர் (விசைய) விரையா விரைசெய் பந்தர்
28 புரையோன் மேனி பூத்(தசல) துகிற் கலிங்கம்
29 உ(மு)ரைசெய வருளினோனே பறையிசை யருவி பாயற் கோவே
20 399 23 வள்பரி கிடந்த வென்றெண்கண் மாக்கிணை
21 400 7 உலகு காக்கு முயர் கொள்கைக்
11 மிகப்பெருஞ் சிறப்பின் வீறு சா னன்கலஞ்
20 திருங்கழி யிழிதரு மார்கலி வங்கம்
23 உறைவின் யாணர் நாடு கிழவோனே
3) உ.வே.சா. பதிப்பில் சிதைந்த பாட்டுக்களின் எண்ணிக்கை – 48
ஔவை பதிப்பில் செப்பம் பெற்று முழுமையான பாட்டுக்கள் – 12
ஆக எஞ்சியுள்ள சிதைந்த பாட்டுக்கள் – 36
4) சிதைந்த அப்பாட்டுக்களில் 1/2/3 சீர்கள் குறைந்துள்ள அடிகள் உள்ளன
சிதைந்த 48 பாட்டுகளில் 1/2/3 சீர் இல்லாத அடிகள் – 117
முழு அடியும் இல்லாதவை – 12
ஆகச் சீர் குறைந்த / இல்லாத அடிகள் – 129
ஔவை பதிப்பில் சீர்கள் செப்பம்பெற்ற அடிகள் – 69
ஆக எஞ்சியுள்ள சீர் குறைந்த அடிகள் – 60
5) 321, 323, 333, 334, 371, 380, 383 ஆகிய பாடல்களின் சிதைவுகள் இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரி ஆகவுள்ளன.
6) உவேசா பதிப்பில் 267, 268ஆம் புறப்பாடல்கள் இல்லைஆக எஞ்சியுள்ள சீர் குறைந்த அடிகள் – 60
5) 321, 323, 333, 334, 371, 380, 383 ஆகிய பாடல்களின் சிதைவுகள் இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரி ஆகவுள்ளன.
6) உவேசா பதிப்பில் 267, 268ஆம் புறப்பாடல்கள் இல்லை; அதுபோலவே ஔவை பதிப்பிலும் இல்லை, அவருக்குப் பின்பு புறநானூற்றை ஆய்வுசெய்த எவருக்கும் அவை கிடைக்கவில்லை.
ஏனென்றால் முன்னை ஆசிரியன்மார்கள் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்தார்கள்; பின்னையோர் அவற்றை அப்படியே படியெடுத்துக் கொண்டார்கள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment